2019 - சித்திரைப்
புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி
இணைப்பைச்
சொடுக்கிப் போட்டியில் பங்கெடுத்த முதலாம் கவிதையைப் படிக்க வாருங்கள்.
நீங்கள்
எல்லோரும் பங்கெடுத்து உதவுங்கள்.
பிழையான
பார்வை
வீட்டு மரத்தில
காய்த்த பலாப்பழம் கண்டு
நீங்களும் வெறுக்கலாம்...
வீட்டு மரத்தில
காய்க்காத பலாப்பழம் கண்டு
நீங்களும் விரும்பலாம்...
அது போலத் தான்,
உறவோ நட்போ
கண் முன்னே இருக்கையில்
எவரும் பெறுமதி அறியார்...
உறவோ நட்போ
கண் முன்னே இல்லையெனில்
எல்லோரும் பெறுமதி உணருவார்...
எல்லாமே
நான் வாழும் வேளை
என்னைத் தூற்றுவதும் ஆன
நான் சாவடைந்த பின்னே
என்னைப் போற்றுவதும் ஆன
என்னைச் சூழவுள்ள
மக்களின் பார்வையைப் போலவே!
தாடியென்றால் ஐயம் தான்!
தாடி எடுக்க நேரமின்றி
அலையும் உறவுகளே!
தாடிக்கு வந்த சோதனை
கொஞ்சம் அறிவீரா?
தாடி நீயொரு கேடியென
நீர்கொழும்பில்
ஒரு தமிழரின் கையைத் தான்
முறித்தே விட்டார்களாம் - அது
வலை வழியே படித்த சேதி!
அச்செய்திக்குப் பின்னாலே
"2019 உயிர்த்த ஞாயிறு அன்று
கொழும்பு கொச்சிக்கடை
அந்தோனியார் ஆலயத்தில குண்டு வைத்த
தாடிக்காரர் குழுவுக்குச் சேர்மதியோ?" என்ற
ஐயம் தான் செய்தது அப்படியாம்!
தாடி ஒட்டித் திரியும் பெண்களும்
தாடி நீட்டித் திரியும் ஆண்களும்
சற்றுக் கவனம் தான் தேவை!
ஏழ்மை
கிழக்கு
வெழுக்கத் தான்
கூரையைக்
குடைந்து தான்
தட்டியெழுப்பியது
பகலவன் தான்
பாரடா ஓட்டை
வீட்டில் நான்
என் ஏழ்மையைத்
தான்
கொஞ்சம்
பிறருக்குச் சொல்லித் தான்
எள்ளுப் போல
கிள்ளி உதவத் தான்
உங்களால்
முடியாதா என்று தான்
வன்னி - யாழ்
இடப்பெயர்வு தான்
என்னை
ஏழையாக்கியதை அறியத் தான்
பகலவன் சுட்டு
எழும்பியதைச் சொன்னேன்!
அழகான கவிதைகள் ரசித்தேன், ருசித்தேன் நண்பரே...!
பதிலளிநீக்கு