Translate Tamil to any languages.

நற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்

"பொய் அகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்         
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு         
முன்தோன்றி மூத்த குடி"          

என்று (தமிழர் தொன்மையையும் தமிழர் வீரத்தையும்) புறப்பொருள் வெண்பா மாலையிலே ஐயனாரிதனார் என்கின்ற புலவர் எழுதியதைச் சுட்டிக்காட்டி தமிழ் இனத்தின் தொன்மை பற்றி விளக்கியிருந்ததை ஓர் இணையத்தளத்தில் படித்தேன்.

"உலகெங்கிலும் தமிழர் வாழ்ந்தார்களா?" என்ற கேள்வி மேற்காணும் பாடலைப் படித்ததும் எழும். "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி எங்கள் தமிழ் குடி" என்று மேற்காணும் பாடலை வைத்துத்தான் சொன்னார்களோ தெரியவில்லை. அறிவியலில் மண் தோன்றுமுன் கல் தோன்றியதை ஒப்பிட்டு உலகிலேயே தொன்மை வாய்ந்த குடியினர் தமிழர் என்று விளக்கும் கருத்திது. இதன் அடிப்படையில் பார்த்தால் உலகெங்கிலும் தமிழர் வாழ்ந்திருக்கலாம் என்றே எண்ண முடிகிறது.

அறிஞர்களே! உங்கள் இணையப் பக்கங்களில் உலகெங்கிலும் தமிழர் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகளைப் பதிந்திருப்பின் அப்பக்கத்தின் இணைப்பைப் பின்னூட்டத்தில் பதிந்தால் பலருக்கு நன்மை தரும். நான் பல இணையத் தளங்களைத் துருவித் தேடிய வேளை 153 நாடுகளில் தமிழர் வாழ்கின்றமைக்கான/ வாழ்ந்தமைக்கான தகவலைப் பெற்றேன். அதனை உங்களுடன் கீழே பகிருகின்றேன்.

153 நாடுகளில் தமிழர் வாழ்கின்றனரா? நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கேள்வி இது. ஆயினும் சான்றுகள் உண்டு. இறுதியில் தரப்பட்டுள்ளது. உண்மையில் தமிழர் வாழும் நாடுகள் பற்றிப் பேசும் போது மலேசியா, கனடா, சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரித்தானியா (லண்டன்),  சுவிற்சர்லாந்து, நோர்வே, நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, பிஜி, மொரிசியஸ், சிசேல்ஸ், ரீயூனியன், கரிபியன் தீவுகள் (டிரினிடாட், ஜமைக்கா, சூரிநாம், கிரானடா, மார்டினிக்தீவு) , தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா எனப் பட்டியல் படுத்தப்படுகிறது.
சான்றும் விளக்கமும் அறியக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.

மேலும் மியன்மார்(பழைய பெயர் பர்மாநாட்டிலும் தமிழர் இருந்தனராம்.
சான்றும் விளக்கமும் அறியக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.

என்றாலும் பெல்ஜியம், இத்தாலி, ஸ்கொட்லாந்து, சுவீடன், பின்லாந்து, அயர்லாந்து, சைப்பிரஸ், அரபு நாடுகள்(டோகா, கட்டார், குவைத்து, ஓமான், அபுதாபி, சவுதி அரேபியா, போன்ற), மாலைதீவு, அந்தமான் தீவு எனப் பல நாடுகளிலும் தமிழர் உள்ளனர்.  இவ்வாறு 150 நாடுகளிற்கு மேல் தமிழர் வாழலாம் எனக் கருத இடமுண்டு. ஆனால், என்னால் சான்றைத் தரமுடியவில்லை.

