Translate Tamil to any languages.

செவ்வாய், 28 மார்ச், 2017

ஈழத் தமிழரின் ஏறாவூர்கள்


யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த
வெள்ளைக்காரர் ஒருவர்
ஈழவரைப் பார்த்து
ஏறாவூர் எங்கிருக்கு என்றார்...
இராவணன் ஆண்ட
தமிழரின் நாடான இலங்கையே
ஈரேழு தீவுகளைக் கொண்டதால்
ஈழம் என்கிறார்கள்...
எங்கிருந்தோ வந்த சிங்களவர்
தமிழரை விரட்டி வெளியேற்றியதால்
உலகெங்கும் ஈழத் தமிழராச்சு....
இடம் பெயர்ந்த தமிழர்
மீளக் குடியமராத இடங்கள்
எல்லாமே - அவர்கள்
ஏறியிறங்கா ஏறாவூர்கள் தானே...
எப்படியிருப்பினும்
மட்டக்களப்பை அண்டி - ஆங்கே
ஓர் ஏறாவூர் இருக்குத் தான்...
தங்கள் சொந்த இடங்களுக்கு
தமிழர் மீளத் திரும்பினால் - அவர்களின்
ஏறாவூர்களை ஏறியிறங்கப் பார்க்கலாமென
ஈழவரும் பதிலிறுக்க
கள்ளமில்லா அந்த வெள்ளைக்காரும்
எப்பதான் ஏறாவூருக்கு ஏறலாமென
ஈழவரை நெருக்கினார்!
இப்பவும் முடியும் எப்பவும் முடியும்
.நா. அவை (சபை) தலையிட்டு
ஈழத் தமிழர்
சிக்கலைத் தீர்த்து வைத்தாலென
ஈழவரும் சொல்லி முடிக்க
போன வெள்ளைக்காரர் போனது தான்...
இப்படித் தான்
.நா. அவை (சபை) ஆள்கள் கூட
வந்தனர்... பார்த்தனர்... கேட்டுமறிந்தனர்...
ஆயினும்
எங்கிருந்தோ வந்த சிங்களவர்
விரட்டி வெளியேற்றத் தமிழரின்
வாழ்விடங்களும் பறி போகிறதே...
இலங்கையர் உள்நாட்டுப் பேச்சுக்களில்
நம்பிக்கை இழந்து
வெளிநாட்டவர் பேச்சை நம்பினால்
இன்றுவரை
எந்த வெள்ளைக்காரரும்
.நா. அவை (சபை) ஊடாக
ஈழத் தமிழர்
சிக்கலைத் தீர்த்து வைத்து
வாழ்வளிக்க முன்வரவில்லையே!
.நா. அவையே (சபையே)
ஈழத் தமிழர் கடலில் வீழ்ந்து
சாகும் வரையா காத்திருக்கின்றாய்!

 * ஏறாவூர் பற்றியறிய  https://ta.wikipedia.org/s/ufc


வெள்ளி, 24 மார்ச், 2017

உலகின் முதன் மொழி தமிழா?

துளித் துளித் தகவலாக வலைவழியே "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்று பரப்புவதால் வலையுலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. எனவே, பல அறிஞர்களின் கூட்டு முயற்சியாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட்டு வலையுலகில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்தலாமென நம்புகிறேன்.

"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறோம். இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். தகவல்: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

மேற்படி இணைப்பில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் அப்படி அறிவித்திருக்கிறது. அந்த வகையில் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற தலைப்பில் வலைப்பதிவுகளை ஆக்க முடியுமா? என்ற கேள்விக்குப் பதில் தேவைப்படுகிறது. "வரலாற்று நூல்கள் பொருத்தமான சான்றாக இருக்காது; இலக்கியப் படைப்புகள் வெறும் கட்டுக்கதைகளே! சைவமும் தமிழும் முதல் தோன்றியது எனின் மொகஞ்சாதாரோ, ஹரப்பா நகரங்கள் இஸ்லாமிய நாடான பாகிஸ்த்தானில் இருக்கிறதே!" என்றவாறு "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூல் தலைப்புக்கு எதிரான கருத்துகளே அதிகம்.

