Translate Tamil to any languages.

வியாழன், 30 ஏப்ரல், 2015

உங்கள் பாத்/கவிதைத் திறன் பற்றி எண்ணியதுண்டா?

இலக்கியங்களிலே கதையும் பாட்டும்
இரு கண்களாகத் தானிருக்கும் - அவ்
இரு கண்களாலே தான் - எந்த
மொழியிலுள்ள இலக்கியங்களையும்
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
கதையும் பாட்டும் புனைவதென்பது
கரும்பைப் பிழிந்து
சாறெடுப்பது போலத் தானிருக்கும்!
கதை என்றால் கதைச் சூழல்
கதைச் சூழலில் பங்கெடுக்கும் ஆள்கள்
(கதாபாத்திரங்கள்)
எல்லாம் கட்டியமைத்து
பக்கங்கள் நீண்டாலும் பக்குவமாக
இயல்பு வாழ்வைக் கண்டது போல
விருப்போடு வாசிக்கக் கூடியதாக
எளிமையான நடையில் எழுதவேண்டுமே!
பா/கவிதை, பாட்டு என்றால்
கதையை, உண்மையை, கருத்தை என
குறுக்கி, நறுக்கி நல்லிசை வரிகளில்
என்றும் அசைபோடத் தக்கதாக
சொல்களால் அடுக்கி ஆக்க வேண்டுமே!
கதையைப் படித்தால் எளிமை - ஆனால்
கதை என்றால் எளிதுமல்ல
பா/கவிதை, பாட்டு படித்தால் இனிமை - ஆனால்
பா/கவிதை, பாட்டு என்றால் இறுக்கமுமல்ல
அவரவர் ஆற்றலும் கைவண்ணமுமே!

"பதாகை" என்னும் வலைப்பூவில் "கம்பன் காதலன்" என்ற பதிவை அறிஞர் நாஞ்சில் நாடன் அவர்களின் "கம்பனின் அம்பறாத்தூணி" என்ற நூலிற்கான அறிமுகக் கட்டுரையாக அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கியிருந்தார். அவரது பதிவில் எடுத்துக்காட்டிற்காக கீழ்வரும் பா/கவிதை விளக்கம் இருந்தது.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே
(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

"பதாகை" என்னும் வலைப்பூவில் அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கிய "கம்பன் காதலன்" என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/

பாபுனைய விரும்பும் உறவுகளே!
நாஞ்சில் நாடன் அவர்களின்
பாத்/கவிதைத் திறன் எப்படி என
அறிஞர் செந்தில்நாதன் அவர்கள்
வெளிப்படுத்தியிருப்பதைப் படித்ததும்
உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியது?
ஐந்தடியில் ஒரு தனிப்பாடல் - அதில்
வில், கல், நெல், சொல் என வரும்
குறிலடுத்து வரும் எதுகை உடன்
அடிக்கொரு கதை அளக்கும் அழகு - அதை
வெளிக்கொணர எடுத்த சொல் குறைப்பு
கம்பனின் பாத்திறம் பகிர வந்த
நாஞ்சில் நாடன் பாவிலே பாரும்
பாபுனைய விரும்புவோர் பின்பற்ற வேண்டிய
பாத்/கவிதைத் திறன் பற்றியே - நீ
எண்ணிப்பார் நல்ல பாவலராகலாம்!
பாவலன்/கவிஞன் என்றால்
கரும்பைப் பிழிந்து சாறெடுப்பது போல
கம்பரின் இராமாயணத்தைப் பிழிந்து சாறாக்கி
நாஞ்சில் நாடன் தந்த பாப்போல
பாப்புனைவோர் என்று என்றும் மறவாதீர்!
"கம்பராமாயணத்தில் கம்பன் பயன்படுத்தியது
கிட்டத்தட்ட மூன்று இலட்சம் சொல்களாம்
10368 பாடல்கள், ஒவ்வொன்றும் நான்கடிகள்,
அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால்
ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள்,
சில ஓரசைச் சீர்கள்,
சில ஈரசைச் சீர்கள் - அவற்றில்
திரும்பத் திரும்பப் பயன்படுத்திய
சொல்களைக் கழித்துப் பார்த்தால்
ஒன்றரை இலட்சம் சொல்கள்
இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு" என
அறிஞர் செந்தில்நாதன் சுட்டிக் காட்டியதை
கணக்கில் எடுத்து எண்ணிப் பார்த்தால்
நெடுங்கதையும் பெருங்கதையும் வந்தாலும்
பாவிலே சொல் எண்ணிக்கை குறைந்தாலும்
குறுகிய சொல்கள் எடுத்துச் சொல்லும்
பொருள் விரிப்பும் இசைக்கும் பாவழகும்
பாப்புனைவோர் காட்டும் பாத்திறம் என்பேன்!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

