Translate Tamil to any languages.

உளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்

இன்று மருத்துவம் ஒரு வணிகம் (வியாபாரம்) ஆகிவிட்டது. பணமுள்ளவர் மருத்துவ நிலையம் ஒன்றை அமைத்து நம்பி வருவாய் ஈட்டுமளவுக்கு மருத்துவம் இன்று நல்ல வணிகம் (வியாபாரம்) ஆகிவிட்டது. அதற்கு ஒத்துழைக்க மருத்துவர்கள் இருக்கும் போது பணமுள்ளவர் மருத்துவ நிலையம் திறந்து வருவாய் ஈட்டலாம் தானே!

அன்றொரு காலம் மருத்துவர்களை கடவுளாகப் போற்றினர். ஆனால், இன்று மருத்துவரைச் சந்திக்க முற்பதிவுப் பணம்; மேலதீக நேர ஒதுக்கீட்டிற்கு சிறப்புப் பணம்; தனித் தனிச் சிகிச்சைக்கு தனித் தனித் தொகைப் பணம்; சிகிச்சைகள் நிறைவுற்றதும் நிறைவாகச் சிறு அன்பளிப்பு (டிப்ஸ்) எனப் பணத்தைக் கொடுத்து மருத்துவரைப் பாவிக்கலாம் என்ற நிலை வந்தாச்சு!

இலங்கைச் சட்டப்படி காலை அரச மருத்துவ நிலையத்திற்குள் நுழைந்தால் மாலை நான்கு மணிக்குப் பின் தான் மருத்துவர்கள் தனியார் மருத்துவ நிலையங்களில் பணியாற்றலாம். ஆகையால், மாலை நான்கு மணிக்குப் பின் இரவு பதினொரு மணி வரை தனியார் மருத்துவ நிலையங்களில் மருத்துவர்கள் நல்ல வருவாய் ஈட்டுகின்றனர்.

தனியார் மருத்துவ நிலையங்களில் பணம் திரட்டுவதே முதல் நிலையாகவும் ஆள் தப்பினாரோ சாவடைந்தாரோ அதெல்லாம் இரண்டாம் நிலையாகவும் பேணப்படுகிறது. மேலும் பல தகவலுடன் விரைவில் இப்பக்கம் மேம்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!