கரப்பான் பூச்சிக்குக்
குருதி இல்லையா?
நம்மாளுங்க
கரப்பான் பூச்சிக்கு
செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க…
விலங்கியல் பாடம் படிப்பிக்கின்ற
ஆசிரியரிடமும் - பிள்ளைகள்
இப்படித்தான் கேட்டாங்க…
கரப்பான் பூச்சிக்கு
செந்நீர் (குருதி) இருக்கு என்றார்
விலங்கியல் ஆசிரியரும்…
இல்லை! இல்லை! என
பிள்ளைகள் கூப்பாடு போட...
கரப்பானின் செந்நீருக்கு (குருதிக்கு)
நிறமில்லை காணும் என்று
ஆசிரியரும் விளக்கமளிக்கவே
வகுப்பில் பிள்ளைகளும் அடங்கினரே!
தேவை
மரம் வளர நீர் தேவை
நீரைத் தேட வேரை நீட்டுவது
மரத்தின் தேவை!
பறக்கும் பறவைக்கு நீர் தேவை
நீரைத் தேட நீர்த்தேக்கத்தை நாடுவது
பறவைகளின் தேவை!
விலங்குகளின் பசிக்கு உணவு தேவை
உணவைத் தேடி வேட்டைக்குப் போவது
விலங்குகளின் தேவை!
தன் (சுய) நலம் விரும்புவது நம்மாளுங்க தேவை
பட்டென, வெட்டென உறவுகளை முறித்த பின்
தேவைக்கு ஆள் தேடுவது
நம்மாளுங்க வேலையாகிப் போச்சு!
ஓலைக் குடிசையில்
ஒருவள் அழுகிறான்!
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
கடைக்குட்டியாகக் கன்னி ஒருவள்
அண்ணன்மார் ஆளுக்கு ஒருவளோடு
ஓட்டம் பிடித்தமையால் வாடுகிறாள்
ஓலைக் குடிசையில் அழுதவாறு ஒருவள்!
ஆப்பனும் ஆத்தாளும் தேடினாலும் கூட
கொடுப்பனவு (சீதனம்) வழங்க வழியின்றி
ஏழைக் கன்னியின் கழுத்தில் ஏற
தங்கத் தாலிக் கொடிக்கும் அச்சமோ?
கன்னித் துணை நாடும் ஆணுக்கோ
கொடுப்பனவு (சீதனம்) தான் நோக்கமோ
என்னையும் கன்னியாகவே வாழத்தான் - அந்த
ஆண்டவன் படைத்தான் என்றால்
சாகும் வரை வாழ்வதே என் பணி என
ஓலைக்குடிசையில் ஒருவள் அழுகிறாள்.
உன்னை நீ அறி!
சோக்கிரட்டீஸ் என்ற
கோட்பாட்டு (தத்துவ) அறிஞர்
“உன்னை நீ அறி” என்று
உறைப்பாகச் சொல்லி இருந்தார்.
விறைத்த மண்டைகள் சிலர்
என்னை விரட்டி விரட்டி
“உன்னை நீ அறி” என்று
அடிக்கடி நினைவூட்டினர்!
நான்
சொல்லும் முன்னும்
செயலுக்கு முன்னும்
வெளியீட்டுக்கு முன்னும்
பின்விளைவு என்னவாயிருக்கும் என்று
என்னை நானே கேட்பதுண்டு!
இதைத் தானே
“உன்னை நீ அறி” என்று
சோக்கிரட்டீஸ் சொல்லி வைச்சாரே!
இனிய வலையுலக உறவுகளே! எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.
நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஓலைக் குடிசையில் ஒருவள் அழுகிறான்!
பதிலளிநீக்குஅப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
கடைக்குட்டியாகக் கன்னி ஒருவள்
அண்ணன்மார் ஆளுக்கு ஒருவளோடு
ஓட்டம் பிடித்தமையால் வாடுகிறாள்
ஓலைக் குடிசையில் அழுதவாறு ஒருவள்!
ஆப்பனும் ஆத்தாளும் தேடினாலும் கூட
கொடுப்பனவு (சீதனம்) வழங்க வழியின்றி
ஏழைக் கன்னியின் கழுத்தில் ஏற
தங்கத் தாலிக் கொடிக்கும் அச்சமோ?
கன்னித் துணை நாடும் ஆணுக்கோ
கொடுப்பனவு (சீதனம்) தான் நோக்கமோ
என்னையும் கன்னியாகவே வாழத்தான் - அந்த
ஆண்டவன் படைத்தான் என்றால்
சாகும் வரை வாழ்வதே என் பணி என
ஓலைக்குடிசையில் ஒருவள் அழுகிறாள்.
மனதை தொட்ட வரிகள் நண்பரே...
அருமையான முயற்சி. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
எல்லா நிலையிலுமான குறுங்கவிதைகள் அருமை நண்பரே தங்களது முயற்சி திருவினையாக்கட்டும் வாழ்த்துகள் - கில்லர்ஜி
பதிலளிநீக்குஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
ரசித்தேன்
பதிலளிநீக்குஇனிய கவிதைகள்!
பதிலளிநீக்குமனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
குறுங்கவிதைகள் நன்றாக உள்ளன நண்பரே! தங்களது முயற்சி இந்த புத்தாண்டில் வெற்றி பெறவும், புத்தாண்டிற்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுயற்சி சிறக்க வாழ்த்துக்கள்ஐயா
பதிலளிநீக்குஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅற்புதமான கவிதைகள் நண்பரே.உங்கள் முயற்ச்சி வெற்றிபெற் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகவிதைகளை ரசித்தேன். தங்களின் முயற்சி சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
சிறப்பான புதுமைப் பாக்கள்
பதிலளிநீக்குசித்திரையாள் வருகை
நீக்குஇத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
இனிய கவிதை வரிகள் நன்றி. மேலும் தங்கள் தளத்தில் உள்ளது போல கருத்து பெட்டியினை வைத்துள்ளேன். கருத்தினை வழங்கினால் சரிபார்க்க உபயோகமாக இருக்கும் தோழரே
பதிலளிநீக்கு
நீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
தங்களின் மின் நூல் பணி தொடர வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்கு
நீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
அருமையான கவிதைகள் சார். தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குசித்திரையாள் வருகை
நீக்குஇத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்