"உலகின் முதல் மொழி தமிழா?" என்றால் "இல்லை" என அறிஞர் ஒருவர் பதில் தருகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

உலகின் முதல் மொழி தமிழ் இல்லை என அறிஞர்கள் சொன்னாலும் சமகால நோக்கில் "உலகின் முதல் மொழி தமிழ்" என்ற போக்கே அதிகம். அதனை வலுப்படுத்தும் நோக்கிலான பதிவுகளை ஆக்குவதற்கு, "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூல் தலைப்புக்கு வலுவூட்டும் வகையில் பதிவுகளைத் தரலாமென எண்ணுகிறேன். எதற்கும் இந்த ஒளிஒலி (Video)  இணைப்புகளைப் பாருங்கள்.

Tamil is the world first language / தமிழ் உலக முதல் மொழி


Tamil History Kumarik Kandam / தமிழ் வரலாறு குமரிக்கண்டம்

தமிழ் மொழி பற்றிய தகவலை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

"தமிழர் வரலாறு -Tamils History" பற்றியறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

"தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா?" என்ற உண்மையை அறியக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.

யாழ்பாவாணனின் 'மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும் - https://seebooks4u.blogspot.com/' நடாத்தும் "உலகின் முதன் மொழி தமிழா?" என்ற மின்நூலிற்கான பதிவுகளை நீங்களும் ஆக்கி இணைக்க இப்பதிவு உங்களுக்கு உதவுமாயின் அதுவே எனக்கு நிறைவத் தரும். உங்கள் பதிவுகளை எவ்வாறு "உலகின் முதன் மொழி தமிழா?" என்ற மின்நூலில் இணைக்கலாம் என்பதைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்துகொள்ளுங்கள்.

வலைவழி உறவுகளே! உங்கள் பதிவோ உங்களது நட்பு அறிஞர்களின் பதிவோ ஒன்றிணைந்து "உலகின் முதன் மொழி தமிழா?" என்ற மின்நூல் அழகுற வெளிவர உதவுங்கள்.

இவ்வண்ணம்
தங்கள் உதவியை நாடும் யாழ்பாவாணன்

வெள்ளி, 17 மார்ச், 2017

தமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும்


"தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
தமிழன் என்று சொல்ல
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்." எனக் கூகிள் பிளஸ் இல்
அறிஞர் சிவபிரியா பகிர்ந்த பதிவைப் படித்ததும்
நானும் குறித்த செய்தியைத் தங்களுடன் பகிர விரும்பினேன். அதன் விளைவு இப்பதிவு!

தம் + இழ் = "தமிழ்" என்றால்
எம்மில் இருந்து எழும் மொழியே!
தமிழ் எழுத்தொலிகள்
நம்மாளுங்க
உணர்ச்சிகளால் எழும் ஒலிகளே!
ஓர் எழுத்துச் சொல்லாவதும்
பிறமொழிகளில் இல்லாத
'ழ' எழுத்து இருப்பதும்
தமிழ் மொழியின் சிறப்பே!
உணர்ச்சிகள் முட்ட முட்ட
ஓர் எழுத்துச் சொல்
ஈர் எழுத்துச் சொல்லாவதும்
ஈற்றில் பல எழுத்துச் சொல்லாகியும்
தமிழ் மொழி வளம் உண்டெனின்
தமிழே உலகின் முதன் மொழி!

அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இணைப்புகளைப் பகிருகிறேன்.
Top 10 Oldest Languages in the World

முதலாம் இடத்தில் தமிழ் மொழி (Tamil). அதாவது 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாம்.

இரண்டாம் இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit). அதாவது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி சமஸ்கிருத மொழியாம்.

மூன்றாம் இடத்தில் எகிப்து மொழி (Egyptian). அதாவது கி.மு. 2600 இற்கும் கி.மு. 2000 இற்கும் இடையேயான ஆண்டு காலப் பகுதியில் தான் தலையைக் காட்டி இருக்காம்.

