Translate Tamil to any languages.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தமிழை ஊட்டிவிடாத தாய்மாருக்காக...

நான் ஓர் ஒளிஒலி (Video) படம் பார்த்தேன்.
ஜேர்மன் பெண்மணி தமிழ் பேசுகிறார். - அவர்
தமிழ் ஆசிரியை ஆகவும் இருக்கிறார்! - அந்த
நேர்காணல் படத்தில் கேள்வி கேட்டவர்
"தமிழைப் படித்த நீங்கள் கூட - உங்கள்
தாய்மொழியை (டொச்சு) மறந்ததில்லையா?" என
ஒரு கேள்வியைக் கேட்டு இருந்தாராம்! - அதற்கு
"தமிழரைப் போலவா..." நானும் மறப்பேன் என
நறுக்காகப் பதிலை இறுக்கி இருந்தாராம்! - அப்ப
பிறமொழியைப் படித்த தமிழர் எல்லோரும் - தங்கள்
தாய் மொழியை மறந்து விடுவதாய் - நம்ம
தமிழை ஊட்டிவிடாத தாய்மாருக்காக - அந்த
ஜேர்மன் பெண்மணி சொல்லி இருப்பாரே! - அவர்
தாய் மொழியை அறியாத ஒருவர் - எப்படி
பிறர் மொழியைக் கற்று அறிவாரென - அவர்
நையாண்டிக் கேள்வியும் எழுப்பி விட்டாரே!

பிறமொழியைப் புழக்கத்தில் வைத்திருந்தால் - நம்ம
தாய்மொழி (தமிழ்) அறிவு பழக்கத்தில் வராதே! - அப்ப
இப்படிப் போனால் தமிழ் சாகுமா என
நேர்காணல் படத்தில் கேள்வி கேட்டவர்
போட்டு உடைக்கப் பார்த்த அம்மணி - சிலரால்
தமிழ் வளம் குன்றலாம் என்றும் - பலரால்
தமிழ் வாழும் என்றும் நம்புகிறாராம்! - அவர்
தமிழ் ஆசிரியை என்ற நிலையில் - நம்மாளுங்க
தமிழ் வளம் பேணுவது எப்படியென - அவர்
எப்படி எமக்குப் படிப்பிக்கிறார் என்பதை - அவரது
நேர்காணல் படத்தைப் பார்த்து அறியுங்களேன்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!