Translate Tamil to any languages.

சனி, 18 மே, 2019

தாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...?வலைவழியே வாழ்த்துகளே பாரேன்
அலைவழியே வாழ்த்துவாரே கேளேன்
            தலைநிமிரத் தூக்கியகைய்
            தலைவைத்துப் படுத்தமடிய்
நிலையற்ற முதுமனையில் நாடேன்!
                                                                                             (குறும்பா)

குறிப்பு: வலைவழியே - இணையப் பக்கம்
அலைவழியே - நடைபேசி, தொலைபேசிஎன் நடைபேசியைச் சாகடிக்காதீர்கள்!

விடிய விடியத் தான்
நடைபேசியை நோண்டுகிறாங்கள்...
அடிக்கடி தகவல் அனுப்புகிறாங்கள்...
அதிகாலை, காலை, மதியம்,
மாலை, முன்இரவு, நடுஇரவு
வணக்கங்கள், வாழ்த்துகள் அனுப்புகிறாங்கள்...
இருக்கிறேன், கிடக்கிறேன், எழும்புகிறேன்,
குளிக்கிறேன், முழுகிறேன், விழுங்குகிறேன்
என்றெல்லாமே சுடச்சுட அனுப்புகிறாங்கள்...
இத்தனை எல்லாவற்றையும் உள்வாங்கேலாது
எத்தனையோ எந்தன் நடைபேசிகள்
செத்துக்கொண்டே இருக்கின்றன...
இறுதியாகச் செத்துப்போன நடைபேசி
அப்பிள் எக்ஸ்2 இன் பெறுமதி
உரூபா200000.00 இலங்கைப் பணமாச்சு!
இப்ப தோடம் எம்14 நடைபேசி
உரூபா500000.00 இலங்கைப் பணத்திற்கு
வேண்டி வைச்சிருக்கிறேன் உறவுகளே!
அ - ஃ / A - Z வரை வீண் தகவலை
அடிக்கடி அனுப்பி என் நடைபேசியை
சாகடிக்க முன்வர வேண்டாம் உறவுகளே!
நாள் முழுக்கத் தான் அனுப்பாது
அருமையாகத் தான்
நன்மை தரும் நல்ல தகவலை
நறுக்காகத் தெரிவித்தால் மட்டுமே
என் நடைபேசி வாழுமென்பேன்!

செவ்வாய், 14 மே, 2019

ஆசிரியப்பா_வெண்பா_வஞ்சிப்பா


கதையும் வெண்பாவும்

Don't Laugh more. One day you will cry.
என்றொரு ஆங்கிலப் பழமொழி இருக்காம்.- அதை
அதிகம் சிரிக்காதீர். ஒரு நாள் அழவும் நேரும்.
என்றவாறு தமிழ் மொழிப்படுத்த முடியுமாம். - அதை
தவறாகப் புரிந்துகொண்டு ஊருக்குள்ளே கலகமாம்.
எப்படியோ இது என் காதுக்கு எட்ட
எடுத்தேன் எழுதுகோலை வடித்தேன் பாவொன்று!
படித்தவர்கள் சுவைத்ததைப் பகிர்ந்தால் தெரியுமே!

தானறியா ஆங்கிலமே தன்நிலைக்குத் தந்திடுமே
கேடென்று எத்தனை யாள்தான் - அறிந்து
உணர்ந்துதான் நல்லறிவும் மென்மொழியில் சொல்லலாமே
சிங்களந்தான் தானறியார் பேச்சு.
                                         (பல விகற்ப இன்னிசை வெண்பா)

சிங்களந்தான் தானறியார் துன்புற்றுப் பட்டாரே
எங்கள் தமிழர்புண் சாட்டு!
                                         (ஒரு விகற்பக் குறள் வெண்பா )

சிங்கள மொழி புரியாமல் தமிழுறவுகள் பலர் புண்பட்ட கதையறிந்தும் ஆங்கில மொழிமாற்ற முயற்சியென வலை ஊடகங்களில் பரப்புவதால் பாதிப்புத் தான் பரிசாகக் கிட்டும். வலை ஊடகங்களில் வீண் தகவல் பரப்புவோர் புரிந்துணர்வுடன் செயற்படுங்கள்.கற்றதனாலாய பயன் - பல விகற்ப இன்னிசை வெண்பாகல்விதான் கற்றவர் என்றும் மகிழ்ந்திடவே
நல்ல தொருசொத்தாம் நீயும் - புரிந்துணர்
கற்றுத் தெளிந்துமே நாலுகா சும்உழை
பெற்றுக்கொள் நன்மதிப்பு என்று!பணமும் உறவும்  - நேரிசை ஆசிரியப்பா 

அருமை பெருமை எல்லாம் நொடியில்
பணம் இல்லை என்றதும்
கெட்டுப் போகும் என்றும் தானே!