நான்காம் இடத்தில் கிரீக் (Greek). அதாவது கி.மு. 1450 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி இருக்காம்.

ஐந்தாம் இடத்தில் சீன மொழி (Chinese). அதாவது 3000 ஆண்டு காலப் பழமையோடு
கி.மு. 1200 இல் தான் தலையைக் காட்டி இருக்காம்.

ஆறாம் இடத்தில் அராமிக் மொழி (Aramaic). அதாவது பத்தாம் நூற்றாண்டு - கி.மு. 1000 இல் தான் தலையைக் காட்டி இருக்காம்.

ஏழாவது இடத்தில் எபிரேய மொழி (Hebrew). அதாவது 3000 ஆண்டு காலப் பழமையோடு
கி.மு. 1000 இல் தான் தலையைக் காட்டி இருக்காம்.

எட்டாவது இடத்தில் கொரியன் மொழி (Korian). அதாவது கி.மு. 600 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி இருக்காம்.

ஒன்பதாவது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian). அதாவது கி.மு. 450 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி இருக்காம்.

பத்தாவது இடத்தில் லத்தீன் மொழி (Lattin). அதாவது கி.மு. 75 ஆண்டளவில் தான் தலையைக் காட்டி இருக்காம்.

மேலுள்ள படங்கள் வலைவழியே தேடிப் பொறுக்கியது. உலகெங்கும் வாழும் தமிழர், தங்கள் தாய் மொழியின் சிறப்பை உலக மொழிகளில் பரப்பி தமிழின் தொன்மையை அடையாளப்படுத்த முன்வரவேண்டும். பிறமொழிக் கலப்பின்றித் தமிழைப் பேணுவதன் மூலமே, தமிழை வாழ வைக்க இயலுமென்பதை ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டும்.

செவ்வாய், 14 மார்ச், 2017

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 04

வலைப்பூக்களை விட முகநூல் (Facebook) பக்கம் நன்றென விரைந்த நம்மாளுங்க, முகநூல் பக்கத்திலே கருத்து மோதல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் தங்கள் அடையாளங்களைத் தாமே இழந்து வருகின்றனர். வலைப்பூக்களில் மோதல்கள் வெடித்து வலைப்பூ ஊடாகத் தங்கள் அடையாளங்களை இழந்து வருவது குறைவே. முகநூல் பக்கத்திலே மோதல்கள் வருவதேன், எனது கிறுக்கலையும் படித்தால் தெரியுமே!

குடும்பச் சண்டை, வேலிச் சண்டை
போய் - இப்ப
முகநூல் (Facebook) சண்டை
முன்னேறுகிறது - இதற்கு
இரண்டு, மூன்று கிறுக்கியதும்
தான் தான் கண்ணதாசன்,
மூ.மேத்தா, வைரமுத்து என
எண்ணம் கொண்டோரால்
மூண்ட சண்டையாம் - அதற்கு
பாவரசி, பாவேந்தன் என
முகநூல் (Facebook) குழுக்கள் சில
பிஞ்சுகளுக்குப் பட்டம் சூடி
பறக்க விடுவதால் தானாம் - எதற்கு
முகநூல் (Facebook) சண்டை என்றால்
எவரெழுதுவது கவிதையாம் - அதனால்
கவிதை எதுவென அறியாதார் மோதல் என
மக்கள் மத்தியில்
வாழும் கவிதை சொல்கிறதே!
ஓ! உண்மையான
முகநூல் (Facebook) பாவலர்களே
எதிர்காலத்தில்
மக்கள் மத்தியில் வாழும் கவிதை
எப்படிப்பட்டதாக இருக்கவேணுமென்பதை
புதுவரவுகள் எண்ணுமா?????

"எவரெழுதுவது கவிதையாம்?" என்றெழுதிய கிறுக்கல் அது. எல்லோருக்குள்ளும் கவிதை உணர்வு இருக்கிறது. அதனை வெளிக்கொணர முயன்றவர் பாவலர்/ கவிஞர் ஆகின்றார்.