பட்டறிவும் பிழைப்பும்

நேற்று வரை
நான் படிக்கவில்லை,,,
இன்று தானே
நானே பட்டுக்கெட்டேன்...
நீயாவது எண்ணிப்பாரேன்
அப்பன், ஆத்தாள்
உள்ள வேளை - எனக்கு
ஒரு வேளை உணவுக்கே
தட்டுப்பாடே வந்ததில்லை!
பிறவூருக்குச் சென்ற வேளை
வயிறு கடிக்கக் கை கடித்தது...
கை கடிக்க வயிறு கடித்தது...
நிலைத்த வருவாய் இல்லையேல்
கடிக்குக் கடிதானென
நானே தான்...
பட்டேன்... கெட்டேன்... அறிந்தேன்!
நாளை வரும் நாளில்
நன்மை வந்து சேர
பட்டறிவு புகட்டிய பாடங்கள் வழிகாட்ட
வெற்றி வந்து சேரும் வேளை
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையே!
பெற்றோர் சொல்லித் தந்ததை
உற்றார், உறவுகள் வழிகாட்டியதை
ஆசிரியர்கள்
அடித்தும் திட்டியும் தந்த பின்னூட்டலை
என் பிடரிக்குள் ஏற்றி
எதிலும் இறங்கி இருந்தால்
எப்படியோ - நான்
இப்படியும் பட்டுக் கெட்டிருக்க மாட்டேனே!
ஒன்றுமில்லாதவராகி
ஒருவருமில்லாதவராகி
பட்டுக் கெட்டவராகி
பட்டறிவு வழிகாட்டும் வழிச் செல்லும்
என் நிலைமையைப் பாரும் - அதுவே
ஊருக்கு அறிவுரை (உபதேசம்) ஆக
பட்டுக் கெட்டுப் பதப்பட்டு - நானும்
பிழைத்துக் கொண்டிருக்கிறேனே!

வியாழன், 23 ஏப்ரல், 2015

நீங்கள் படைப்பாளிகளா?

படைப்பாளிகளே!
படைப்புகளை எப்படி ஆக்குவீர்?
அதற்கான
சூழ்நிலை எப்படி அமைந்துவிடுகிறது?
படைப்பாளி ஒருவரின்
படைப்பாக்க முயற்சிக்கு ஏற்ற
சூழ்நிலை தான் - அந்த
படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது!

கதையோ கவிதையோ வா வாவென்று
எழுதக் குந்தினால்
ஒழுங்காய் எழுத வராது
கதையோ கவிதையோ
உள்ளத்திலே கருவுற்று எழுத வரும் வேளை
எழுதிப்பார்த்தீர்களா? - அவ்வேளை
எழுதிய படைப்பே - நீங்கள்
எதிர்பார்க்காத அளவுக்கு
சிறப்பாக அமைந்திருப்பதை உணருவீர்களே!

எழுதியதை வெளியீடு செய்வது என்பது
இலகுவான ஒன்றல்ல - அதுவும்
புதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்
எத்தனை சிக்கல்கள்?
அத்தனைக்கும் முகம்கொடுத்து
வெளியிட்ட பின்னர் - அதனை
வாசகர் கையிற்குக் கொண்டுபோய்
சேர்த்த பின்னரே வெற்றி என்பேன்!

இதெல்லாம்
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்தால்
புரிந்துகொள்ள முடியும் என்பேன்!
நீங்கள் படைப்பாளிகளா? - அப்ப
படைப்பாக்கம், வெளியீடு பற்றி
எண்ணிப் பார்த்ததுண்டா? - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_22.html
அறிஞர் கரந்தை ஜெயக்குமாரின்
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்த பின்
என் கருத்தில்
தவறிருந்தால் சொல்லுங்களேன்!

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

தொலைபேசித் தொல்லை

பணி (வேலை) நேரத்தில்
என்னைக் குழப்பியது
என் நடைபேசி வழியே
தொலைபேசி அழைப்பு ஒன்று!
தொலைபேசியும் தொல்லைபேசியுமென
அழைப்பை ஏற்ற வேளை
எதிர்முனையில் இருந்து
"ஐ லவ் யூ" என
இனிமையான பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"கூ இஸ் ஸ்பீக்கிங் தெஆர்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"நீங்கள் யார்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"மம ஒயாவ ஆதரே கரனவா" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"ஒயா கவுத?" என்றதும்
அழைப்புத் தூண்டிக்கப்பட்டு விட்டதே!
இலங்கைவாசி என்பதால்  - இந்த
மும்மொழியால தொல்லை
இந்தியத் தமிழகவாசி என்றால்
பதினெட்டு மொழியால - என்
காதைக் குடைந்திருப்பாளே என
என் பணியைத் (வேலையைத்) தொடர்ந்தேன்!
அழைப்பை முறிக்காமல்
தொடர்ந்திருந்தால் - என்
இல்லாள் (மனைவி) இடம் போய் - "உன்
கணவனைக் காதலிக்க இணங்குவீரா?" என்று
ஒப்புதல் (அனுமதி) பெற்றுவரச் சொல்லியிருப்பேன்!
ஓ! நண்பர்களே!
இப்படி எவராச்சும் கேட்டால்
"ஆற்றில் இறங்கினாலும்
ஆழமறிந்தே இறங்குவேன் - எந்த
ஆளோடும் நண்பரானாலும்
ஆளையறிந்தே பழகுவேன் - அந்த
மாதிரியான நான் - உன்னை
முழுமையாய் அறியாமலே
பதிலளிக்க முடியாதே!" என்பதே
உங்கள் பதிலாக இருகட்டுமே!
ஆணாகிய எனக்கு
பெண்ணொருத்தி - இப்படி
தொலைபேசித் தொல்லை
தந்தது போல
பெண்ணாகிய உங்களுக்கு
ஆணொருவன் - இப்படி
தொலைபேசித் தொல்லை தர
வாய்ப்புக் கிட்டினால்
உறைப்பான பதிலளிக்க
காத்திருங்கள் - ஏனென்று
எண்ணிப்பார்த்தீர்களா? - இந்த
தொலைபேசித் தொல்லை தருவோர் - இன்றைய
காளை, வாலை இரு பாலாரிலும்
இருக்கக்கூடும் என்பேன்!

