Translate Tamil to any languages.

சனி, 29 அக்டோபர், 2016

வானம் அழுவதால் தான் மழை!


புகை தள்ளும் உருளிகளின் கழிவு எல்லாம்
காற்றாலே வான்வெளியை நிரப்பிக் கொள்வதால்
தரை வெளியில் வீசுகின்ற கழிவு எல்லாம்
காற்றாலே வான்வெளியை நிரப்பிக் கொள்வதால்
சுமை தாங்க முடியாத வானம் அழுகிறதோ! - அதை
கண்டு பொறுக்க முடியாத பகலவன் தான்
வெயில் எறிக்க வைச்சு உறிஞ்சுவதால் தான்
உலகம் எங்கும் மழை இல்லையோ - சிலவேளை
பகலவன் ஓய்வுக்குச் செல்வதால் தான் - வானமழ
உலகம் எங்கும் மழை வெள்ளமோ?  - இயற்கையை
வெட்டி வீழ்த்தும் நம்ம ஆளுங்க
சூழலை அழுக்காக்கும் நம்ம ஆளுங்க
இயற்கையை இயல்பாகப் பேண உதவினால்
இயற்கையும் இயல்பாக இயங்கும் என்பேன்!

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் உருவாக இடமிருக்கே!

யாழ்பாவாணன் ஆகிய நான், இணைய வழியில் நல்வாய்ப்பு (அதிஸ்டம்) கிடைத்தாக வந்த மின்னஞ்சல் கதையைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பகிர்ந்தேன். அவ்வேளை "உங்களை அறியாத ஒருவர் உங்கள் தன் (சுய) விரிப்பைக் கேட்கிறார் என்றால், அவரை எப்படி நம்புவீர்? எனவே, தன் (சுய) விரிப்பைக் கேட்டால் அனுப்ப வேண்டாம்." என அத்தள நிறுவுனர் வினோத் (கன்னியாகுமாரி) அவர்கள் எனக்கு மதியுரை கூறியிருந்தார்.

அண்மையில் ஒருவர் இதே கதையை எனக்குக் கூறிய போது, நானும் இதே பதிலைத் தெரிவித்திருந்தேன். ஆனால், அவரோ இதனைத் தளத்தில் பகிர்ந்து உதவினால் பலரும் நன்மை அடைவரென வழிகாட்டி இருந்தார். அதனைக் கருத்திற் கொண்டு இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.

"Spam, Junk மின்னஞ்சல் என்றால் நம்பக்கூடியதல்ல..." என நம்பி Inbox இற்கு வரும் மின்னஞ்சல்களை நம்புவதும் முட்டாள் செயலே! அப்படியான முட்டாளாக நானும் இருந்துள்ளேன். எனது Inbox இல் வந்த மின்னஞ்சல் ஒன்றில் Microsoft Lottery Winner Award என்றிருந்தது. பரிசு எவ்வளவு தெரியுமா? 8600000000 பிரிட்டிஸ் பவுண்ஸ் என்றிருந்தது. என்னுடைய பெண்டாட்டிக்கும் தெரியாமல் எனது Inbox இல் வந்த மின்னஞ்சலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விரிப்பைச் சரியாக அனுப்பியும் இருந்தேன்.

இரண்டு ஏழலில் (வாரத்தில்) மடல் (கடிதம்) ஒன்று வந்தது. தங்களுக்குக் கிடைத்த Microsoft Lottery பரிசைத் தாங்கள் பெறுவதற்கு கூரியர் செலவாக 2000 பிரிட்டிஸ் பவுண்ஸ் (இலங்கைப் பணமாக 360000 உரூபா) அனுப்புமாறு கேட்கப்பட்டிருந்தது. பெண்டாட்டிக்கு நடந்ததைச் சொல்ல, அவளோ கன்னத்தில் அடிக்க வந்திட்டாள். "எவராவது ஏமாற்றுவாங்க... இருக்கிறதையும் இழந்து பிச்சை எடுக்கப் போறியா?..." என்று திட்டித் தீர்த்தாள்.

