Translate Tamil to any languages.

என் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்

என்னைப் பற்றி என் எழுத்துகளே உங்களுக்கு என்னை மொழிபெயர்த்து விடுகின்றன. என் எண்ணத்தை எழுதிவிட இறங்கிவிட்டால் எனக்கு எழுதுகோலும் தாளும் சிலவேளை முரண்டு பிடிக்கும்; சிலவேளை ஒத்துழைக்கும். அதற்காக எழுதுகோலிலும் தாளிலும் குறை கூற முடியாதே; தவறு என் பக்கத்தில் தான் இருக்கும். எதை எழுத வேண்டுமென்பதை ஏற்கனவே எண்ணத்தில் இருத்தினால், அதை எப்படி எழுத வேண்டுமென அடிக்கடி எண்ணிப் பார்க்க முடியும். அப்படி எழுதக்கூடிய நம்பிக்கை எனக்கு வந்தால் எழுதுகோலும் தாளும் முரண்டு பிடிக்க இடமிருக்காது.

சும்மா, எதோ தலைப்பைப் போட்டு வைத்துக்கொண்டு எழுதக் குந்தினால் எழுதுகோலும் தாளும் எப்படி எமக்கு ஒத்துழைக்கும். தலைப்புக்கு ஏற்றாற் போல எதை எதை எந்த ஒழுங்கில் எழுத வேண்டுமென உள்ளத்தில் எண்ணமிட்டிருந்தால் எழுதுகோலும் தாளும் எனது கட்டுப்பாட்டிலேயே இயங்கும்.

இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!