Translate Tamil to any languages.
1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

Zoom ஆல தான் எனக்குச் சாவு!


17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.

Zoom ஆல தான் எனக்குச் சாவு!


இப்பவெல்லாம்

இணையக் கலந்துரையாடல் தான்...

Teams என்கிறாங்க... Meet என்கிறாங்க...

அடிக்கடி Zoom என்கிறாங்க...

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கோ

(Data குடிப்பதால்) வருவாய் என்கிறாங்க...

எவரும் எம்மைச் சிந்தித்தார்களோ

எங்களுக்குத் தெரிவதில்லை...

(Covid -19) கொரோனா வந்தபின்

வீட்டுக்காவல் போல முடக்கிவிட

இணையக் கலந்துரையாடல் தான்

ஆற்றுப்படுத்த உதவினாலும் கூட

Zoom ஆல தான் உனக்குச் சாவு என்று

என் பெண்டாட்டி திட்டித் தீர்ப்பதை

கடவுள் தான் கண்டிருப்பார்...

உண்ணாண உண்மை தான்!

மூன்று மணிக்குக் கவிஞர் சந்திப்பு

நான்கு மணிக்குப் பாடகர் சந்திப்பு

ஐந்து மணிக்கு வெளியீட்டாளர் சந்திப்பு

ஆறு மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு

ஏழு மணிக்கு வாசகர் சந்திப்பு

இப்படியே நீண்டு செல்கிறது...

 நாளுக்கு நாள்

ஓய்வின்றி ஒன்றுக்கு மேற்பட்ட

இணையக் கலந்துரையாடல் தான்...

இதைப் பார்க்கிற பெண்டாட்டி

தன்னைக் கட்டியதை விட

Zoom ஐக் கட்டியிருக்கலாமே என்கிறாள்...

எல்லோரும் தேவை தான்

எல்லாமும் தேவை தான்

Zoom இல தலையைக் காட்டாட்டி

உள்ளத்தில அமைதியில்லை என்போர்க்கு

Zoom ஆல தான் சாவு போல...

எனக்கு இப்ப Zoom ஆஅ

என் பெண்டாட்டியா தேவை?

எனக்கே தலையைச் சுற்றுகிறதே!

யாழ்பாவாணன் ஏன் இப்படி எழுதினார் என்று பலரும் கேட்கலாம். இணையக் கலந்துரையாடல் எனப் பலர் படையெடுக்கின்றனர். அக்கலந்துரையாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டால் நன்மையுண்டு. அதேவேளை குடும்பம் பற்றியும் சிந்திக்க வேண்டுமே! அதனை எண்ணிப் பார்த்தேன்; அதனால் எழுதியதை அப்படியே பகிர்ந்தேன்.


செவ்வாய், 27 ஜூன், 2017

உறவுகளை விலைபேசும் தொலைபேசிகள்!



எனது இல்லாளின் இளைய தங்கையின் இனிய மகள் அம்றிதா சுவிஸில் நிகழ்ந்த எழுச்சிக் குயில் 2017 நிகழ்வில் பாடி 'எழுச்சிக் குயில் 2017 (Title Winner)' என வெற்றி பெற வைத்த பாடலைத் தங்களுடன் பகிருகிறேன்.


தொலைபேசி உறவுகள் வந்தன...
குடும்ப உறவுகள் முறிந்தன...
காதலியைக் கைவிடலாம்
கைபேசியை கைவிடலாமோ?
இல்லாளை விட்டுப் பிரியலாம்
நடைபேசியை விட்டுப் பிரியலாமோ?
பிள்ளையைப் போட்டு உடைக்கலாம்
திறன்பேசியைப் போட்டு உடைக்கலாமோ?
என் இனிய உறவுகளே! - இன்று
எம்மவருக்கு எதில் கவனம் வேண்டும்
நல்லுறவைப் பேண நடைபேசி என்றால்
நல்லுறவைப் பேணாத நடைபேசி எதற்கு?
விடை காண முயன்றீரா? - இல்லையெனின்
கிடைத்த வாழ்வைத் தொலைப்பீரா?
---------------------

இந்தளவு நாளாக அவனைக் காதலிச்ச இவள், இப்ப ஏன் அவனைக் காதலிக்க மாட்டேன் என்கிறாள்?

அன்றொரு நாள் ஏழு மணி இரவில, நடைபேசியைத் தேடி அவன் ஓடி மறைய இவள் துயரப்பட்டாளாம்.

ஏன் துயரப்பட்டவளாம்? ஏதாச்சும் ஆச்சோ?

நடைபேசியைத் தேடி ஓடுறவனைக் காதலிச்சால், தன் நிலை என்னவாகுமென அஞ்சுகிறாள்...
---------------------

இஞ்சாருங்கோ... கொஞ்சம் இஞ்ச வாங்கோவேன்...

என்னது... கொஞ்ச வாவோ...

இல்லையங்கோ... சுந்தரனும் சுந்தரியும் பிரிஞ்சிட்டினமாம்...

என்னவாம் நடந்தது?

விழுந்த கைபேசியை எடுக்கிறேனென்று கையிலிருந்த கைக்குழந்தையை விழுத்திப் போட்டானாம் (சுந்தரன்)
---------------------

என்னங்க அவரு பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டிட்டு குதிக்கால் தலையில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறாரு!

