நாட்டு நிலைமை (இலங்கையில் அமைதியின்மை) காரணமாக 1987 இல் சில மாதங்கள் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிதாயிற்று. அவ்வேளை மூ.மேத்தாவின் 'கண்ணீர் பூக்கள்' போன்ற நூல்களையும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியான பதிவுகளையும் ஏனைய இலக்கிய நூல்களையும் படித்துப் பொழுதுபோக்கினேன். அவ்வாறு படித்துப் பொழுதுபோக்கின வேளை நானும் அவற்றில் உள்ளது போல எழுதிப் பழகினேன். பின்னர் பத்திரிகைக்கு அனுப்ப, அதில் சில வெளியாகின.
அதன் பின்னரே எனக்கும் எழுதும் ஆற்றல் இருக்கென எனது எண்ணங்களை அடுத்தவருடன் பகிரலாமென நானும் எழுதுகோலை ஏந்தினேன். ஒவ்வொருவரும் தமது எண்ணங்களை அடுத்தவருடன் பகிரும் போது ஒரு நிறைவை அடைகின்றனர். அவ்வாறே நானும் எழுத எழுத எனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி அல்லது நிறைவு கண்டேன். அதன் விளைவே ஏந்திய எழுதுகோலை நானும் இன்றுவரை பற்றித் தொடருகிறேன்.
இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.
Translate Tamil to any languages. |
என் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!