பணம் உள்ள வரை உறவு
பணம் இல்லை எனில் துறவு
வாழ்வில் சந்தித்த உண்மை இது!
என்றோ
நம்பிக்கை தான்
நம் உறவு நிலைக்க உதவும்
நம்பிக்கை என்ற மூன்றாம் கையால்
முழு உலகையும் உருட்டிவிடலாமே!
என்றோ
பாவலர்/ கவிஞர் ஆக விரும்பினால்
கவிதை உணர்வை வெளிக்கொணர
முயன்று பாருங்கள் - கவிதைகள்
உங்கள் உள்ளத்தில்
துள்ளி விளையாடுவதைக் காண்பீரே!
எங்கிருந்தும் எவராச்சும்
எண்ணிப் பார்த்தீங்களா?
நல்ல கவிதை எதுவானாலும்
உலகெங்கும் வாழ்வோரின்
உள்ளத்தைத் தொடும் - அப்படி
வாசகர் உள்ளம் ஈர்த்திட
எழுதியவர் தான்
பாவலர்/ கவிஞர் ஆவாரென்று!

இப்படித்தான் தனது தாய் நோயுற்று இருப்பதை அறிந்து, கனடாவில் வசித்து வருபவருமான மகள் யாழ்ப்பாணம், இலங்கை வந்திருக்கிறார். ஊர்திகள் மோதிக்கொண்டதால் தாயைக் காக்க வந்தவள் உயிர் பறிபோயிற்று. இப்படியான துயரம் எவருக்கும் வந்துவிடக் கூடாது. இதனை எண்ணிப் பார்த்ததும், கீழுள்ளவாறு எழுதினேன். எழுதியது கவிதையா இல்லையா என்பதை உங்கள் உள்ளம் தான் சொல்லுமே!

தாய் நலம் பேண வந்தவள்
தன் உயிரைப் பிரிந்த விட
விபத்தொன்றில் சிக்கினாளோ? - அவள்
வீட்டில் உள்ளோர்
துயரம் அடக்க முடியவில்லை - அந்த
ஆண்டவனும் இரங்கவில்லை - இந்த
மனித வாழ்வும் இப்படியாப் போச்சுது!

இப்படி நீங்கள் எழுதிப் பழக கீழுள்ள எனது கிறுக்கல்களைப் பாருங்கள். மூன்றடியில முதற் சொல்லும் ஈற்றுச் சொல்லும் ஒன்றிய நிலையில ஒவ்வொரு செய்தியைச் சொல்லி இருக்கிறேன்.

அழகே! உன்னை விரும்பும் ஆள்கள்
அழகாலே தாம் உயர்ந்தவர் எனக்கூறி
தம்மைத் தாம் இழக்கின்றனர் அழகே!

மார்கழி விடியலில் பிள்ளையார் கோவிலில்
குளிருடன் போய் திருவெம்பாவை வழிபாட்டில்
பிட்டுத்தின்ற சுவைக்கு நன்றி மார்கழி!

ஏழ்மை கண்டு உருகாதோர் உள்ளம்
வாழ்வில் உண்டோ வாழும் உறவுகளே!
வாழ்வில் முன்னேறத் தடையல்ல ஏழ்மை!

ஏழ்மை வரலாம் எதிர்த்து முகம்கொடு
ஏழ்மையைக் கண்டு உருகுவோரும் உதவார்
வாழ நினைத்தால் வேண்டாம் ஏழ்மை!

பெண்மை கடவுளின் துணைக்கருவி என்பேன்
கடவுளின் படைத்தலுக்குத் துணையாக இருப்பினும்
பிள்ளையை ஈன்றுதள்ளும் கருவியல்ல பெண்மை!

பெண்மையைக் கண்டு பெருமை கொள்
உன்னைப் பெற்றவளும் பெண்மை ஒருவளே!
உலக இயக்கத்துக்கு வேண்டும் பெண்மை!

உள்ளமே உள்ளத்துக்கு மருந்து என்பேன்
உள்ளம் சுத்தமானால் ஆண்டவன் எதற்கு?
நெடுநாள் வாழ நல்ல உள்ளமே!

