Translate Tamil to any languages.

ஞாயிறு, 27 மே, 2018

சங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா!


நாங்கள் சதுர்த்தி நாளில் நோன்பும் இருப்போம்
சங்கடங்கள் தீருமெனக் கணபதியை வேண்டுவோம்
                                  (நாங்கள்)

தலையில குட்டித் தோப்புக்கரணம் போடுவோம்
தலையில கொஞ்சம் அறிவைக்கூடப் பெருக்குவோம்
                                  (தலையில)

உலகத்தில் முதன்முதல் எழுதிய ஆனைமுகனே
வியாசருக்குப் பாரதக்கதை எழுதிய ஆனைமுகனே
தந்தமுடைத்து எழுதுகோலாக்கி எழுதிய ஆனைமுகனே
எந்தன் எண்ணங்களை எழுதவுதவும் ஆனைமுகனே!
எங்கள் பிள்ளைகள் படிக்கவுதவும் ஆனைமுகனே!!
                                  (நாங்கள்)
                                 (தலையில)

காவேரியை நீராகக் கமண்டலத்தில் முட்ட
அடைத்து வைத்திருந்த அகத்தியருக்குக் கிட்ட
காகம் உருவில் வந்த விக்கினேசன் தட்ட
கமண்டல நீரோ ஆறாகப் பெருக விட்ட
விக்கினேசன் செயலறிந்து வேண்டி நிற்கிறோம்
அகத்தியரைப் போலவே தலையிலே குட்டி
நம்வாழ்வு மேம்பட வேண்டி நிற்கிறோம்!
                                  (நாங்கள்)
                                 (தலையில)

கஜமுகாசுரனுக்கு ஆயிரத்து எட்டு முறையாம்
தோப்புக்கரணம் போட்ட தேவர்கள் தானாம்
பிள்ளையாரை வேண்டிக் கொண்ட பயனாம்
பிள்ளையாரே கஜமுகாசுரனை அழித்த செயலாம்
பிள்ளையாருக்கு மும்முறை தோப்புக்கரணம் தானாம்
தேவர்கள் போட்டதை நாமும் போடுகிறோம்
பிள்ளையாரே நமக்கு நல்லறிவைத் தாருமையா!
                                  (நாங்கள்)
                                 (தலையில)

பிள்ளையார் முன்னே பிரம்மா குறுகிநிற்கவே
பார்த்திருந்த சந்திரன் கேவலமாகச் சிரிக்கவே
பார்த்த பிள்ளையாருக்குக் கோபம் வந்திடவே
சந்திரனைத் தேய்ந்துபோக வைத்ததும் பிள்ளையாரே!
இருண்ட சந்திரனும் பிள்ளையாரைப் பணியவே
பணிந்த சந்திரனும் வளரும்நிலை பெற்றானே!
தேய்பிறை என்பதும் வளர்பிறை என்பதும்
எங்கள் பிள்ளையார் வகுத்த செயலென்றே
சதுர்த்தியில் பணிவோம் சங்கடங்கள் தீருமென்றே!
                                  (நாங்கள்)
                                 (தலையில)

அறிஞர்களே! எனது குலதெய்வமாகிய என்னூர் விநாயகரை எண்ணி எழுதிய வரிகள் இவை. இதில் வரலாற்று வரிகள் இணைத்துள்ளேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருத்தங்கள் செய்த பின் யூடியூப் இல் வெளியிட உதவும்.

புதன், 23 மே, 2018

பணம் உறவுக்கு அளவுகோலா?


அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றதால்
எனக்கும் இல்லாளுக்கும்
மணமுறிவில்லைப் பாருங்கோ!
இந்தக் காலத்தில அன்புக்கும் கூட
பணம் தான் அளவுகோலாம்!
பணம் உண்டெனின்
அன்பைப் பொழிவாங்களாம்!
பணம் இல்லையெனின்
ஆளையே மாற்றிப் போடுவாங்களாம்!

