Translate Tamil to any languages.

வலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்

வலைப்பூ வழியே அறிஞர்கள் பலர் படித்தறிவு, பட்டறிவு, ஆளுமை, ஆற்றல் எனத் தங்கள் வளங்கள் எல்லாவற்றையும் பகிருகின்றனர். அதேவேளை மற்றைய அறிஞர்களின் வலைப்பூக்களிற்குச் சென்று தங்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர். அவ்வாறு நீங்களும் இருப்பின், எனது பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை வெளியிடலாம்.

உங்கள் கருத்துகளை வெளியிட வந்த பின்னர்; சின்னப் பொடியன் யாழ்பாவாணன் என்று அன்பு காட்டி (இரங்கிப் பாவம் பார்த்து) குறை சொல்லுவதற்கோ பிழையைச் சுட்டுவதற்கோ பின் நிற்க வேண்டாம். இவ்வாறு பின்னடித்தால் நல்ல கருத்துகளை வாசகருக்குச் சென்றடைய இடமளிக்காத குற்றவாளி ஆவீர்கள்.

எனவே, சின்னப் பொடியன் யாழ்பாவாணன் என்றால் நமக்கென்ன நல்ல கருத்துகள் வாசகருக்குச் சென்றடைய வேணுமென்றால் உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளியிடுங்கள். பிழை என்றால் திருத்தலாம்; குறை என்றால் நிறைவடையச் செய்யலாம்.

இவ்வாறு துணிந்து உங்கள் கருத்துகளை வெளியிட முன்வரும்வேளை சின்னப் பொடியன் யாழ்பாவாணன் முன்னேறுவது மட்டுமல்ல, சிறந்த படைப்புகளை வாசகருக்குச் சென்றடைய வழிவிடுவதுமாக அமையும்,

ஆகா... ஓகோ... என யாழ்பாவாணனை வாழ்த்திப் போற்றிக் கருத்திடாது; வாசகருக்கு நல்ல படைப்புகளை யாழ்பாவாணனால் வெளிக்கொணரத் தூண்டும் உங்கள் கருத்துகளை வெளியிட முன்வாருங்கள்.

யாழ்பாவாணனின் வலைப்பூவிற்கு வருகை தந்தாச்சு; யாழ்பாவாணன் ஆக்கி வைச்ச பதிவைப் படித்தாச்சு; பின்னூட்டத்தில் உள்ளத்தில் தோன்றிய குறை நிறைகளை வெளியிட்டாச்சு என யாழ்பாவாணனை உங்கள் சொல்களால் தாக்கலாம்.

சிலருக்குச் சிலரின் குறை, நிறைகளை வெளிப்படையாகவே குத்திக் காட்டவோ சுட்டிக் காட்டவோ அச்சமிருக்கலாம். அவர்கள் யாழ்பாவாணனின் படைப்புகளைப் படித்த பின் தனிப்பட்ட முறையில் தங்கள் கருத்துகளைக் கூற விரும்பின் தங்கள் வலதுகைப் பக்க நிரலில் (Right Side Bar) உள்ள தொடர்பு கொள்ள என்ற தலைப்பின் கீழுள்ள படிவத்தைப் (Contact Form) பாவிக்கலாம்..

சிலருக்குச் சிலரின் குறை, நிறைகளை வெளிப்படையாகவே குத்திக் காட்டவோ சுட்டிக் காட்டவோ அஞ்சமாட்டார்கள். அவர்கள் யாழ்பாவாணனின் படைப்புகளைப் படித்த பின் வெளிப்படையாகவே (Public) கருத்துகளை வெளியிட விரும்பின் கீழ்வரும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் யாழ்பாவாணனை நண்பராக்கி, அதிலே உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்.


உங்கள் பெறுமதி வாய்ந்த கருத்துகள் எனக்கு வழிகாட்டுவதோடு, மென்மேலும் சிறந்த படைப்புகளை ஆக்கப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்/ காசி.ஜீவலிங்கம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!