Translate Tamil to any languages.
2-எளிமையான (புதுப்)பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2-எளிமையான (புதுப்)பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

காதல் பற்றிய சில வரிகள்

 👦👧👨👩👤👥👪

ஏன் காணும்
காதலிக்காமல் விட்டாய்? என்கிறாய்...
காதலில் குதித்தால்
பிச்சை எடுக்க வேண்டி வருமே!
ஆதலால், அந்தப் பக்கம்
நான் தலை காட்டவில்லைக் காணும்!
எந்தப் பெண்ணும்
கண்ணில் சிக்கவில்லையா? என்கிறாய்...
என்னைச் சுற்றி
பலர் வட்டமடித்தனர்...
பிச்சைக்காரன் ஆகக்கூடாதென
அவர்கள் வலையில் சிக்காமல்
தப்பிக்கொண்டேன் காணும்!
திருமணம்
எப்படி நடந்தது? என்கிறாய்...
எனது இழிநிலையை
இரண்டு கண்ணாலும் பார்த்த
ஒருவள் தான் தலையை நீட்டினாள்
என் நிலை அறிந்து உணர்ந்தவளென
அவள் கழுத்தில் தான்
தாலி கட்டினேன் காணும்!
திருமணமான பின்னரும்
காதலிக்கவில்லையா? என்கிறாய்...
என்னை அறிந்த இல்லாளை
நானும் காதலிக்கிறேன்!
எனக்காக இரங்கிய இல்லாளும்
என்னைக் காதலிக்கிறாள்!
கணவன் - மனைவி காதல்
திருமண முறிவுக்கு
ஒருபோதும் இடமளிக்காது காணும்!
என்னங்க - ஒரு
பதிலையும் காணோம்? என்றேன்...
திருமணத்திற்கு முந்தைய
காதலை விட
திருமணத்திற்குப் பிந்தைய
காதல் தான்
குடும்ப உறவை வலுப்படுத்துமென
என்னைக் கேள்வி கேட்டவர்
ஓடி ஒதுங்கினார் காணும்!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

கவனம் தேவை

 'அ' என்பவர் 'ஆ' வையும் 'இ' ஐயும் பிரித்தால் 'அ' உடன் 'ஆ'  சேரும் என்பது பொய். 'அ' என்பவர் 'ஆ' வை அதிகம் விரும்பினால் இணைவது உறுதி. ஆதலால் 'இ' விலகிச் செல்லக் கூடும். இந்தக் கதையைச் சொல்ல முயற்சித்த பதிவு இது.

👧👦❤

என்னை 

எவருடன் இருந்தும் பிரித்தாலும் கூட

பிரிந்தவரின் எண்ணங்கள் 

உள்ளத்தில் உருண்டு கொண்டிருப்பதால் 

என்னோடு புதியவர் இணைய

வாய்ப்பில்லைக் கண்டியளோ!


என்னோடு

புதியவர் ஒருவர் இணைந்துவிட்டால்

புதியவரின் செயல், குணம் அறிந்து 

என்னோடு இருந்த பழையவர்

என்னை விட்டுப் பிரியலாம் கண்டியளோ!


பழைய உறவைப் பிரிப்பது 

சுகமாக இருந்தாலும் கூட

புதிய உறவை இணைத்துக் கொள்வது

இயலாமல் போகவும் கூடும் என்றே

மூன்று கோணப் பார்வை 

எனக்கு உணர்த்துகிறது - ஆதலால் 

மாற்றாரைப் பிரிக்காமல் 

மாற்றாரை இணைக்க முயலும் காணும்!

சனி, 15 ஆகஸ்ட், 2026

செய்தி வாசிப்போம்

👨👩👧👤

இன்றைய செய்தி!

புலனாய்வுப் பிரிவு 

திடீர் பணக்கார உறவுகளைப் பிடித்து

எப்படி - தங்களால் 

திடீர் பணக்காராக முடிந்தது என்று 

விசாரணை செய்யப் போகிறார்களாமே!

பணம் வந்த வழியைக் கூறா விட்டால் 

பணத்தை அரசுடைமை ஆக்குவதும் 

தரம் வாய்ந்த தண்டனைக்கு 

ஆளை நீதிமன்றில் ஒப்படைப்பார்களாம்!