ஆடுதே! அந்தப் பனைமரம் தான்
கள்ளைத் தருவதும் அந்தப் பனையே
போட்டிக்குத் தென்னையும் தளராமல் ஆடுதே!

எழுதிடு! என்றும் எண்ணிய எல்லாவற்றையும்
எழுதியதால் வாசகர் அறிவு பெருகட்டும்
நாட்டவர் அறிவுயர என்றும் எழுதிடு!

முகநூல் (Facebook) பக்கத்திலே இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்குத் தமிழ் தெரியாது என்று ஒருவர் எழுதியிருந்தார். அதனைக் கண்டதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. அதன் விளைவாகக் கீழுள்ளவாறு கிறுக்கிவிட்டேன்; படித்துப் பாருங்களேன்.

சிவனுக்குத் தமிழ் தெரியாதா?
சொன்னவருக்கு
உலகைப் படைத்தவரைத் தெரியுமா?
சிவன் என்று சொல்லி வையுங்க!
உயிரிகளைப் படைத்தவரைத் தெரியுமா?
சிவன் என்று சொல்லி வையுங்க!
உயிரிகளான நம்மாளுங்க பேசும்
தமிழ் மொழியைப் படிப்பித்தவர்
எவரென்று தெரியுமா?
அந்தச் சிவன் அல்ல - அந்த
சிவனின் மாணவரான அகத்தியரே! - அந்த
அகத்தியருக்கே தமிழ் கற்பித்த - அந்த
சிவனுக்குத் தமிழ் தெரியாதா?
சொன்னவருக்கு
தமிழ்க் கடவுள் முருகன் என்றாலும்
முருகனின் அப்பா சிவன் அல்லவா! - அப்ப
சிவனுக்குத் தமிழ் தெரியாதா?
உலகைப் படைத்தும்
உலகத் தமிழரைப் படைத்தும்
உலகத் தமிழருக்கு
அகத்தியரூடாகத் தமிழைப் படிப்பித்ததும்
முழுமுதற் கடவுள் சிவன் தானே!
சங்கம் வளர்த்துப் தமிழைப் பேண
முன்நின்றவர் தான் முருகக் கடவுளே!

ஒவ்வோர் ஆண்டும் மாசி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த (2017) ஆண்டும் அந்நாளில் நான் கிறுக்கியதைப் பாரும்.

மொழியே எங்கள் உயிர்!
மொழியே எங்கள் அடையாளம்!
மொழி மறந்தார் விழி இழந்தார்!
மொழியைப் பேணு உலகைப் பார்!
தொன்மைத் தமிழே தேன்மொழியே
எங்கள் தாய்மொழி நீடூழி வாழ
பிறமொழி நீக்கிப் தமிழைப் பேணு!
தமிழனென்று தலை நிமிர்ந்து
நாளும் நாம் நடை போட
நம்ம தமிழைப் பேணி வாழ்வோமே!

ஏதேதோ என்னமோ எனது கைவண்ணத்தில் கிறுக்கியதைப் பகிர்ந்தேன். உலகெங்கும் வலைவழியே நல்ல தமிழில் உங்கள் எண்ணங்களை உங்கள் கைவண்ணத்தாலே நல்ல பாவண்ணமாகப் பகிருங்கள். அப்பதான் உலகத்தார் தமிழின் சுவையறிந்து தமிழைப் பேண முன்வருவார்கள். ஆளுக்கொரு வலைப்பூவில் தங்கள் பதிவுகளைப் பேணுவதோடு, தங்களுக்கென்ற தனி அடையாளத்தை வெளிப்படுத்த வழியிருக்கிறதே! அதற்காக முகநூல் (Facebook) பக்கம் போகவேண்டாமெனத் தடுப்பது எனது நோக்கமல்ல. ஆங்கே நாம் நமது வலைப்பூப் பதிவுகளைச் சுட்டி, அங்குள்ளவர்களை நமது வலைப்பூப் பக்கம் இழுத்துவர முயற்சிப்போம்.