எங்கட உள்ளம் (மனம்) எப்போதும் உள (மன) நிறைவு அடைவதில்லை. அதற்கு நானும் புறம்போக்கல்ல! Microsoft Lottery பற்றி இலங்கைக்கான Microsoft Corporation கிளையில் நான் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டேன். "Microsoft Lottery என்பதெல்லாம் பொய்! நாம் அப்படி எதுவும் நடாத்துவதில்லை. போலி மின்னஞ்சல்களை நம்பி ஏமாறாதீர்கள். இப்படி அவர்கள் பணம் வசூலித்ததும் தங்களுடனான தொடர்பை முறித்துவிடுவார்கள்." என எனக்கு மதியுரை கூறினார்கள்.

அதன் பின்னர் தான், Inbox இற்கு வரும் மின்னஞ்சல்களில் போலி மின்னஞ்சல்கள் வரலாம் என நம்பினேன். போலி மின்னஞ்சல்களை வழங்கும் நிறுவனங்களும் இருப்பதாக உறுதிப்படுத்தினேன். எடுத்துக்காட்டுக்கு இரு முகவரியைத் தருகின்றேன்.


இனிய உறவுகளே! இவ்வாறு பல சாட்டுகளைக் கூறிப் பல வழிகளில் பணம் பறிக்க முயலலாம். தங்கள் தன் (சுய) விபரங்களை கேட்கும் எந்த மின்னஞ்சல்களுக்கும் பதில் வழங்கி ஏமாற வேண்டாம். சில மாதிரிப் படிவங்களை (Form) இங்கே இணைக்கின்றேன். இனியாவது இணைய வழியில் ஏமாற வேண்டாம். இணையத்தில் பெரும்பாலானோர் போலித் தகவலை வழங்கிப் பேணுகின்றனர். அதனால் தான், முகநூல் காதல் தோல்வியும் தற்கொலையும் தொடருகின்றன. போலி இணைய உறவுகளை நம்பி ஏமாறாதீர்கள். "ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் உருவாக இடமிருக்கே!" என்பதை மறவாதீர்கள்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

தென்றல்காற்று உன்னை உரசும் வேளை


முரளி சொன்னால் புரளி கிடையாது
முழுக்க உண்மை தான் தனபாலா!
மூங்கில்காற்று முரளியின் எண்ணத்தில்
பதிவர்களின் உள்ளம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது...
தென்றல்காற்று உன்னை உரசும் வேளை
பதிவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வீர்...
திண்டுக்கல் தனபாலன் வரவின்றி - 2016 இல்
தமிழகத்தில் பதிவர் திருவிழா நடக்காதாம்...
திண்டுக்கல் தனபாலன் பின்னூட்டம் இன்றி
உலகத் தமிழ் வலைப்பூக்கள் அழுகின்றன...
வலைத் தொழில்நுட்ப வழிகாட்டியே - உன்
வருகை இன்றி வாடி நிற்பது - சிறந்த
குறள், பாட்டு, படம் கலந்த - உந்தன்
கலக்கல் பதிவை நம்பிய வாசகர்களுமே...
சாண் ஏற முளம் சறுக்க வைக்கும்
சேற்றுவழி பயணிப்பது தான் வாழ்க்கை - அந்த
வாழ்க்கையில் தடங்கல் என்றால் - உனக்கு
உதவிட நட்புகள் நிறையவே உள்ளன...
மூங்கில்காற்று முரளியின் எண்ணத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட
பதிவர்களின் உள்ளங்களை எண்ணி - தங்கள்
எண்ணத்தில் மாற்றம் வரவேணும் - அதனால்
முகநூல் சென்றோரும் வலைப்பக்கம் வரணும்
உலகத் தமிழ் வலையுலகம் உயிர்பெற
திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வரவு
காலத்தின் தேவை என்பேன் - இது
முரளிதரனின் பதிவிற்கு விளம்பரமல்ல - இது
முரளி சொன்ன பதிவர்களின் எதிர்பார்ப்பை
நானும் உறுதிப்படுத்த உரைக்கின்ற கருத்தே!
வீசும் மூங்கில்காற்றைத் திருப்பி விடுகிறேன்;
அன்பு அன்பரே!
திண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்
அன்புடன் உந்தன் வரவை எதிர்நோக்கும் வலைப்பூ நண்பர்கள்! 

