உலகத் தமிழ் வலைப் பதிவர்களே! எங்கள் அம்மா 28/09/2020 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் ஆற்றுப்படுத்திய எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
மேலும், 28/10/2020 அன்று எங்கள் அம்மாவின் 31ஆம் நாள் நிறைவு (அந்தியேட்டிக் கிரியைகள்) கொரோனா (Covid - 19) காரணமாகச் சுருக்கமாக இடம்பெறுகிறது. இருப்பினும் எங்கள் அம்மா பற்றிய நினைவுப் பதிவுகளை மின்நூலாகத் தொகுத்துள்ளேன். அதனைத் தங்களுடன் பின்வரும் வழிகளில் பகிருகிறேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.
எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.
எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும்
இணைப்பைச் சொடுக்க.
https://app.box.com/s/l7eze79wozqsreozbcbi57fsr1mo4ejq
எனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்)
படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
https://online.fliphtml5.com/insb/gqmb/
எனது மின்நூலை திறன்பேசிச் செயலியாகப்
பதிவிறக்கித் தங்கள் Android, Windows திறன்பேசிகளில் நிறுவிப் பின் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்)
படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://mobincube.mobi/E8H7RJ
(இவ்விணைப்பைத் திறன்பேசியில்
மட்டும் பாவிக்குக)
எனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.