Translate Tamil to any languages.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

நல்ல நண்பர்கள் தேவை!


2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி ஆசிரியப்பா - மரபுக்கவிதைப் போட்டி அறிவிப்புச் செய்தேன். ஒருவரும் பங்கெடுக்காமை துயரம் தருகிறது. மின்னஞ்சலில் அனுப்பாது கருத்துக்களத்தில் பதிவு செய்யுமாறு கேட்டது தவறோ தெரியவில்லை. நான் தொடர்ந்தும் வலைப்பக்கம் வருவேன். முகநூலில் மூழ்கியோரை வலைப்பக்கம் இழுத்துவர முயற்சிப்பேன்.
இலங்கையில் Facebook, Instagram, Youtube, whatsup, viber தடை. அப்ப வலைப்பக்கம் வாங்க என்றழைக்கிறது இனிய வலைப்பூக்கள்.


நல்ல நண்பர்கள் தேவை!

நண்பர்கள் எம்மை நாடி வரலாம்.
நண்பர்களைத் தேடி நாம் போகலாம்.
"ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூட
ஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!" என
பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்!
நண்பர்களை அணைக்கத் தான்
நானும் விரும்புகின்றேன்.
நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும்
நானும் ஒதுங்குகின்றேன்.
எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்
எச்சரிக்கையாகப் பழகுகின்றேன்.
நண்பர்களே வேண்டாமென
நானும் ஒதுங்கவில்லை - இத்தால்
நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன்.
நண்பர்களால் வானுயரப் புகழீட்டிய
நண்பர்களால் தான் உணர்ந்தேன்
நண்பர்கள் எனக்குத் தேவை என்றே!
நண்பர்கள் இல்லையென்றால் - தனக்கு
உளநோய் தான் வந்திருக்குமென
நண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன்
நண்பர்கள் கூட நல்மருந்தென்றே!
என்னை நண்பர் ஆக்குங்கள்...
என்னை எதிரி ஆக்காதீர்கள்...
நான் எதிரியாவதை விட
நல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்!
நல்ல நண்பர்களால்
நானும் நீடூழி வாழலாமென்ற
தன்நலம் கருதியே அழைத்தேன்
நாளையாவது நல்ல நண்பர்களாக
நாமிருக்கலாமென்றே!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

இலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே!

உலகெங்கும் வாழும் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் எமது இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


உலகம் போகிற போக்கில தான்
முன்னேறுவது நாங்களா தமிழா!
பலப்பல நுட்பங்கள் தான்
வருவதைத் தான் பாரு தமிழா!
தமிழ்மொழி வாழத் தான்
நுட்பங்கள் தான் உதவுமா தமிழா!
பேசுகின்ற மொழிகள் தான்
அடுத்தடுத்து அழிகிறதே தமிழா!
தேன்தமிழ் மொழி கூட
வலுவிழப்பதைப் பாரு தமிழா!

தாய்மொழி வாழத் தான்
இலக்கியம் வாழவும் வேணும் தமிழா!
பிள்ளையைப் பெற்றால் கூட
தமிழூட்டி வளர்க்கவும் வேணும் தமிழா!
இளசுகளுக்கு மொழிப்பற்றுத் தான்
நெஞ்சிலே ஊறவும் வேணும் தமிழா!
உலகெங்கும் இளசுகள் தானே
இலக்கியம் பரப்பவும் வேணும் தமிழா!
தமிழுலகம் மலரத் தானே
மொழிவளம் பேணவும் வேணும் தமிழா!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

தமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்



தமிழக உறவுகளே!
தமிழகத் தேர்தல் வந்தால்
வாக்கு விற்பனை தான் பேசுபொருள்!
பணமீட்டி வாக்குப் போட்டு
தமிழக அரச மொழி தமிழை
நடைமுறைப்படுத்த இயலவில்லையே!
பணமீட்டி வாக்குப் போட்டு
தமிழக மக்கள் மேம்பாடு அடைய
உண்மையான அக்கறையாளர்களை
உங்களால் தெரிவுசெய்ய முடியவில்லையே!
பணமீட்டி வாக்குப் போட்டு
தமிழக மக்களின் எதிர்காலத்தை 
புதைக்கத்தானே முடிந்ததே தவிர
விடிவு காலம் கைக்கெட்டியதா?
தமிழக அரச மொழியாகத் தமிழை
ஏற்றுக்கொண்ட பின்னும் நடைமுறைப்படுத்தவோ
தமிழக மக்கள் மேம்பாடு அடைவதே
உயிரிலும் மேலான உயரிய பணியென்றோ
தமிழக மக்களின் எதிர்காலம் பொற்காலமாக
பிறமொழிக் கலப்பின்றி நற்றமிழ் உலகையாள
தமிழக மக்கள் உரிமையுடன் ஒன்றுபட்டு
வாக்கு விற்பனையில் ஈடுபடாது - அதாவது
பணமீட்டி வாக்குப் போடுவதை விட்டிட்டு
தமிழக மக்களின் பொன்னான எதிர்காலம் மின்ன
பலம் மிக்க உங்கள் வாக்கினைப் பயன்படுத்தி
சிறந்த தமிழக ஆட்சியை அமைக்க உதவுங்கள்!

தமிழை ஆட்சி மொழியாக்கிய நாள்


பணம் கூட இயமன் ஆகலாம்!
பணம் தானடா இயமன் தானடா! - அந்த
இயமனுக்கும் தான் தெரியுமடா !
                                                                    (
பணம்)

பணம் தானடா பிணம் ஆக்குமடா! - அந்த
சித்திர புத்திரனுக்கும் தான் தெரியுமடா !
                                                                    (
பணம்)

பணம்  தானடா உறவைச் சேர்க்குமடா
பணம்  தானடா மகிழ்வைத் தருமடா
பணம்  தானடா நாம்வாழ உதவுமடா
பணம்  தானடா உறவைப் பிரிக்குமடா
பணம்  தானடா துயரையும் தருமடா
பணம்  தானடா நாம்சாகப் போதுமடா
மனிதரைப் படைத்த கடவுளுக்கும் தெரியுமடா!
                                                                   (
பணம்)         
                                                                   (பணம்)

பணத்தைத் தானடா நம்பித் தானடா
பொருள், பண்டம் வேண்டுவர் தானடா
வேண்டிய கடனை வழங்கத் தானடா
காற்றில பறக்கிற பணம் தானடா
கைக்கு எட்டாமல் சாவதே வழியடா
சித்திர புத்திரன் கணக்குத் தானடா
இயமனுக்கு வேலையைச் சுகமாக்கத் தானடா
                                                                   (
பணம்)         
                                                                   (பணம்)

கடின உழைப்புக்குக் கூலி தானடா
காற்றில பறக்கும் பணம் தானடா!
ஏட்டில படித்தும் ஏறாத குணமடா
பணத்தைச் சேமிக்காத மனிதக் குணமடா!
பணம் இன்றிச் சாவோர் மனிதரடா
சித்திர புத்திரன் கணக்குப் பிழையாதடா
நாளும் இயமனுக்கு வேலை சுகமடா!
                                                                   (
பணம்)         
                                                                   (பணம்)