Translate Tamil to any languages.

செவ்வாய், 14 மே, 2019

ஆசிரியப்பா_வெண்பா_வஞ்சிப்பா


கதையும் வெண்பாவும்

Don't Laugh more. One day you will cry.
என்றொரு ஆங்கிலப் பழமொழி இருக்காம்.- அதை
அதிகம் சிரிக்காதீர். ஒரு நாள் அழவும் நேரும்.
என்றவாறு தமிழ் மொழிப்படுத்த முடியுமாம். - அதை
தவறாகப் புரிந்துகொண்டு ஊருக்குள்ளே கலகமாம்.
எப்படியோ இது என் காதுக்கு எட்ட
எடுத்தேன் எழுதுகோலை வடித்தேன் பாவொன்று!
படித்தவர்கள் சுவைத்ததைப் பகிர்ந்தால் தெரியுமே!

தானறியா ஆங்கிலமே தன்நிலைக்குத் தந்திடுமே
கேடென்று எத்தனை யாள்தான் - அறிந்து
உணர்ந்துதான் நல்லறிவும் மென்மொழியில் சொல்லலாமே
சிங்களந்தான் தானறியார் பேச்சு.
                                         (பல விகற்ப இன்னிசை வெண்பா)

சிங்களந்தான் தானறியார் துன்புற்றுப் பட்டாரே
எங்கள் தமிழர்புண் சாட்டு!
                                         (ஒரு விகற்பக் குறள் வெண்பா )

சிங்கள மொழி புரியாமல் தமிழுறவுகள் பலர் புண்பட்ட கதையறிந்தும் ஆங்கில மொழிமாற்ற முயற்சியென வலை ஊடகங்களில் பரப்புவதால் பாதிப்புத் தான் பரிசாகக் கிட்டும். வலை ஊடகங்களில் வீண் தகவல் பரப்புவோர் புரிந்துணர்வுடன் செயற்படுங்கள்.



கற்றதனாலாய பயன் - பல விகற்ப இன்னிசை வெண்பா



கல்விதான் கற்றவர் என்றும் மகிழ்ந்திடவே
நல்ல தொருசொத்தாம் நீயும் - புரிந்துணர்
கற்றுத் தெளிந்துமே நாலுகா சும்உழை
பெற்றுக்கொள் நன்மதிப்பு என்று!



பணமும் உறவும்  - நேரிசை ஆசிரியப்பா 

அருமை பெருமை எல்லாம் நொடியில்
பணம் இல்லை என்றதும்
கெட்டுப் போகும் என்றும் தானே!

அழகிருந் துமேபா ராருன் னைத்தான்
அறிவிருந் துமேதே டாருனை
விழித்தெழு பணமுழை உனைநா டிவரவே!



அம்மா - நேரிசை ஆசிரியப்பா



அம்மா என்றும் எனக்கு வேண்டும்
அம்மா என்று கூ்ப்பிட வேண்டும்
அன்பு தானே பெருக வேண்டும்
நாளும் மகிழ்தல் வேண்டும்
நானும் அம்மா இன்றி வாழ்வதோ?



நில், கவனி, புறப்படு! - குறளடி வஞ்சிப்பா

இளமைவரவே இனிமைவருமாம்
தனிமைவரவே கனவூம்வரும்
கனவின்வழி பயணிக்கவே
பயணங்களும் தடுமாறுமாம்
கொஞ்சம்நில்
சரியா எண்ணிப் பார்த்து நீயூம்
புரிந்து உன்நிலை அறிந்து வெல்கவே!

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!