முகநூல் பக்கத்திலே விருப்பு (Like), கருத்து (Comments), பகிர் (Share) அதிகம் என்றாலும் வலைப்பூப் பக்கத்திலும் பதிவர்கள் பலருக்கு இவை அதிகமாகக் கிடைக்கின்றதே! அவர்களது சுவையான பதிவுகள் மற்றும் அவர்களது கருத்திட்டுப் பதிவர்களை ஊக்கப்படுத்தும் செயல் என்பன தான் அவர்களது வெற்றிக்குக் காரணம். முகநூல் பக்கத்திலே விபத்தாக இவை கிடைத்தாலும் வலைப்பூப் பக்கத்திலே பதிவர்களின் தனி அடையாளத்திற்காகவே கிடைக்கின்றன. எனவே தான் வலைப்பூ நடாத்திப் பேணுவதால் நன்மை என்பேன்.

சனி, 11 மார்ச், 2017

தமிழை வாழ வைக்கும் வழி

தமிழை வாழ வைக்கும் வழி
என்றொரு பதிவை - அன்றொரு நாள்
எனது வேர்ட்பிரஸ் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
அதிலிருந்து சிறுமாற்றத்துடன்
இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.


ஆங்கிலத்தில் பிறமொழிச் சொல்களை
தம்மொழிச் சொல்கள் ஆக்கினார்களாம்
அதுபோலப் பாரும் - தமிழிலும்
தமிழுக்கு ஏற்றா ற் போல
பிறமொழிச் சொல்களை சேர்த்தால்
தமிழ் வாழுமாம் - எப்படியோ
தமிழைக் கொஞ்சம் மாற்றினால்
தமிழ் வாழுமாம் - எப்படியோ
எழுத்துச் சீர் திருத்தம்
சொல் சீர் திருத்தம்
மேற்கொண்டால் போதுமாம்...
உங்களுக்கும்
மூளை வேலை செய்யவில்லையா?
பெத்த தாயைப் போல
பொய்த் தாயை ஆக்குவதாகக் கூறி
உண்மைத் தமிழின் அடையாளங்களை
அழிப்பதற்காகப் பிற அழகூட்டலா?
பொய்த் தாய்
பெத்த தாய்க்கு ஈடாவாளா?
சொல்வளம் பெருகின்
மொழி வளம் சிறக்கும் - ஆனால்
பிறமொழிச் சொல்வளம் பெருகின்
தமிழ் மொழி வளம் மறையுமென்று அறிவீரா?
உண்மைத் தமிழின் அடையாளங்களை
எள்ளளவேனும் மாற்றம் செய்யாது
உலகில் தமிழை வாழ வைக்க
அறியாத மூடர்களுக்கு அறிவுரையாக
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாக்களை
எனது வலைப்பூவிலும் பகிருகிறேன்.
தமிழை வாழ வைக்கும் வழி
எதுவென்றுரைக்க முன் எதுவென்றறிய...
அதற்கும் அப்பால் அறிவீர்
பெருஞ்சித்திரனார் வழிகாட்டலைப் படி!
தூய தமிழ் பேணும் பணியில் ஈடுபடும்
நம்மாளுங்க எல்லோரும்
பெருஞ்சித்திரனார் அவர்கள் காட்டிய
வழிகாட்டலைப் பின்பற்றுவோம்!



”தமிழ் வாழ்க“ வென்பதிலும் தமிழ்வா ழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ் கின்ற நெஞ் செல்லாம் குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்“ - என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை!

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்
வந்தவர் செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும்!
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும்!
கற்கின்ற சுவடிகளில் செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே!

மூலப் பதிவு: கனிச்சாறு முதல் தொகுதி நூலிலிருந்து...
ஆக்கம்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இப்பாடலைத் தமிழ் விரிவுரையாளர் 
முனைவா் இரா.குணசீலன் அவர்கள்
தனது வலைப்பூவில்
கீழ்வரும் இணைப்புகளில் பதிவு செய்துள்ளார்.