Translate Tamil to any languages.

ஞாயிறு, 7 ஜூலை, 2019

குறள் பாவும் விரிப்புப் பாவும் - 1


கடலளவு தமிழ்


கடலெதுவும் நீந்துவோர்தான் நீந்தார்பார் ஒன்றை
கடலென்ற செந்தமிழை நோக்கு.
                                              (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

கடல் எதனையும்
நீந்தக் கூடிய எவரும்
ஒன்றை மட்டும் நீந்தமாட்டாரே!
அந்தக் கடல் தான்
செந்தமிழ் கடல்
தெரியாதோ நோ(உன)க்கு!


முகமூடிகள்

முகமூடி கள்தான் கனநாள்க ளுக்குத்தான்
எங்கே கிழியா திருக்கு.
                              (இரு விகற்பக் குறள் வெண்பா)

நடுவீதியில
கலகம் என்று வந்துவிட்டால் - அவரவர்
உண்மை முகத்தைக் காணலாம் தான்!
அப்ப தான்
முகமூடிகள் யாரென்று அறிகிறோம் நாம்!


வாழ்வா? காசா?

பணம்பத்தும் பண்ணும் அளவுக்கு உள்ளந்தான்
எவ்வளவு பண்ணும் உணர்த்து.
                                            (இரு விகற்பக் குறள் வெண்பா)

பணம் பத்தும் பண்ணும் என்பாங்க
உள்ளத்திலே நல்ல உள்ளம்
தங்களுடையது தான் என்பாங்க
கேள்வி ஒன்று தோன்றும் ஆங்கே!
எங்கே பணம் பண்ணும் அளவுக்கு
எவரது உள்ளம் தான்
என்னத்தைத் தான் பண்ணிக் கிழிக்கும்?
நல்லுறவுக்கு நல்ல உள்ளம் தானே!


காசில்லாதவன் மூஞ்சியை...

கண்ணாநீ இல்லையேல் நானில்லை என்றாளே
கையிலேகா சில்லையெனப் போய்!
                                          (இரு விகற்பக் குறள் வெண்பா )

வண்ண வண்ண ஆடையணிந்து
கிட்ட முட்ட வட்டமடித்து
தொடர்ந்து வந்த வாலை ஒருத்தியிடம்
5 சதம் 10 சதம் பிச்சை கேட்டேன்...
பிச்சைக்கார நாயையா பின்தொடர்ந்தேனென
கிட்டவும் நிற்காமல் ஓட்டம் பிடித்தாளே!


பணமென்றாள் பெண்ணும்...

கண்ணடித்துச் சுண்டியிழுப் பாள்காசு இல்லாட்டி
கண்வெட்டில் ஓடிடுவாள் காண்.
                                            (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

அடேய் தம்பி! காசில்லாட்டி
நீயடா செல்லாக் காசடா!
பெண்ணுக்குப் பின்னால ஓடியலையாமல்
நாலு காசுழைக்கத் தேடியலை!
நாலு காசுழைத்து வைத்திருந்தால்
நாளுக்குநாள் பெண்கள் உனைநாடுவரே!