மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.
Translate Tamil to any languages. |
ஞாயிறு, 25 டிசம்பர், 2022
வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

செவ்வாய், 13 டிசம்பர், 2022
யாழ்பாவாணனுக்கு 'சொற்சுவைத் தேனி' விருது
இலங்கை - யாழ்ப்பாணம் - மாதகலில் இருந்து இயற் பெயர்: காசி.ஜீவலிங்கம், இலக்கியப் பெயர் (புனைபெயர்): யாழ்பாவாணன் ஆகிய நான் 1986, 1987 ்காலப் பகுதியில் இலக்கியம் படைக்கலாம் என முயன்று பார்த்தேன். சிறு நாடகம் முதலில் எழுதி, இயக்கி அரங்கேற்றினேன். எனது முதலாவது கவிதை 25/09/1990 யாழ் ஈழநாதம் ஏட்டில் வெளியானது. பின் வீரகேசரி ஏட்டிலும் வெளியானது. சில படைப்புகள் இந்திய மற்றும் இலங்கைத் தொகுப்பு நூல்களிலும் வெளியானது. 2010 இலிருந்து இணைய வழியில் எனது படைப்புகளைப் பகிர்ந்து உலகலாவிய வாசகரைப் பேணி வருகிறேன்.
2020 தீநுண்மி (கொரோனா) தொற்றுப் பரவல் மற்றும் ஆள் முடக்கம் காலப் பகுதியில் இணைய வழிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அந்த வகையில் நானும் இரண்டாண்டுகள் இலக்கியப் பயிலரங்குகள் நடாத்தி வந்தேன். ஏனைய குழுக்களின் இணைய வழிக் கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றியிருந்தேன். அந்த வகையில் இந்திய-தமிழக தேனித் தமிழ்ச் சங்கம் எனக்கு '‘சொற்சுவைத் தேனீ'' எனும் விருதினை வழங்கியிருக்கிறது.
தேனித் தமிழ்ச்சங் கமேதந்த சான்றிதழ்
தேடியே வந்ததென் கைக்கு.
{இரு விகற்பக் குறள் வெண்பா}

ஞாயிறு, 15 மே, 2022
இலங்கை எங்கும் தான்தீ பரவிற்றே!
அனுமனின் வாலில் யாரோ தீவைக்க
அனுமனோ இலங்கை
எங்கும் தான்
தன்வாலால்
தொட்டுத் தொட்டுத் தீமூட்டினான்.
சிங்கள மக்களோ
அமைதிவழி போராட
மகிந்தரோ அடக்க
முனையத் தான்
இலங்கை எங்கும்
தான்தீ பரவிற்றே!
(வசன கவிதை போன்று)
பிள்ளையையும்
கிள்ளிவிட்டிட்டு
தொட்டிலையும்
ஆட்டிவிட்டால்
பிள்ளை நித்திரை
கொள்ளுமோ?
09-05-2022 கொழும்புச் சூழலைப்
பார்த்த
உலகாளும் கடவுள்
சிங்கள அரசியல்
தலைவர்களையா
போராடும் சிங்கள
மக்களையா
பார்த்துக்
கேட்டிருப்பார்
யாராவது
அறிந்திருந்தால்
எல்லோருக்கும்
பகிர்ந்து உதவலாமே!
(வசன கவிதை போன்று)
சிங்கள மக்களின்
வாக்கினைப் பெற்ற
தனிச் சிங்களத்
தலைவர்களே!
சிங்கள மக்களின்
விருப்பினை
கேட்டறியாத
சிங்களத் தலைவர்களே!
போராடும் சிங்கள
மக்களை
போராடாமல்
ஒதுங்கிச் செல்ல
படைப்பலத்தைக்
காட்டலாமோ?
அடுத்த ஆண்டு
அடுத்த தேர்தலில்
யாருக்கு
வாக்குப் போடுவதென
மக்களுக்கு
அச்சமூட்டி அறிவூட்டினீரோ?
அடுத்த ஆண்டு
அடுத்த தேர்தலில்
உங்கள் நிலைமை
என்னவாகுமென
பொறுத்திருந்து
தான் பார்ப்போமே!
(வசன கவிதை போன்று)
நற்பதவி தானுயரத்
தான்பணிவு தானுணரா
எப்பதவி யில்இருந்தும் வீண்
(இரு விகற்பக் குறள்
வெண்பா)
பதவிதான் உயரலாம்
கண்டியளோ
பணிவுதான்
வரவேணும் என்பார்
பணிவுக்கே இடம்
இல்லையா
பதவியில் இருக்க
இயலாதே
(தன்முனைக் கவிதை)
மக்களின்
வாக்குகளைப் பெறும் போது
மக்களின்
கால்களில் விழுந்து கும்பிட்டாங்க…
நாடாளுமன்ற
நாற்காலியில் இருக்கும் போது
மக்களின்
விருப்புகளைக் கேட்டு அறியல…
மக்கள்
எழுச்சியைக் கூடத் தான்
சிறு குழு
முயற்சி என்றார்களே…
ஏவலாளிகளை
ஏவிவிட்டுத் தான்
மக்கள்
எழுச்சியை முடக்கத் தான்
முயன்ற பின்னர்
தான் கண்டனரோ
மக்கள்
எழுச்சிக்குள்ளே
தாங்கள் தான்
மூழ்குவோமென்று!
(வசன கவிதை போன்று)
பெரும்பான்மை
இனத்தவர்கள்
தமது பக்கம்
தவறில்லையெனக்
காட்ட
சிறுபான்மை
இனத்தவர் மீது
(வடகிழக்கார், மலையகத்தார், முஸ்லிம்களென)
தங்கள்
வன்முறையைத் திருப்பிவிடுவது
அமைதியான, ஐக்கிய இலங்கையை
கட்டியெழுப்ப
ஒருபோதும் உதவாது!
காலிமுகத்திடலில்
தொட்டு
நாடெங்கும்
வன்முறையைத் தூண்டுவதும்
அமைதியான, ஐக்கிய இலங்கையை
கட்டியெழுப்ப
ஒருபோதும் உதவாது!
வன்முறைகளைத்
தூண்டாது
அமைதியான
முறையில் தான்
வளம்மிக்க, அமைதியான
ஐக்கிய இலங்கையை
உருவாக்க
சிங்கள மக்களின்
உளப்பாங்கு
மாறவேண்டும் -
அப்பதான்
காலிமுகத்திடலில்
எழுச்சி வெல்லும்!
(வசன கவிதை போன்று)