அழகிருந் துமேபா ராருன் னைத்தான்
அறிவிருந் துமேதே டாருனை
விழித்தெழு பணமுழை உனைநா டிவரவே!அம்மா - நேரிசை ஆசிரியப்பாஅம்மா என்றும் எனக்கு வேண்டும்
அம்மா என்று கூ்ப்பிட வேண்டும்
அன்பு தானே பெருக வேண்டும்
நாளும் மகிழ்தல் வேண்டும்
நானும் அம்மா இன்றி வாழ்வதோ?நில், கவனி, புறப்படு! - குறளடி வஞ்சிப்பா

இளமைவரவே இனிமைவருமாம்
தனிமைவரவே கனவூம்வரும்
கனவின்வழி பயணிக்கவே
பயணங்களும் தடுமாறுமாம்
கொஞ்சம்நில்
சரியா எண்ணிப் பார்த்து நீயூம்
புரிந்து உன்நிலை அறிந்து வெல்கவே!

வெள்ளி, 10 மே, 2019

பிழையான பார்வை


2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி


இணைப்பைச் சொடுக்கிப் போட்டியில் பங்கெடுத்த முதலாம் கவிதையைப் படிக்க வாருங்கள்.
நீங்கள் எல்லோரும் பங்கெடுத்து உதவுங்கள். 


பிழையான பார்வை

வீட்டு மரத்தில
காய்த்த பலாப்பழம் கண்டு
நீங்களும் வெறுக்கலாம்...
வீட்டு மரத்தில
காய்க்காத பலாப்பழம் கண்டு
நீங்களும் விரும்பலாம்...
அது போலத் தான்,
உறவோ நட்போ
கண் முன்னே இருக்கையில்
எவரும் பெறுமதி அறியார்...
உறவோ நட்போ
கண் முன்னே இல்லையெனில்
எல்லோரும் பெறுமதி உணருவார்...
எல்லாமே
நான் வாழும் வேளை
என்னைத் தூற்றுவதும் ஆன
நான் சாவடைந்த பின்னே
என்னைப் போற்றுவதும் ஆன
என்னைச் சூழவுள்ள
மக்களின் பார்வையைப் போலவே!தாடியென்றால் ஐயம் தான்!


தாடி எடுக்க நேரமின்றி
அலையும் உறவுகளே!
தாடிக்கு வந்த சோதனை
கொஞ்சம் அறிவீரா?
தாடி நீயொரு கேடியென
நீர்கொழும்பில்
ஒரு தமிழரின் கையைத் தான்
முறித்தே விட்டார்களாம் - அது
வலை வழியே படித்த சேதி!
அச்செய்திக்குப் பின்னாலே
"2019 உயிர்த்த ஞாயிறு அன்று
கொழும்பு கொச்சிக்கடை
அந்தோனியார் ஆலயத்தில குண்டு வைத்த
தாடிக்காரர் குழுவுக்குச் சேர்மதியோ?" என்ற
ஐயம் தான் செய்தது அப்படியாம்!
தாடி ஒட்டித் திரியும் பெண்களும்
தாடி நீட்டித் திரியும் ஆண்களும்
சற்றுக் கவனம் தான் தேவை!
ஏழ்மைகிழக்கு வெழுக்கத் தான்
கூரையைக் குடைந்து தான்
தட்டியெழுப்பியது பகலவன் தான்
பாரடா ஓட்டை வீட்டில் நான்
என் ஏழ்மையைத் தான்
கொஞ்சம் பிறருக்குச் சொல்லித் தான்
எள்ளுப் போல கிள்ளி உதவத் தான்
உங்களால் முடியாதா என்று தான்
வன்னி - யாழ் இடப்பெயர்வு தான்
என்னை ஏழையாக்கியதை அறியத் தான்
பகலவன் சுட்டு எழும்பியதைச் சொன்னேன்!