வியாழன், 20 அக்டோபர், 2016

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 02

"எல்லோருக்கும் வணக்கம்!
இன்றைய நாளில்
எனக்கும் உங்களுக்கும்
வெற்றிகள் வந்து குவிய
இறைவன் துணை நிற்பார்!" என
Viber, Whatsup, twitter,
Facebook, g+ போன்ற குழுக்களில்
நாம்மாளுங்க இறங்கி
மற்றவங்களையும் எழுப்பிவிடுவாங்க!
நேரம், காலம் தப்பாமல்
தொல்லை தருவோருக்கு என்றே
"சொந்தமாகச் சிந்திக்காமல்
தன்திறனை வெளிப்படுத்தாமல்
நேரம், காலம் பார்த்து
மாற்றாரின் எதனையும் பொறுக்கி
மீள்பதிவு, பகிருதல் மட்டுமன்றி
படித்ததில் பிடித்ததது என்றும்
அடிக்கடி குழுக்களில் பதிவிடுவோரே
வலைப்பூ ஒன்றை ஆக்கி - அதில்
இப்படிப் பதிவிட்டால் - தங்களுக்கு
மதிப்புக் குறைந்தா போகும்?" என
ஒருவர் பாய்ந்தெழுகின்றார்! - அவர்
கூற்றுக்குப் பதிலாக - நானும்
"படித்ததில் பிடித்தது" என்றாலும்
"பார்த்ததில் விரும்பியது" என்றாலும்
பகிர்ந்தவருக்கும் பெயர் இருக்கும்
சொந்தமாகப் படைத்ததைப் பகிர
நேரம் இல்லாத போதும்
படித்ததில், பார்த்ததில்
பிடித்ததை, விரும்பியதைப் பகிர
குறைந்த நேரம் போதுமே!
எப்படியோ குழுக்களில் முடிந்ததை
வலைப்பூ ஒன்றை ஆக்கி - அதில்
பதிவிட்டும் பகிர்ந்தும் மகிழலாமே!
என்றவாறு உங்களை அழைக்கின்றேன்!
"வலைப்பூவில் எழுத வாங்க" என்றதும்
என்னைப் பார்த்து - எல்லோருமே
சிரி! சிரி! என்று சிரித்தார்கள்...
அதனைக் கண்டு - நான்
"சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் - அது
அறியாதவர்கள் தெரிவாகட்டும்...
சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும் - அது
உணர்ந்தவர்கள் உரிமையாகட்டும்
தன்னம்பிக்கை இருந்தால்
நாமும் துணிந்து முன்னேறலாம்!" என்று
என் கைவண்ணத்தைக் காட்டினேன்!
"கணவனின் காலை
மனைவி பிடித்துவிட்டால்
செல்வம் பெருகும்" என
வாட்சப்பில் படித்தது நினைவில் வர
என் வீட்டில் எப்படி என
எண்ணிப் பார்த்த வேளை
"என் மனைவி செல்லமாக
காலையும் பிடித்து விடுவாள்
பதிலுக்குச் சொல்லாமலே
கன்னத்தைப் பொத்தியும் அடிப்பாள்
என் பாடு திண்டாட்டம் தான் - ஆகையால்
பிச்சைக்காரனாகவே
நான் இருந்து விடுகின்றேன்!" என
என் கைவண்ணம் வெளிப்படுத்தியதே!
"பணம் பத்தும் செய்யும்" என
பலரும் அடிக்கடி சொல்வதுண்டு...
"பணம் - எவரை
உருப்படியாக இருக்க விடுகிறது
உலக அழிவும் பணத்தாலே தான்!" என
நானும் கிறுக்கி முடித்தேன்!
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தான்
சின்னதாய் மாற்றாரின் பதிவுகளை
பொறுக்கி, மாற்றிக் கிறுக்குபவரென
எண்ணிவிடாதீர்கள் - அன்றைய
பாவரசர் கண்ணதாசன் அவர்களோ
தேவாரம், திருவாசகம், திருப்புகள்,
ஔவை மற்றும் கம்பர் பாடல்கள் என
பல நூறு இலக்கியங்களில் இருந்து
எத்தனையோ முத்துக்களைப் பொறுக்கி
அத்தனையும் அள்ளித் தெளித்தாரே!
கண்ணதாசன் அவர்களின்
இடத்தை நிரப்ப - இன்று வரை
இன்னொருவர் பிறக்கவில்லையே!
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே!
அடடே! நீங்களும் தான்
அப்படி எழுதலாமென்று தான்
இப்படி எழுதினேன் - என்றாலும்
எடுத்துக்காட்டிற்கு
ஒன்றைப் பொறுக்கிப் பகிருகிறேன்!
ஊற்று வாட்சப் குழுமத்தில்
மருத்தவர் சரஸ்வதி அவர்களால்
பகிரப்பட்ட விழிப்புணர்வுச் செய்தியை
தங்களுடன் பகிருகிறேன் பாரும்!
"நம்மட உயிரைத் தான்
நாங்க பேணாமல் தான்
இருந்து விட்டு - நம்மட
சாவுக்குக் கடவுள் தான்
காரணமெனப் பழி போடலாமோ?
மின் இணைப்பு உள்ள - எந்தக்
கருவியுடனும் உடலுறவு வைக்காதீர்கள்...
ஈற்றில் உயிர் இல்லாமல் போகலாம்.
சிலவேளை
உடலும் எரிந்தும் சாம்பலாகலாம்." என
என் கருத்தையும் சொல்லிப் பகிருகிறேன்!

