பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
குறிப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் உயர் புள்ளி வழங்கவும் சித்தியடைய வைக்கவும் என மாணவிகளின் கற்பைக் கூலியாகக் கேட்பதாகச் செய்தி அறிந்ததும் எழுதியது.
Translate Tamil to any languages. |
வியாழன், 24 ஜூலை, 2014
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
மிகவும் கொடுமை ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குகாலம் ஒரு நாள் பதில் சொல்லும்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஓவியம் வாங்கப் போய்...
பதிலளிநீக்குகண்கள் போன கதையானது..!
வருத்தமாக இருக்கிறது...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
என்ன ஐயா இங்கு நடக்குது?! கல்விக்குக் கூலி கற்பா? அட்டூழியம்! மிகவும் கொடுமை! மனதை என்னவோ செய்கின்றது! சமீபத்தில் பங்களூரில் ஒரு சிறிய குழந்தை பள்ளியில் பலாத்காரத்திற்கு உட்பட்டதே! கொடுமையிலும் கொடுமை! நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம் எனப்து தெரியவில்லை!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கல்விக்கென ஒரு கடவுள் இருக்கிறாரே ,அவர்தான் இந்த கொடுமையைக் கேட்கணும் !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இந்த மாதிரியான ஆசிரியர்கள்களை ஆண்உறுப்பை வெட்ட சட்டம் கொண்டு வரவேண்டும், அப்பொழுதுதான் அடுத்தவன் செய்யமாட்டான்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.