புதன், 8 ஏப்ரல், 2015

பழிக்குப் பழி

பலர் முன்னே
ஒருவரை மற்றொருவர்
பிறர் மதிக்காமல் செய்தார்...

நேரில் கண்ட பலரும்
துயரப்பட்டுச் செல்ல
மதிப்பிழந்தவர் மட்டும்
சிரித்துக்கொண்டே சென்றார்...

பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
மதிப்பிழந்தவரைப் பார்த்து
"பார்வையாளர் துயரப்பட
பாதிப்புற்றவர் சிரிக்கலாமோ?" என்றாரே!

தங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது
கழுவினால் போய்விடுமே...
தங்கம் கறுப்பது இல்லையே! - அது போல
எனக்குள்ள மதிப்பை - எவரும்
இழக்கச் செய்தாலென்ன
இல்லாமல் செய்தாலென்ன
எள்ளளவேனும் குறைய
வாய்ப்பில்லைக் காணும் என்றார்
பதிலுக்குப் பாதிப்புற்றவரும்!

என்னை மதிக்காமல் செய்தாரே - அவருக்கே
மதிப்பவர் எவரும் இல்லையே - அங்கே
மதிப்பில்லைக் காணும் அவருக்கே - அதுவே
பழிக்குப் பழி என்றே
பாதிப்புற்றவரும் பகிர்ந்தாரே!

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்

என் இனிய பதிவுலக உறவுகளே!

எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகளை வெளியிட யாழ் மென்பொருள் தீர்வுகள் என்றும் இறங்கி நானே முழுமையான பணியை வெளிக்கொணர முடியாத வேளை அறிஞர் நேசனின் வேண்டுதலை ஏற்று அவரது மின்நூலை வெளியிட வேண்டியதாயிற்று. நேரம் கிடைக்கின்ற வேளை இவ்வாறு பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் போது அவர்கள் சொல்ல வரும் செய்தி, அவர்களது எழுத்தாளுமை, அவர்களது மக்களாயப் (சமூகப்) பொறுப்புணர்வு, அவர்களது மக்களாய (சமூக), நாட்டு முன்னேற்ற எண்ணங்கள் எனப் பலவற்றை நான் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அறிஞர் நேசனின் மின்நூலை வெளியிடும் போதும் இவற்றையே பொருட்படுத்தினேன்.

அறிஞர் நேசனை நேரில் கண்டதுமில்லை. ஸ்கைப், வைபர் எதிலும் முகம் பார்த்துக் கதைத்ததுமில்லை. அவரது எழுத்தை நம்பியே இம்மின்நூலை வெளியிடுகிறேன். அவரைப் பற்றியோ அவரது மின்நூலைப் பற்றியோ நானே அடுக்கிச் சென்றால் அழகிருக்காது. அவரது மின்நூலைப் படித்தால் அழகாக அத்தனையும் நீங்களே அறிய வாய்ப்புண்டு.

யாழ்பாவாணன் வெளியீட்டகமூடாகத் தனிமரம் வலைப்பூ நடாத்தும் அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூலை வெளியிட்டு, உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன். அதனைப் படித்த பின் அறிஞர் நேசனை ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எனது வெளியீட்டு முயற்சி பற்றிய தங்கள் எண்ணங்களையும் பகிர முன்வாருங்கள்.

இதோ அவரது மின்நூலைப் பதிவிறக்கத் தேவையான இணைப்பு
http://www.thanimaram.org/2015/04/blog-post_2.html

எனது வெளியீட்டு முயற்சியோடு அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூல் வெளியிடு பற்றியும் அறிஞர்களாகிய நீங்கள் உங்கள் வலை ஊடகங்களில் உங்களது திறனாய்வை (விமர்சனத்தை) வெளியிடலாம். தவறுகள் ஏதுமிருப்பின் தப்பாமல் சுட்டுங்கள். கிட்டவுள்ளோர் என் தலைக்குக் கல்லெறியலாம். தூரவுள்ளோர் என் தலைக்குச் சொல்லெறியலாம். யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளிக்கொணரும் வெளியீடுகள் வாசகர் பக்கம் செல்லவோ செல்லாமல் இருக்கவோ உங்களது திறனாய்வு (விமர்சனம்) உதவும் என நம்புகிறேன்.