வெள்ளி, 15 ஏப்ரல், 2022
குட்டிக் காணொளிகள் ஊடாகச் சிந்திப்போம்
குறும் காணொளிகள் என்றால் ரிக்-ரொக் (டிக்-டொக்) ஊடகம் நினைவுக்கு வரும். உங்கள் யாழ்பாவாணனும் 'வாழ்தல் பற்றிய சிந்தனை' என்ற தொடர் காணொளிகளைப் பகிருகிறேன். நீங்களும் ரிக்-ரொக் (டிக்-டொக்) பயனராயின் என்னையும் நண்பராகச் சேருங்கள்.
@yarlpavanan வாழ்தல் பற்றிய சிந்தனை
♬ original sound - Kasirajalingam Jeevalingam
இரண்டு காதல், ஒரு வாழ்வு பற்றிய காணொளி
@yarlpavanan வாழ்தல் பற்றிய சிந்தனை
♬ original sound - Kasirajalingam Jeevalingam
100 விளுக்காட்டில் 90 வாழாமல் 10 வாழ்வதா பற்றிய காணொளி
@yarlpavanan வாழ்தல் பற்றிய சிந்தனை
♬ original sound - user9484992544515 - Kasirajalingam Jeevalingam
தங்கள் வழிகாட்டல்களையும் மதியுரைகளையும் பின்னூட்டமாக இடுங்கள்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
ஒரு சொல் ஒரு படம் ஒரு கருத்து - மீம்ஸ்
விளக்குப் பேசினால்...
மேற்படி மீம்ஸ்ஸை வைத்து முகநூலில் "கவிதை அரங்கேறும் நேரம்" குழுவினால் கவிதைப் போட்டி நடாத்தப்படுகிறது. நீங்களும் பங்கு பற்றலாமே!
சனி, 26 பிப்ரவரி, 2022
காதல் பற்றிய காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)

ஞாயிறு, 2 ஜனவரி, 2022
பண்டிகைக் கால வாழ்த்துகள்
இப்பவெல்லாம் காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) என்ற மின் இலக்கியமே அதிகமாகப் பேசப்படுகிறது. எனது புதிய வலைப்பூவில் (https://ypvnjokes.blogspot.com/) அதனைக் கையாளுகிறேன்.
வாழ்த்துகள் பற்றி நானாக்கிய காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) ஒன்றைப் பாருங்கள்.
கிறிஸ்மஸ் (நத்தார்) வாழ்த்துகள், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள், போகிப் பொங்கல், தைப்பொங்கல், பட்டிப் பொங்கல், காணும் பொங்கல் எனப் பல பண்டிகைகள் நீளும். நமது உறவுகளை வலுப்படுத்தவே பண்டிகைக் கால வாழ்த்துகள் உதவுகின்றன. அதற்கமைய ஆக்கிய காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) இதுவாகும்.
அதேவேளை இந்தப் பண்டிகைக் கால வாழ்த்துகள் தெரிவிக்கும் போது இன்னொன்றையும் பகிரலாம்.
வாசிப்பின் பயனை விளக்கி, வாசிக்க ஊக்குவிப்பதைத் தூண்டும் காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) இதுவாகும். நல்ல படைப்பாக்க முயற்சிக்கு வாசிப்பு ஓர் ஊக்க மாத்திரையே. பண்டிகைக் கால வாழ்த்துகளுடன் நல்லுறவைப் பேண முயல்வதோடு நல்ல எண்ணங்களைப் பகிருவதன் மூலம் நல்ல மக்களாய (சமூக) கட்டமைப்பை உருவாக்க உழைக்கலாம்.