மக்களாய வலைத்தளங்களில் எழுதிய கிறுக்கல்களைத் தொகுத்து எழுதியது.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தமிழை ஊட்டிவிடாத தாய்மாருக்காக...

நான் ஓர் ஒளிஒலி (Video) படம் பார்த்தேன்.
ஜேர்மன் பெண்மணி தமிழ் பேசுகிறார். - அவர்
தமிழ் ஆசிரியை ஆகவும் இருக்கிறார்! - அந்த
நேர்காணல் படத்தில் கேள்வி கேட்டவர்
"தமிழைப் படித்த நீங்கள் கூட - உங்கள்
தாய்மொழியை (டொச்சு) மறந்ததில்லையா?" என
ஒரு கேள்வியைக் கேட்டு இருந்தாராம்! - அதற்கு
"தமிழரைப் போலவா..." நானும் மறப்பேன் என
நறுக்காகப் பதிலை இறுக்கி இருந்தாராம்! - அப்ப
பிறமொழியைப் படித்த தமிழர் எல்லோரும் - தங்கள்
தாய் மொழியை மறந்து விடுவதாய் - நம்ம
தமிழை ஊட்டிவிடாத தாய்மாருக்காக - அந்த
ஜேர்மன் பெண்மணி சொல்லி இருப்பாரே! - அவர்
தாய் மொழியை அறியாத ஒருவர் - எப்படி
பிறர் மொழியைக் கற்று அறிவாரென - அவர்
நையாண்டிக் கேள்வியும் எழுப்பி விட்டாரே!

பிறமொழியைப் புழக்கத்தில் வைத்திருந்தால் - நம்ம
தாய்மொழி (தமிழ்) அறிவு பழக்கத்தில் வராதே! - அப்ப
இப்படிப் போனால் தமிழ் சாகுமா என
நேர்காணல் படத்தில் கேள்வி கேட்டவர்
போட்டு உடைக்கப் பார்த்த அம்மணி - சிலரால்
தமிழ் வளம் குன்றலாம் என்றும் - பலரால்
தமிழ் வாழும் என்றும் நம்புகிறாராம்! - அவர்
தமிழ் ஆசிரியை என்ற நிலையில் - நம்மாளுங்க
தமிழ் வளம் பேணுவது எப்படியென - அவர்
எப்படி எமக்குப் படிப்பிக்கிறார் என்பதை - அவரது
நேர்காணல் படத்தைப் பார்த்து அறியுங்களேன்!