உலகில் தமிழ் தான் முதலில் தோன்றியிருந்தால், உலகெங்கும் தமிழர் பரந்து வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழர் எண்ணிக்கை குறைந்து வருவதனையும் தமிழ் மொழி கூட இன்னும் 30 ஆண்டுகளின் பின் புழக்கத்தில் இருந்து அகன்று விடும் என்ற கருத்து நிலவுவதையும் நாம் எல்லோரும் கருத்திற் கொள்ள வேண்டும். இதனடிப்படையிலேயே தூய தமிழ் பேணும் பணியை எல்லோரும் உணர்ந்து மேற்கொள்ளலாம் எனக் கருதியே இத்தளத்தை வடிவமைத்தேன்.

எப்படி இருப்பினும் தமிழ் இனி மெல்லச் சாகாது என்றும் தமிழை அழியாது பேணப் பல மூதறிஞர்களும் தமிழ் பற்றாளர் அமைப்புகளும் களத்தில் குதித்துள்ளனர். இதன் விளைவாக உலகெங்கும் தமிழர் தங்கள் தாய் மொழியைப் தங்கள் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தியமை இவர்களுக்குக் கிடைத்த முதற் படி வெற்றியாகும். இதனை மேலும் விரிவுபடுத்த இப்பதிவு உதவும் என நம்புகிறேன்.

அதாவது, முதலில் 150 நாடுகளிலும் உள்ள தமிழருக்கிடையே ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர், அவர்கள் மத்தியில் தூய தமிழ் பேணும் பணியை விளக்க வேண்ணடும். அதன் பின் முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் நடைமுறைப்படுத்த இறங்கலாம். அதுவரை இவ்வாறான பதிவுகளுக்கூடாகத் தெளிவுபடுத்தலாம் என எண்ணுகிறேன். இந்த என் கருத்தைக் கணக்கிலெடுக்காமல், நீங்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு தூய தமிழ் பேணும் பணியைச் செய்ய இறங்குவீர்களென நான் நம்புகின்றேன்.

தூய தமிழ் பேணும் பணியைச் செய்ய உலகம் முழுக்க உள்ள தமிழர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? தமிழரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் அறிஞர்களில் ஒருவரான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் படைப்பிலிருந்து :

நாட்டின் பெயர் தமிழ் அகர வரிசையில் தமிழில், அங்கு வாழும் தமிழர் தொகை (2008ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மதிப்பீடு) பின்னர் ஆங்கிலத்தில், அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை (2008ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மதிப்பீடு), என்பன தந்துள்ளேன். - மறவன்புலவு சச்சிதானந்தம்