பணத்தை அளவுகோலாகக் கொண்டு
அன்பு, நட்பு, காதல், திருமணம்
எல்லாம் இடம்பெற்ற பின்னே...
பணம் இல்லாத வேளை பார்த்து
அன்பு முறிவு, நட்பு முறிவு, காதல் முறிவு,
ஈற்றில் திருமண முறிவும் அமையுமாமே!

பணம் உறவுக்கு அளவுகோலா?
இல்லையே! - அது
உறவைப் பிரிக்கும் ஊடகமே!
அன்பு, நட்பு, காதல், திருமணம் - எதனையும்
பணத்தை வைத்து அரங்கேற்றாதீர்கள்! - பணம்
கைக்குக் கைமாறும் குணம் கொண்டது - அதேபோல
ஆள்களும் ஆளை ஆள் மாற்றுவாங்களே!




இந்தக் காதல் புளிக்கும்!



பணத் தாளிலும் சரி
வெள்ளைத் தாளிலும் சரி
நீங்கள்
கிறுக்கிப் பரிமாறும் எண்ணங்களால்
காதல் மலராது பாரும்!

உள்ளத்தில் கிறுக்கினால் தான்
வெள்ளம் போல காதல் அலை
பொங்கி எழுமாம்! - அதற்கு
அன்பான சொல்களால் தான்
அடுத்தவர் உள்ளத்தில் கிறுக்கலாமாம்!

பட்டென்று கோபம் கொள்வோருக்கும்
சட்டென்று சுடுசொல் பேசுவோருக்கும்
வெட்டென்று விலகிச் செல்லுமாம்
காதல் - அது அவர்களுக்கு
எட்டாக்கனியாகப் புளிக்குமாமே!

வியாழன், 17 மே, 2018

மாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி

வேண்டுவோர் எவருக்கும் வெற்றிகள் கிடைக்க உதவும்
மாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி!
(வேண்டு)

ஆண்டு முழுவதும் அடியாரின் குறைகள் தீர்க்கும்
மாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி!
(ஆண்டு)

சிவனுக்கும் உமைக்கும் முதற்பிள்ளை ஆனவரே
தந்தையும் தாயும் உலகமென்று உரைத்தவரே
இன்று போய் நாளை வாவெனச் சனியை விரட்டியவரே
என்றும் முன்நின்று எங்கள் வினைகளை அறுப்பவரே
எங்கள் செயல்கள் யாவும் வென்றிட உதவுபவரே
(வேண்டு)
(ஆண்டு)

எள்ளுப் போல நம்பு விநாயகர் வருவாரே
தொல்லைகள்  தொடராது தும்பிக்கையான் துரத்துவாரே
பிள்ளைப்  பேற்றை வேண்டு பிள்ளையார் தருவாரே
அம்மை, அப்பன் நீடூழிவாழக் கணபதியார் காத்திடுவாரே
எண்ணியது இனிதே இடம்பெற ஆனைமுகன்  இரங்குவாரே
(வேண்டு)
(ஆண்டு)

நம்பி படைத்த அமுதுண்ட பொல்லாப் பிள்ளையாரே
நம்பி நாடி வந்தோம் நல்லன தருவாயே
ஔவையைக் கையிலையில் இருத்திய தும்பிக்கையாரே
நம்பிக்கையோடு நாடினோம் நலமோடு வாழவைப்பீரே
நரகா சூரனை அழித்த  ஐங்கரனே! ஐயா!
தீவினைகளை அழித்து நல்வழி காட்டுவீரே!
(வேண்டு)
(ஆண்டு)

அறிஞர்களே! எனது குலதெய்வமாகிய என்னூர் விநாயகரை எண்ணி எழுதிய வரிகள் இவை. இதில் வரலாற்று வரிகள் இணைத்துள்ளேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருத்தங்கள் செய்த பின் யூடியூப் இல் வெளியிட உதவும்.

சனி, 12 மே, 2018

சும்மா சொல்லக் கூடாது!