வியாழன், 13 அக்டோபர், 2016

நல்லதையே எண்ணுங்கள்

எதை நாம்
அடிக்கடி எண்ணுகிறோமோ - அது
எமது உள்ளத்தில்
ஆழமாகப் பதிந்து விடுகிறது.  - அந்த
ஆழமாகப் பதிந்த எண்ணங்களே
எமது நடத்தைகளாக வெளிப்படுகிறது!
எனவே தான் - நானும்
நல்லதையே எண்ணுகிறேன் - எப்பவும்
எனக்குத் தெரியாமலே வெளிப்படும்
எனது நடத்தைகள்
நன்நடத்தைகளாக இருக்க வேண்டுமென்றே!
எனக்குத் தெரியாமலே வெளிப்படும்
எனது நடத்தைகள்
கெட்ட நடத்தைகளாக இருக்காமல் பேண - நான்
எப்பவும் கெட்டதைத் தவிர்த்து வருகிறேன்! - ஏனென்றால்
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறதேயென - எவரும்
காறித் துப்பிக் கழித்து விட்டு
எல்லோருமாக - என்னை
ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று அஞ்சியே!
வஞ்சிக்கொடி எவளாச்சும்
நெஞ்சுக்குள்ளே குடியிருக்க விரும்பினாலும் - அவள்
பார்வைக்கு - உங்கள் நடத்தை
நன்நடத்தையாக அமையவோ...
எந்த ஆணும் உற்று நோக்கினாலும் - உங்கள் 
நடத்தைகளைக் கண்டதும்
உங்களை விரும்பாமல் செல்லவோ
இன்றைய இளசுகளே இடமளிக்காதீர்கள்!
எங்கேயும் எப்போதும்
கெட்டவை தென்பட்டாலும் கூட
எந்நேரமும்
நல்லதையே எண்ணுங்கள் - என்றும்
உங்களை அறியாமலே - உங்கள்
நடத்தைகள் நல்லதாக வெளிப்பட
போட்டி போட்டுக்கொண்டே -  உங்களை
எல்லோருமே விரும்புவாங்களே!

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் நினைவுகளைப் பகிருகிறேன்.

எனது தாய் மண்ணில், நான் பிறந்த ஊரில் பிறந்த தம்பி அஸ்வின் சுதர்சனை நான் நேரில் கண்டதுமில்லை; கதைத்ததுமில்லை. நம்நாட்டு இடப்பெயர்வுகள் தான் காரணம். இருந்தும் ஊடகவியலாளன், சித்திரக் கலைஞன் (காட்டூனிஸ்ட்), குறும்திரைப்பட இயக்குனர் எனப் பலதுறை ஆற்றலாளனாக எனது ஊருக்கும் எனது நாட்டிற்கும் உலகத் தமிழருக்கும் மின்னினார். ஆண்டவன் இளம் அகவையிலேயே அவரை அழைத்துவிட்டான். அவரது இழப்பை ஈடு செய்ய இயலாது. எனினும் அவரது வெளியீடுகளில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்நோக்கத்தைக் கருத்திற் கொண்டு, அவரது சில பதிவுகளைத் தொகுத்து மின்நூலாக்கி உள்ளேன்.

மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் தனது நேர்காணல் ஒன்றில் ஈழத்து மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களே தனது வழிகாட்டி என்று தெரிவித்திருந்தார். அவரது ஊக்கப்படுத்தலே தனது வளர்ச்சிக்கு உந்துசக்தி என்றும் தெரிவித்திருந்தார். எனது இலக்கிய முயற்சிகளின் வழிகாட்டியும் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களே! புதுக்குடியிருப்பில் இருந்த வேளை மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களோடு ஈழநாடு பத்திரிகை ஊடாக முதன் முதலில் அடையாளம் காட்டிவிட்டார். பின் ஈழத்து முன்னணி நாளேடுகளில் முத்திரை பதித்துள்ளார்.


இலங்கை ஊடகங்களில் பணியாற்றுவதென்பது கத்தியின் கூர் விளிம்பில் நடப்பது போலத் தான் இருக்கும். இங்கே கருத்துகளைக் கவனமாகக் கையாளத் தெரிந்தாலும் ஊடகக்காரனுக்குத் தற்காப்புத் வேவைப்படுகிறது. இந்நிலை அறிந்தும் தம்பி மாதகல்வாசி அஸ்வின் சுதர்சன் துணிச்சலுடன் ஊடகங்களில் பணியாற்றி வெற்றி பெற்றவர் என்பதால் அவரது பதிவுகளை உலகெங்கும் வாழும் தமிழர் அறியும் வண்ணம் அவரது நினைவாக இம்மின்நூலை வெளியிட்டுத் தங்களுடன் பகிருகிறேன்.



இம்மின்நூலைப் பதிவிறக்க கீழ்வரும் இணைப்பையும் பயன்படுத்தலாம்.
https://app.box.com/embed/preview/jo8nbovx6xlrm449l6lo6zfel0hj3et6