Translate Tamil to any languages.

பாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து

வணக்கம் வாசகர்களே!

யாழ்பாவாணனின் தூய தமிழைப் பேண  உதவும் முயற்சிக்கு உதவும் வகையில் "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற  தொடர் பங்களிப்புச் செய்யவிருக்கிறது.

எல்லோரும் உறைப்பாக "தூய தமிழ் என்று வாயுளையக் கத்திறியள், அதனைப் பேணுவதெப்படி" என்று ஒரு கேள்வி தான் கேட்கிறார்கள். இம்முயற்சியில் பலர் பல முறைகளில் இறங்கி உள்ளனர். யாழ்பாவாணனோ படைப்பாளிகளுக்குப் படைப்பாக்கத்தைப் புகட்டி, அவர்களினது படைப்புகள் ஊடாகத் தூய தமிழை வெளிப்படுத்த முனைகிறார். இதனால் எல்லா ஊடகங்களும் தூய தமிழை வெளிப்படுத்த வாய்ப்புண்டு.

எவர் எம்முறையைப் பின்பற்றினாலும் வெளிப்படுத்துனராகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து பிறமொழிச் சொல்களை குப்பையிலே போடவேண்டும். முடிந்தால் "நான் தமிழனென்று நடைபோட வேண்டும்! தமிழ் தெரிந்தவர் எவரும் தமிழாலே என்னோடு தொடர்புகொள்ளலாம் என்ற மிடுக்கோடு தலையை நிமிர்த்தி நடைபோட வேண்டும்!" என்ற உளப்பாங்கு எம்மவர் நடத்தையாக மாறவேண்டும்.

பாவலர்களில் பலரும் புதுப்பா(புதுக்கவிதை), துளிப்பா(ஹைக்கூ கவிதை), குறும்பா(லிமரிக் கவிதை) எனப் பல புதிய படைப்புகளை ஆக்கித் தருகிறார்கள். ஆனால் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என இலக்கண ஆடைகட்டிய பாக்களை வெளிப்படுத்துவது குறைவே! இப்பாக்களை எழுதத் தூண்டும் வகையில் "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்றொரு தலைப்பெடுத்து புதுப்பாக்களுக்கு இலக்கண ஆடைகட்டுவது எப்படியென வெளிப்படுத்த வருகிறார் யாழ்பாவாணன்.

யாழ்பாவாணன் ஒரு பாவலனல்லன்
புதுப்பாக்களைப் புனையும் எளியவர்...
புலவருக்கோ பண்டிதருக்கோ வித்துவானுக்கோ
படித்துத் தேர்வு எழுதாதவரும் கூட
உள்ளத்தில் தேங்கும் எண்ணங்களை வெளிப்படுத்த
எழுதுகோலைத் தூக்கியவர் எனலாம்!
எப்படியோ
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற
தொடரைத் தொடர்ந்து படித்து
சிறந்த படைப்பாளியானால் போதாது
உலகெங்கும் தூய தமிழைப் பேண
முன்வாருங்களென அழைக்கிறார்
உங்கள் யாழ்பாவாணன்!



யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்

உலகெங்கும் தமிழை விரும்பும்
தமிழ் மீது காதல் கொள்ளும்
ஒவ்வொருவரும்
தமிழ் இனி மெல்லச் சாவதை
விரும்பமாட்டார்களே!
தமிழை வளர்த்துப் பேண
முன்னைய தமிழரசர்கள்
(.கா. : பாண்டிய மன்னன்)
தமிழ்ச்சங்கம் நடாத்தினரே!
இன்றைய தமிழறிஞர்கள் சிலரைத் தவிர
எல்லோருமே
கலப்புத்தமிழிலே கலக்குவதைப் பாரும்...
(என் படைப்புகளில் - பிறமொழி
கலந்திருப்பின் சுட்டிக்காட்டுங்களேன்!)
7500 இற்கு மேற்பட்ட மொழிகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததாம்...
(2000 ஆம் ஆண்டில் ஒரு நாள்)
இன்றைக்குப் பாரும் - உலகில்
3000 மொழிகளுக்குக் குறைவாகவே
பேச்சு வழக்கில் இருக்கென்றால் - எஞ்சியவை
பிறமொழிக் கலப்பாலே தான்
வலுவற்றுச் செயலற்றுப் போனதாம்...
அப்படி என்றால் - இன்றைக்கு
நாம் எல்லோருமே
கலப்புத்தமிழில் கலக்குவதை நிறுத்தியே
தூய தமிழைப் பேணினால் தான்
தமிழ் இனி மெல்லச் சாவதை
நிறுத்தலாம் பாருங்கோ...!
இஞ்சாருங்கோ
இதெல்லாம் சரிப்பட்டு வருமோ?
தாய்த் தமிழில் இருந்து
பிறமொழிகளை நீக்க வேணும்
தாய்த் தமிழ் மீது
காதல் வரப் பண்ணனும்
வாசிப்பை விரும்பவைக்கப் பாவாக்கணும்
வாசிப்பைப் பொழுதாக்க கதை புனையணும்
கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பார்க்கவும் இருக்கணும்
பார்ப்பதிலே களித்திட நாடகம் நடிக்கணும்
பார்ப்பதையே சுகமாக்கத் திரைப்படம் தயாரிக்கணும்
இத்தனை ஊடகமும் தூயதமிழைப் பரப்பணும்
அத்தனை படைப்பையும் ஆக்கியோர் தான்
தூயதமிழை அவற்றிலே சேர்க்கவும் வேணுமே!
தூயதமிழை வெளிப்படுத்துவோருக்கு
உதவும் நோக்கிலே தான்
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" எனும் தொடர்!
பாவலர்களுக்கு உதவும் நோக்கில் தானே
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்றெழுத
யாழ்பாவாணனுக்கு தமிழ் புகட்டியோரும்
படைப்பாக்கத்தில் புலமை பெற
வழிகாட்டித் துணை நின்றோரும்
யாழ்பாவாணனின் பின்னூட்டிகளே!
சில பொத்தகங்களுக்குள்ளே உலாவி
வேண்டிய அறிவைப் பொறுக்கி
தேவையானதை நறுக்கி எடுத்தே
யாழ்பாவாணனும் முறுக்கிப் புனைந்தே
இதனை ஆக்கி இருப்பதால்
குறித்த பொத்தக ஆசிரியர்களும்
நன்றிக்கு உரியவர்கள் என்பதால்
அவர்களது விரிப்பைக் கீழே பாரும்!

நூல் : யாப்பரங்கம்
ஆசிரியர் : புலவர் வெற்றியழகன்
வெளியீடு : சீதை பதிப்பகம்,
முகவரி : 17/1, தாச்சி அருணாசலம் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600004.

நூல் : யாப்பதிகாரம்
ஆசிரியர் : புலவர் குழந்தை
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்,
முகவரி : 127(.எண்:63), பிரகாசம் சாலை(பிராட்வே), சென்னை - 600108.

நூல் : யாப்பறிந்து பாப்புனைய...
ஆசிரியர் : மருதூர் அரங்கராசன்
வெளியீடு : ஐந்திணைப் பதிப்பகம்,
முகவரி : 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005.

வசதி இருந்தால் பாரும்
இவற்றை வேண்டிப் படிக்கப் பாரும்
இவற்றைப் படித்தால் பாருங்கோ
பா புனைதலிலும்
தமிழ் இலக்கண அறிவிலும்
நீங்கள் பெரியவர்களாக இடமுண்டே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!