"நல்ல மனைவியைத் தெரிவு செய்வதில் தவறியவர்
கடைசியில் சாவையே தெரிவு செய்ய முனைகின்றார்" என
பாவரசர் கண்ணதாசன் சொன்ன நினைவு!
சும்மா சொல்லக் கூடாது - சற்று
நம்மாளுங்க மூளைக்கு வேலை கொடுப்பாங்களா?
"நல்ல கணவனைத் தெரிவு செய்வதில் தவறியவர்
கடைசியில் தாலிக்கொடியைத் தூக்குக்கொடி ஆக்குகின்றார்" என
நல்ல மனைவிமாரின் சாவு பறைசாற்றுகிறதே!
சும்மா சொல்லக் கூடாது - எப்பவும்
நாலு ஆளை நல்லா கேட்டறிந்து (விசாரித்து)
நல்ல ஆளைத் தெரிவு செய்வதில் வெல்லுங்கள்!
அது தான் பாருங்கோ - நம்மாளுங்க
முடிவு எடுப்பதில் தவறு செய்வதனாலேயே
தம் வாழ்வுக்கு முடிவு தேடுவது ஆச்சோ!

முடிவு எடுக்கும் போது
அக்கம், பக்கம், முன், பின்,
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்,
நேர் எண்ணம், எதிர் எண்ணம்,
நேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம் என
எல்லா வழியிலும் கிட்டும் விளைவுகளை
நல்லா எண்ணிப் பார்த்தே முடிவு எடுக்க வேணும்!
முடிவு எடுக்கும் போது தவறிவிட்டால்
முன்னேறும் போது இடறி விழலாம்...
சும்மா சொல்லக் கூடாது - நாம்
எடுக்கின்ற முடிவிலேயே நல்வாழ்வும் இருக்கிறதே!

முடிவு எடுத்தலை இலகுவாக்கக் கீழ்வரும் பதிவையும் படிக்கலாம்.

சனி, 5 மே, 2018

இறைவனின் ஒறுப்புத் தானோ!


நீரிழிவுக்காரனும்
நெடும் தூரப் பயணியும்
கட்டுப்படுத்த இயலாத ஒன்று
சிறுநீர் கழித்தலையே!
கட்டுப்படுத்த இயலாத சிறுநீரை
கண்ட இடத்திலும் கழிப்பதாலே
மாற்றாருக்கு நோய்கள் உண்டாவதை
கட்டுப்படுத்த இயலாமல் போகுமே!

நானோ நீரிழிவு நோய்க்காரன்!
நெடும் தூரப் (கொழும்பு-யாழ்) பயணத்தில்
இடை வழியில் (குருநாகலை நெருங்க) மாட்டினேன்...
நானும் சிறுநீர் வெளியேற்ற
பேரூந்தை நிறுத்தி இறங்க முன்னே
பேரூந்திற்கு உள்ளேயே கீழங்கி
ஈரமாகியதைக் கண்டுகொண்டேன்!
பேரூந்தில் இருந்து இறங்கிய பின்னே
கீழங்கியைப் பிழிந்து போட்டு
நறுமணத் (சென்ற்) தண்ணீரை அடித்து
சிறுநீர் மணக்காதவாறு சரிப்படுத்தி - அடுத்த
பேரூந்தில் ஏறி ஊருக்கு (யாழ்) வந்து சேர்ந்தேன்!

சிறுநீர் கழித்தலை
கட்டுப்படுத்த இயலாமல் சிலரும்
கண்ட இடத்தில் கழிக்கும் சிலரும்
இறைவனின் ஒறுப்புக்கு உட்பட்டவரோ!
இப்படியான வேளை
துன்பப்படும் உறவுகளைப் போல
நான் பட்ட துன்பம் அதிகம்!

துன்பப்படுவது நான் மட்டுமா?
இறைவனின் ஒறுப்புக்கு உட்பட்டு
நோய்களை வேண்டிக்கொண்ட
எல்லோரும் தானே! - அதற்காக
மாற்றாருக்கு தொற்று ஏற்படுத்தும்
செயல்களில் இறங்கினால் பாரும்
தொற்றிய நோய்கள் - ஒருபோதும்
எம்முடலை வீட்டு நீங்காதே!

*இது கவிதையல்ல; ஒரு செய்தி!
பொது இடங்களில் அழுக்கு ஆக்காதீர்!