முதலில் 149 நாடுகளைப் பார்ப்போம்.
எண்
நாடு
தமிழர் எண்ணிக்கை
ஆங்கிலப் பெயர்
மொத்த மக்கள் தொகை
1
அங்கோலா
10
Angola
18,498,000
2
அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்
200,000
United States of America
314,659,000
3
அயர்லாந்து
2,000
Ireland
4,515,000
4
அர்ஜென்ரினா
100
Argentina
40,276,000
5
அல்ஜீரியா
100
Algeria
34,895,000
6
அன்ரிகுவா - பார்புடா
1,000
Antigua and Barbuda
88,000
7
ஆப்கானிஸ்தான்
100
Afganistan
28,150,000
8
ஆர்மினியா
300
Armenia
3,083,000
9
ஆஸ்திரியா
1,500
Austria
8,364,000
10
ஆஸ்திரேலியா
100,000
Australia
21,293,000
11
இத்தாலி
5,000
Italy
59,870,000
12
இந்தியா
81,000,000
India
1,198,003,000
13
இந்தோனீசியா
300,000
Indonesia
229,965,000
14
இலங்கை
6,000,000
Sri Lanka
20,238,000
15
இஸ்ரேல்
100
Israel
7,170,000
16
ஈராக்
1,000
Iraq
30,747,000
17
ஈரான்
500
Iran
74,196,000
18
உகண்டா
100
Uganda
32,710,000
19
உக்ரெயின்
500
Ukraine
45,708,000
20
உஸ்பெகிஸ்தான்
300
Uzbekistan
27,488,000
21
எகிப்து
1,000
Egypt
82,999,000
22
எதியோப்பியா
100
Ethiopia
82,825,000
23
எமிரேட்ஸ், ஐக்கிய அரபு
200,000
United Arab Emirates
4,595,000
24
எரித்திரியா
100
Eritrea
5,073,000
25
எல்சால்வடோர்
100
El Salvador
6,163,000
26
எஸ்ரோனியா
500
Estonia
1,340,000
27
ஐஸ்லாந்து
25
Iceland
323,010
28
ஓமான்
50,000
Oman
2,845,000
29
கம்பூசியா
1,000
Cambodia
14,805,000
30
கயானா
10,000
Guyana
762,000
31
கனடா
300,000
Canada
33,573,000
32
கஸாக்ஸ்தான்
100
Kazakhstan
15,637,000
33
காட்டார்
10,000
Qatar
1,409,000
34
கானா
500
Ghana
23,837,000
35
கியூபா
100
Cuba
11,204,000
36
கிர்கிஸ்தான்
100
Kyrgyzstan
5,482,000
37
கிரிபாத்தி
25
Kiribati
98,000
38
கிரேக்கம்
10,000
Greece
11,161,000
39
கினீயா
1,000
Guinea
10,069,000
40
கினீயா பிஸ்ஸாவ்
100
Guinea-Bissau
1,611,000
41
குரோசியா
100
Croatia
4,416,000
42
குவாதமாலா
100
Guatemala
14,027,000
43
குவைத்
10,000
Kuwait
2,985,000
44
கென்யா
300
Kenya
39,802,000
45
கொங்கோ சயர்
25
Congo – Zaire
66,020,000
46
கொமொறொஸ்
100
Comoros
676,000
47
கொரியா, வட
100
North Korea
23,906,000
48
கொரியா,தென்
500
South Korea
48,333,000
49
கொலம்பியா
500
Colombia
45,660,000
50
சமோவா
100
Samoa
179,000
51
சவூதி அரேபியா
50,000
Saudi Arabia
25,721,000
52
சாம்பியா
2,500
Zambia
12,935,000
53
சான் மறினோ
25
San Marino
31,000
54
சிங்கப்பூர்
300,000
Singapore
4,737,000
55
சிம்பாப்வே
250
Zimbabwe
12,523,000
56
சியாரா லியோன்
1,000
Sierra Leone
5,696,000
57
சிரியா
500
Syria
21,906,000
58
சிலி
100
Chile
16,970,000
59
சீசெல்சு
9,000
Seychelles
84,000
60
சீனா
5,000
China
1,353,311,000
61
சுரினாம்
130,000
Suriname
520,000
62
சுலோவாக்கியா
100
Slovakia
5,406,000
63
சுலோவேனியா
100
Slovenia
2,020,000
64
சுவாசிலாந்து
5,000
Swaziland
1,185,000
65
சுவிற்சர்லாந்து
60,000
Switzerland
7,568,000
66
சுவீடன்
12,000
Sweden
9,249,000
67
சூடான்
100
Sudan
42,272,000
68
செக்
100
Czech
10,369,000
69
செர்பியா
200
Serbia
9,850,000
70
செனகல்
25
Senagal
12,534,000
71
சைப்ரஸ்
500
Cyprus
871,000
72
சோமாலியா
25
Somalia
9,133,000
73
டென்மார்க்
15,000
Denmark
5,470,000
74
தஜிக்கிஸ்தான்
100
Tajikistan
6,952,000
75
தாய்லாந்து
10,000
Thailand
67,764,000
76
தான்சானியா
250
Tanazania
43,739,000
77
துர்க்மெனிஸ்தான்
