Translate Tamil to any languages.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

காதல் பற்றிய சில வரிகள்

 👦👧👨👩👤👥👪

ஏன் காணும்
காதலிக்காமல் விட்டாய்? என்கிறாய்...
காதலில் குதித்தால்
பிச்சை எடுக்க வேண்டி வருமே!
ஆதலால், அந்தப் பக்கம்
நான் தலை காட்டவில்லைக் காணும்!
எந்தப் பெண்ணும்
கண்ணில் சிக்கவில்லையா? என்கிறாய்...
என்னைச் சுற்றி
பலர் வட்டமடித்தனர்...
பிச்சைக்காரன் ஆகக்கூடாதென
அவர்கள் வலையில் சிக்காமல்
தப்பிக்கொண்டேன் காணும்!
திருமணம்
எப்படி நடந்தது? என்கிறாய்...
எனது இழிநிலையை
இரண்டு கண்ணாலும் பார்த்த
ஒருவள் தான் தலையை நீட்டினாள்
என் நிலை அறிந்து உணர்ந்தவளென
அவள் கழுத்தில் தான்
தாலி கட்டினேன் காணும்!
திருமணமான பின்னரும்
காதலிக்கவில்லையா? என்கிறாய்...
என்னை அறிந்த இல்லாளை
நானும் காதலிக்கிறேன்!
எனக்காக இரங்கிய இல்லாளும்
என்னைக் காதலிக்கிறாள்!
கணவன் - மனைவி காதல்
திருமண முறிவுக்கு
ஒருபோதும் இடமளிக்காது காணும்!
என்னங்க - ஒரு
பதிலையும் காணோம்? என்றேன்...
திருமணத்திற்கு முந்தைய
காதலை விட
திருமணத்திற்குப் பிந்தைய
காதல் தான்
குடும்ப உறவை வலுப்படுத்துமென
என்னைக் கேள்வி கேட்டவர்
ஓடி ஒதுங்கினார் காணும்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!