Translate Tamil to any languages.

சனி, 4 ஜூன், 2016

இன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்!

மொழி எம் அடையாளம் என்பதால்
நாம் பேசும் தமிழ் உணர்த்துவது
தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே!
தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே!
தமிழை உணர்ந்து தமிழை வாழவைக்க
நாளும் தம்பிள்ளை தமிழறிய அறிவூட்டும்
பெற்றோரை நாமும் பாராட்ட வேண்டும்!

உலகில் மூத்த மொழி எங்கள் தமிழென
உலகம் எங்கும் தமிழை வாழ வைக்க
அறிஞர்கள் எடுக்கும் முயற்சியைப் போற்றினாலும் கூட
புலம்பெயர் வாழ் சிறார்கள் வெளிக்காட்டும்
தமிழ்ப் பற்றைப் பாராட்ட வேண்டும்! - நாம்
என்றும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்!
இன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்!
(புள்ளி ஆறு என்பது சுவிஸில் அதியுயர் புள்ளியாம்)

சுவிற்சர்லாந்து தமிழ் கல்விச் சேவை நடாத்திய
சுவிஸ் நாடெங்கும் நிகழ்ந்த போட்டித் தேர்வில்
தமிழில் சிறந்த பெறுபேறு பெற்ற பிள்ளை
எங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளை - அவள்
எங்கும் தமிழைப் பரப்பிப் பேண முயல்வாள்!
இனியவள் உலகெங்கும் தமிழால் வெல்ல
இனிதே நாமும் இன்றே வாழ்த்தி நிற்கிறோம்!

சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து நிமிருமவள்
என் இல்லாளின் இளையவள் மகள்
இவள் அம்றிதா என்ற செல்லமகள்
'நன்றி' என்பாள் நம்மாளுங்க காதுகிழிய - அப்படி
இவள் உச்சரித்தால் தமிழ் அழகு - என்றும்
இவளைப் போலத் தமிழைப் பேணும்
சிறார்கள் எல்லோரையும் பாராட்டி வாழ்த்துவோம்!

22 கருத்துகள் :

  1. அம்றிதாவுக்கு எமது வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  2. வாழ்த்துகள் குட்டிப் பாப்பாவுக்கு.தமிழ் பேசாத தேசத்தில் தமிழின் அருமை அறிய செய்யட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  3. மழலை குட்டிக்கு
    என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்!
    தமிழ் வழிக் கல்வியை
    தமிழகம் புதுப்பிக்க
    வேண்டுமென்பதற்கு
    புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகள் தெளிவாக உணர்த்துகிறார்கள்.
    மீண்டுமொருமுறை
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  4. பாப்பாவுக்கு வாழ்த்துகள். நல்ல முயற்சியை, செய்தியைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  5. அம்ரிதா குட்டிக்கு அடியேனின் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  6. தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதை குறைவாக நினைக்கும் இந்த நாளில் அயல் நாட்டில் தமிழில் விருதுபெற்ற அமிர்தாவிற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  7. வணக்கம்
    அம்றிதாவுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  9. அம்ரிதாவுக்கு எங்களது மனம் நிறைந்த மகிழ்வான வாழ்த்துகள்.அவள் உலகளாவிய பெயரும் புகழும் பெறட்டும்.உடலாலும் மனதாலும் உயர்வு நிலை பெற வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  10. வாழ்க அமிழ்தாவும் அவர் பெறறோரும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு
  11. அம்ரிதா குட்டிப் பெண் சுட்டிப் பெண். அயல்நாட்டில் இருந்தாலும் தமிழைப் பேணும் குட்டிப் பெண்ணிற்கும் தமிழை குட்டிப் பெண்ணிற்குப் போதித்து வளர்க்க உதவும் பெற்றோருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அம்ரிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!