புலனாய்வுப் பிரிவு 

ஏழைகளைப் பிடித்து - அவர்களை

பணக்காரர் ஆவது எப்படி என்று 

தொழில் வழிகாட்டலைச் செய்யலாம் 

எதற்கும் இயலாதவர்களுக்கு

அரச உதவி பெற்றுக் கொடுக்கலாம் 

என்றெல்லோ

ஏழைகள் முன்னேற்ற முன்னணி 

ஒருவேளை உணவுக்குக் கெஞ்சி நிற்கின்றது!

ஆண்டவா! அளவுக்கு மிஞ்சி நீண்டவா!

ஏழைகளைக் கொஞ்சம் 

திரும்பிப் பார்க்க மாட்டாயா?

உன் மூச்சுக் காற்றுக் கூட

பணக்காரர் வீட்டுப் பக்கமாகவே வீசுகிறது!

எம்மைப் படைத்த ஆண்டவா!   

ஏழைகளை ஏன் படைத்தாய்? 

என்றல்லவா - உன்னிடம்

ஏழைகள் முன்னேற்ற முன்னணி 

ஒவ்வொரு நாளும் அழுது வடிக்கின்ற

கண்ணீரால் நாடே நனைகின்றது!

புதன், 15 ஜூலை, 2026

எந்தப் பொருத்தம் வேண்டும்?

 


கண்டதே கோலம் கொண்டதே காதல் 

என்பதும் பொய் தானே!

காதலைத் தேடிப் போனால் 

பொய்க் காதல் - அது 

இருவரையும் சேர்த்து வைக்காது!

காதல் ஒரு போதும் 

எங்களை நாடி வராதென்பது 

உலகில் பரவும் பெரிய பொய்!

நெடுநாள் பழகிய இருவருக்குள் 

ஏற்படும் ஒத்திசைவு, ஓரிணக்கப்பாடு

தானாக வந்த காதல் இல்லாமல் 

தேடிப் போய்ப் பிடுங்கிய காதலா?

உண்மைக் காதலர்களுக்கு

சோதிடம் பார்க்கத் தேவையில்லை என்று 

சொதிடக்காரர் சொல்கிறார்!

இயல்பாய்ப் பழகிய இருவர் 

ஒரே நேர் கோட்டில் பயணித்தால்

ஈருடல் ஓருயிராக

ஒன்றாய்ப் பொருந்திய உள்ளங்கள் தானே!

ஈருள்ளம் ஒன்றாய்ப் பொருந்தினால்

உண்மைக் காதலர் தானே - அவர்கள்

சோதிடத்தில் 

குறிப்புப் பொருத்தம் பார்க்காமல் 

திருமணம் செய்யலாம் தானே!

புதன், 13 மே, 2026

காதல் என்பது பொய் என்கிறாங்க

 


காதல்
ஒரு பருவக் குழப்பம் என்கிறாங்க...
எவர் அழகானவரோ
எவர் பணக்காரரோ
என்றெல்லாம் பழகுவதும்
இவரை விட அவர் அழகு
இவரை விட அவர் பணக்காரர்
என்றெல்லாம் ஆளையாள் மாற்றுவதாலே!
காதல்
ஒரு சுவைக்கும் வழி என்கிறாங்க...
ஆண் பெண்ணைச் சுவைத்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
பெண் ஆணிடம் - பொன்,
பொருள், பணம் வாங்கி
வருவாய் ஈட்டி மகிழ்ந்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
இருபாலாரும்
ஆளையாள் ஏமாற்றிச் சுவைப்பதாலே!
காதல்
ஒரு உப்புக் கருவாடு என்கிறாங்க...
காதலிப்பதாகக் கூறி
ஊருக்குள்ள கேவலமாக உலாவுதால் 
ஊரவரே
காறித் துப்பிப் பழித்து நெளித்து
கேலியும் நையாண்டியும் செய்வது கூட
கருவாட்டு நாற்றம் போல பரவுவதாலே!
காதலுக்குத் தான்
கண் இல்லை என்கிறாங்க...
கிழவி குமரனையும் குமரி கிழவரையும்
தாம் காதலிப்பதாக ஊருக்குள் உலாவுவதாலே!
காதலிலும் கூட
நகைச்சுவை இருக்கு என்கிறாங்க...
கள்ளக் காதல் செய்வோருக்கு
நல்ல காதலர் கிடைக்குது...
நல்ல காதல் செய்வோருக்கு
நம்பிக்கையான ஒருவரும்
கண்ணில் தென்படவில்லையென
காதலர் கிடைக்காதவரின்
கண்ணீர் கதை அது!
உண்மைக் காதல் என்பது
வேலிக்குள் பொட்டு வைத்து
மூஞ்சியை நீட்டிக் கதைப்பதால்
உருவான நம்பிக்கையான உறவென்று
ஆச்சி, அப்புமார் சொல்லி வைச்சாங்க!