அதுவா! அவரது திறன்பேசியை (Apple Phone S8+) அங்கே கைநழுவ விட்டிட்டாராம். அதையெடுக்க ஓட்டம் பிடிக்கிறாராம்.
---------------------

விரும்பிய எல்லாம் அடையவே
கிடைத்த வாழ்க்கை இருக்கிறது!
நாம் விரும்பியதை அடைய - எமக்கு
கிடைத்த வாழ்வில் வசதியுண்டோ?
எண்ணிப் பாருங்க உறவுகளே!
உறவுகளே உள்ளம் கெட்டு
பட்டு நொந்து வீழ்வதால்
வாழ்வில் முன்னேற இடமுண்டோ?
வீரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள் - அது
வரவுகேற்ப செலவு செய் என்பதற்கே!
நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம்
அடித்துச் சென்றதாக இருக்கக் கூடாதாம் - அது
உண்மையான உறவுகளை விட்டிட்டு
புதிய உறவுகளை நாடாதே என்றணர்த்தவே!
கல்வி, காதல், திருமணம், குடும்பம், வருவாய்,
செலவு உடன் அன்பும் உறவும் ஒழுங்காக
பேணத் தவறினால் வாழ்வு என்னவாகும்?
நடைபேசியால் சீரழியும் குடுப்ப வாழ்வை
எண்ணிப் பார்த்துச் சீராக்கினால் மகிழ்ச்சியே!

வெள்ளி, 13 மே, 2016

இரண்டடக்கேல்


விருப்பங்களை (ஆசைகளை) அடக்க முடியாமல் - நம்மாளுங்க 
பெரும் விருப்பங்களை (பேராசைகளை) வளர்த்து - அதனை
அடைய முயன்றே கடைசியில் காண்பதோ - அதன்
அறுவடையாக (பின் விளைவாக) நமக்குக் கிட்டுவதோ
சோர்வும் (நட்டமும்) துயரமும் (துன்பமும்) தான் - அதனை
இரண்டடக்கேல் என நினைவூட்டுவதா?

நம்மாளுங்க - தங்கள்
அன்பு உணர்வை வளர்க்கலாம் - ஆனால்
பாலியல் (Sex) உணர்வை அடக்க வேண்டுமே - அதை
அடக்கு என்றதும் கோபம் வருமே - அதையும்
சேர்த்துத் தான் இரண்டை அடக்கு என்றாரோ
பாவரசர் கண்ணதாசன் அவர்கள்!

இரண்டடக்கேல் என்றல்லவா
பாவரசர் கண்ணதாசன் சொன்னார் - அப்ப
இரண்டை அடக்காதே என்றல்லவா
பொருள்கொள்ள வேண்டியிருக்கு - அப்ப
மலம் கழிப்பதையும் சிறுநீர் (சலம்) அடிப்பதையும்
இரண்டடக்கேல் என்றாரோ!

உடலுக்குள்ளே சிறுநீரகம் - உண்மையில்
உண்டதை, குடித்ததை வடிகட்டி
கழிவுகளைக் கழித்து விடுவதால் தான்
மலமும் சிறுநீரும் (சலமும்) தேங்கும் - அந்த
இரண்டையும் அடக்காமல் விட்டால்
நோய்கள் கிட்ட நெருங்காமல் போகுமே!

குறிப்பு: உடற் கழிவுகளான மலமும் சிறுநீரும் (சலமும்) வெளியேறத் தோன்றும் நேரத்தில் அடக்கவும் கூடாது. மலமும் சிறுநீரும் (சலமும்) வெளியேற வேண்டி வருமே என உண்ணாமல், குடிக்காமல் இருக்கவும் கூடாது. 

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பாலியல் வலைத்தளங்களால் மணமுறிவு

இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாலியல் வலைத்தளங்கள் நடைபேசி வரை நுழைந்துவிட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், மணமாகாத இளசுகள், மணமாகிக் குடும்பம் நடத்துவோர் என எல்லாப் பிரிவினரும் பாலியல் வலைத்தளங்களைப் பார்வையிட வசதி/வாய்ப்பு அதிகம். மேலும் பாலியல் வலைத்தளங்களைப் பார்வையிட்டமையால் ஏற்படும் உளமாற்றம் மக்களாயப் (சமூகப்) பண்பாட்டை மீறித் தவறு செய்யத் தூண்டும்.

எடுத்துக்காட்டுக்கு ஓர் இணையரின் குடும்பம் முறிவடைய பாலியல் வலைத்தளம் இடமளித்திருக்கிறது. அதாவது பாலியல் வலைத்தளங்களில் வரும் ஒளிஒலிப் (Video) படங்களைப் பார்த்து அவ்வாறே உறவைப் பேணக் கணவன் மனைவிக்குத் தொல்லை கொடுக்க, மனைவியோ அருவெருத்துச் சத்தியெடுத்து உறவும் வேண்டாம் உன்னையும் எனக்கு வேண்டாமென மணமுறிவு (Divorce) வரை சென்றுவிட்டாள். எனவே "பாலியல் வலைத்தளங்களைப் பார்க்காதீர்; மக்களாயப் (சமூகப்) பண்பாட்டை மீறாதீர்" என்று அடிக்கடி நினைவூட்டுங்கள்.

உண்மையில் பாலியல் வலைத்தளங்களில் வரும் ஒளிஒலிப் (Video) படங்களைப் பார்த்துக் குடும்பம் நாடாத்தப் புறப்பட்டால் ஆணுக்குத் தான் அதிகம் கேடு; அதேவேளை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். எனவே, பாலியல் உறவென்பது ஆணும் பெண்ணும் அதிக அன்பின் விளைவாக மேற்கொள்வதாகும். அதனை எவரும் கற்றுக்கொடுக்க முடியாது; கற்றுக்கொடுக்கவும் கூடாது. எனவே மணமுறிவு (Divorce) ஏற்படாது மகிழ்வான குடும்ப உறவுக்கு இணையர்களிடையே அதிக அன்பும் புரிந்துணர்வும் தான் தேவையான மருந்தாகும்.