50
Turkmenistan
5,110,000
78
துருக்கி
500
Turkey
74,816,000
79
துனீசியா
100
Tunisia
10,272,000
80
தென் ஆபிரிக்கா
750,000
South Africa
50,110,000
81
தைவான்
100
Taiwan
25,300,000
82
நமீபியா
25
Namibia
2,171,000
83
நவுறு
100
Nauru
10,000
84
நியுசிலாந்து
30,000
New Zealand
4,266,000
85
நெதர்லாந்து
12,000
Netherlands
16,592,000
86
நேபாளம்
500
Nepal
29,331,000
87
நைஜர்
25
Niger
15,290,000
88
நைஜீரியா
2,500
Nigeria
154,729,000
89
நோர்வே
15,000
Norway
4,812,000
90
பராகுவே
25
Paraguay
6,349,000
91
பல்கேரியா
200
Bulgaria
7,545,000
92
பனாமா
500
Panama
3,454,000
93
பஹ்ரெயின்
7,000
Bahrain
791,000
94
பஹாமாஸ்
200
Bahamas
342,000
95
பாகிஸ்தான்
1,000
Pakistan
180,808,000
96
பாபுவா-நியுகினீயா
500
Papua-New Guinea
6,732,000
97
பார்படாஸ்
1,000
Barbados
256,000
98
பாலஸ்தீனம்
200
Palestine
3,336,000
99
பிரான்ஸ்
50,000
France
62,343,000
100
பிரிட்டன்
300,000
United Kingdom
61,565,000
101
பிரெஞ்சு கயானா பிரா.
1,000
French Guyana
170,000
102
பிரேசில்
100
Brazil
193,734,000
103
பிலிப்பைன்ஸ்
200
Philippines
91,983,000
104
பின்லாந்து
3,000
Finland
5,326,000
105
பிஜி
125,000
Fiji
849,000
106
புர்கினோ பாசோ
100
Burkina Faso
15,757,000
107
புறுணை
1,500
Brunei
400,000
108
பூடான்
100
Bhutan
697,000
109
பெர்முடா பிரி.
100
Bermuda
63,000
110
பெரு
100
Peru
29,165,000
111
பெல்ஜியம்
12,000
Belgium
10,647,000
112
பொலிவியா
1,000
Bolivia
9,863,000
113
பொற்சுவானா
1,000
Botswana
1,950,000
114
போர்த்துக்கல்
500
Portugal
10,707,000
115
போலாந்து
500
Poland
38,074,000
116
மசிடோனியா
100
Macedonia
2,042,000
117
மலாவி
500
Malawi
15,263,000
118
மலேசியா
2,250,000
Malaysia
27,468,000
119
மால்ரா
100
Malta
409,000
120
மாலி
250
Mali
13,010,000
121
மாலை தீவு
2,000
Maldives
309,000
122
மியான்மா
600,000
Myanmar
50,020,000
123
மெக்சிகோ
3,000
Mexico
109,610,000
124
மொல்டோவியா
25
Moldovia
3,604,000
125
மொறிசியசு
126,000
Mauritius
1,288,000
126
மொறித்தானியா
100
Mauritania
3,291,000
127
மொறொக்கோ
100
Morocco
31,993,000
128
மொனாகோ
50
Monaco
33,000
129
யப்பான்
200
Japan
127,156,000
130
யேமன்
500
Yemen
23,580,000
131
ரஷ்யா
5,000
Russia
140,874,000
132
ரினிடாட் - ரொபாகோ
100,000
Trinidad and Tobago
1,339,000
133
லக்செம்போர்க்
1,000
Luxembourg
486,000
134
லற்வியா
500
Latvia
2,249,000
135
லாவோஸ்
1,000
Lao
6,320,000
136
லிதுவானியா
100
Lithuania
3,287,000
137
லிபியா
500
Libya
6,420,000
138
லெசொத்தோ
500
Lesotho
2,067,000
139
லெபனன்
5,000
Lebanon
4,224,000
140
லைபீரியா
500
Liberia
3,955,000
141
வங்காள தேசம்
1,000
Bangladesh
162,221,000
142
வத்திக்கான் நகர்
20
Vatican City
1,000
143
வியற்னாம்
3,000
Viet Nam
88,069,000
144
ஜமைக்கா
30,000
Jamaica
2,719,000
145
ஜிபுற்றி
1,000
Djibouti
864,000
146
ஜெர்மனி
40,000
Germany
82,167,000
147
ஜோர்டான்
4,000
Jordan
6,316,000
148
ஜோர்ஜியா
25
Georgia
4,260,000
149
ஸ்பெயின்
500
Spain
44,940,000
விடுதலை பெறா ஆட்சிப் புலங்கள் நான்கைப் பார்ப்போம்.
எண்
நாடு
தமிழர் எண்ணிக்கை
ஆங்கிலப் பெயர்
மொத்த மக்கள் தொகை
1
சானல் தீவுகள் பிரி.
25
Channel Islands
145,000
2
நியு கலிடோனியா பிரா.
500
New Caledonia
250,000
3
றியுனியன் பிரா.
500,000
Reunion
782,000
4
ஜிப்றால்ரர் பிரி.
25
Gibraltor
27,000