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

மறக்க முடியாதது ஒன்றுண்டு



எனக்கு உதவிய எவரையும்

என்னாலும் மறக்க முடியவில்லை...
மறக்க முடியாமைக்கு காரணம்
என் வாழ்வில்
நானடைந்த முன்னேற்றம் தான்!
நாம் உயர உயர ஏறினாலும்
ஏற உதவிய ஏணி போன்ற
மனிதக் கடவுளரை மறப்பது
முறையாகுமோ? - அவர்களுக்கு
என்னாலும் உதவ முடியாவிட்டாலும்
ஆண்டவா அவர்களுக்கு உதவு என்று
ஒவ்வொரு நாளும் கடவுளை வேண்டுகிறேன்!
"நீ பலனை எதிர்பாராது
பிறருக்கு உதவி செய் - நான்
உனக்கு உதவுவேன்." என
கருணை காட்டும் கடவுள் சொன்னதாக
மத வழிகாட்டலைப் பின்பற்றி
உதவும் நெஞ்சங்களைப் பணிகின்றேன்!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தேனிசைத் தேன்றல் தேவா, அனுருத் இன்றி எனது பாடல்

பாடல்: மாதகல் ஊரைப் பாடு

இணைப்பு: https://suno.com/s/esvIqMVPEKOWtBZd


பாடலாசிரியர்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)


பாடி, இசைத்தது:Suno(.com) AI Music App


தலைப்பு: மாதகல் ஊரைப் பாடு


எந்தன் ஊர் மாதகல் ஊர் என்பேன் 

சொந்த உறவுகள் நிறைந்த ஊர் என்பேன் 

(எந்தன்)


மாதகல் ஊரின் அழகும் சிறப்பு என்பேன் 

மாதகல் ஊரின் வளமும் சிறப்பு என்பேன் 

(மாதகல்)


சம்பில் துறை, மாத்துறை, கெவிமாதா கோவில் கரைக்கு 

கரையைத் தேடும் நுரை தள்ளும் அலை 

இரவில் தேறை, முரல் மீன் தரும் கடல் 

இந்தியக் கோடியாக்கரை தழுவும் மாதகல் கடல் 

மாதகல் ஊராருக்கு வாழ்வுதரும் கடல்வளமாம்

                              (எந்தன்) (மாதகல்)


வெளிப்புலம், கிழுவைநாட்டி மேற்குக் கரை

காடாப்புலம், உப்புத்தரவை கிழக்குக் கரை 

வவுணை, காஞ்சிபுரம் வடக்குக் கரை

பாணாகவெட்டி அம்மனுக்கு அப்பால் தெற்குக் கரை

வேளாண்மை விளைச்சல் தரும் நிலவளமாம்

                              (எந்தன்) (மாதகல்)


இந்துக் கோவில், கத்தோலிக்க ஆலையம் சூழ

எந்தக் குறையும் இன்றி ஒன்றுபட்டு வாழ

கூறுபோட்டுப் பிரியாது ஒன்றுபட்டு வாழத்தான் 

அன்பும் பணிவும் நிறைந்த ஊர் மக்கள் 

அறிவும் ஆற்றலும் நிறைந்த ஊர் மக்கள் 

உலகை வியக்க வைக்கும் மாதகல் ஊரைப்பார்

                              (எந்தன்) (மாதகல்)

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

பிரபலம் (Popularity)