தமிழர் தொகை பற்றிய இந்தக் கணிப்பு மேலும் திருத்தம் பெற நீங்கள் உதவலாம். உங்களுக்குத் தெரிந்தவருக்கு இந்த விவரம் தெரியலாம். விசாரித்துஉதவுக. நீங்கள் வாழும் நாடு மட்டுமல்ல, பிற நாடுகளின் விவரங்களையும் திரட்டலாம்.
தகவல்: பால்பழனி ; ஆதாரம்: சென்னை ஆன்லைன்.

இவ்வாறு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் 'என்வழி' தளத்திலிருப்பதை அப்படியே பொறுக்கித் தந்துள்ளேன்.
சான்றும் விளக்கமும் அறியக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.

இவ்வளவு இலட்சம் மக்கள் இத்தனை நாடுகளில் இருந்தும் 30 ஆண்டுகளின் பின் தமிழ் அழியுமா? 'இல்லை' என்று சொல்ல முடியாதுள்ளது. இத்தனை ஆட்களில் எத்தனை ஆட்கள் 'தமிழ் எழுதப் பேசத் தெரிந்தவர்களாக உள்ளனர்' என்பதை வைத்தே பதில் கூறமுடியும். எப்படியாயினும் தமிழ் தெரியாத தமிழர்களைத் தேடிப் பிடித்துத் தமிழ் கற்பித்தே ஆகவேண்டும். இல்லையேல் 'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்பதில் ஐயம் உண்டு. உலகம் எங்கும் தூய தமிழ் பரப்பிப் பேண நாம் எல்லோரும் ஒன்றுபடுவதன் மூலமே தமிழைச் சாகாமல் வாழ வைக்க முடியும்.


நானோ அறிவிற் சிறியன். எனது தூய தமிழ் பேணும் பணியை வெளிப்படுத்தப் பல நூல்களையோ பல இணையப் பக்கங்களையோ பார்வையிட்டுப் பொறுக்கித் தொகுத்த விரிப்புகளையே என்னால் தர முடிகிறது. இதனால் என் மீது சீறிப் பாய வேண்டாம். 'யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும்' என்பதற்கிணங்க எவரது பதிவைப் படித்தேனும் உலகெங்கும் வாழும் மக்கள் தூய தமிழைப் பேணினால் சரி. அதுவே இன்றைய தேவை.

2 கருத்துகள் :

 1. Solai.Thiyagarajan சொல்கிறார்: 5:43 பிப இல் செப்ரெம்பர் 9, 2014

  அன்பு ஐயா,
  எங்கள் மியன்மா நாட்டுத் தமிழர்களை தமிழுலகம் மறந்து புறக்கணித்து விட வேண்டாம் என்பதே அன்பு வேண்டுகோள். வளர்க நம் நட்பும்.
  என்றும் தமிழன்புடன்,
  சோலை.தியாகராசன்.
  Yangon,Myanmar.
  +95 943042105
  email: solai.thiyagarajan@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. 7:14 பிப இல் செப்ரெம்பர் 9, 2014

   தங்கள் வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.
   மிக்க நன்றி.

   நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!