எல்லோராலும் நன்கு அறியப்பட்ட

[பிரபலமான (Popularity)] ஒருவராக
இருப்பதற்குத் தகுதி வேண்டுமே!
கெட்டவரும் பிரபலம் ஆகலாம்
ஆனால், மக்களுக்கு விருப்பம் இருக்காது!
நல்லவரும் பிரபலம் ஆகலாம்
ஆனால், மக்கள் விருப்பம் கொள்வர்!
"நீ எந்தப் பிரபலம்?" என்றால்
மக்கள் விரும்பும் ஒருவராக
பிரபலம் ஆவேன் என்பேன்!
மக்கள் விருப்பங்களை நிறைவேற்றினால் தானே
மக்கள் என்னை விரும்ப வாய்ப்புண்டு!
கைக்கு கைமாறும் பணத்தை
நம்பி எதிலும் இறங்குமல்
துறைசார் வல்லமையை
நான் வளர்த்துக் கொண்டால்
என்னாலும் மக்கள் விருப்புக்கு
ஏற்ற பணி (சேவை) ஒன்றைச் செய்து
பிரபலமாக முயற்சி எடுக்கப் போகிறேன்.
அன்பான உறவுகளே! - தாங்கள்
என்னை முந்திச் சென்று பிரபலமாக
நல்வழியில் கடினமாக உழைக்கலாம் தானே!
அன்பான உறவுகளே! - எனக்கு
முன்னதாகப் பிரபலமாக விரும்பி
தீய வழியில் முயற்சி எடுக்காதீர்கள்!
போட்டி இருந்தால் தானே
மக்களுக்கு நன்மை கிட்டும் என்பேன்!

வியாழன், 1 ஜனவரி, 2026

கடவுளுக்கு என்ன பதில்?

 


புதிய விடியலை உறுதிப்படுத்த
பழைய நாட்காட்டித் தாளைக் கிழிக்கிறோம்.
ஒரு நாள் முடிந்ததும்
என்னைக் கிழித்து எறியும் மனிதா
குறித்த நாளில் - நீ
என்ன தான் செய்தாய் என்கிறது
பழைய நாட்காட்டித் தாள்!
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் வேளை...
எனது காலத்தில் - நீ
என்ன பண்ணிக் கிழித்தாய் என்கிறது
பழைய ஆண்டு (2025)!
எனது காலத்தில் - நீ
என்ன பண்ணலாம் என்று
எண்ணிக் கொண்டு இருக்கிறாய் என்கிறது
புதிய ஆண்டு (2026)!
"செல்லும் வழி சரியாயின் வெற்றியே!" என
ஒரு வரியில் கவிதை தோன்றிச்சு!
"புத்தாண்டில் சிந்தித்து நல்வழியில் சென்றிடு
எந்நாளும் வெற்றியை நாடு." என
குறள் வெண்பா ஒன்றும் தோன்றிச்சு!
"பட்டது எல்லாம் படித்து
கெட்டதைக் கைகழுவி விடணும்
தொட்டது எல்லாம்   வென்றிட
புத்தாண்டில் நல்வழியில் சென்றிடு" என
தன்முனைக் கவிதை  ஒன்றும் தோன்றிச்சு!
"புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தது போதும்
புத்தாண்டில் போட்டிருக்கும் திட்டமென்ன?
எப்படி நடைமுறைப்படுத்தி
எத்தனை எத்தனை
நன்மைகள் அடையப் போகின்றாய்?" என்று
கடவுள் வந்து உன்னைக் கேட்டால்
மனிதா! நீ என்ன பதில் சொல்வாய்?

திங்கள், 1 டிசம்பர், 2025

பாதிப்பும் வெளியீடும்

 


பகலவன் மூஞ்சியைக் காட்டினால் தான் 

உலகிற்கு வெளிச்சம் பாருங்கோ!

பகலவன் ஒளியை உறிஞ்சித் தான் 

நிலாவும் இரவில் சிரிப்பதைப் பாருங்கோ!

ஆசிரியர்மார் அழகாகக் கற்பித்தால் மட்டுமே 

மாணவர் உள்ளத்தில் அறிவு பெருகுமே!

உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள் 

சுற்றுச் சூழலில் இருந்தால் மட்டுமே 

நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியுமே!

பணிகளைப் பயன்பாட்டைத் தருவோர் 

பக்கத்தில் இருக்காமல் போனால் 

பயன் பெறுவோர் எப்படிப் பயனீட்டுவர்? 

பாதிக்கப்பட்டவரிடம் தான் பதிலும் இருக்கிறதே!

ஞாயிறு, 2 நவம்பர், 2025

ஒரு நாளைக்கு ஒரு தடவை படியுங்கள்

 

நாம் சாவடைந்தால்

நாறும் நம் உடலைக் காவ

நாலு உறவுகள் இல்லாத வேளை

படிப்பு, பணம், நிலம்,

பொன், பொருள், சொத்து 

எல்லாம் இருந்தென்ன பயன் காணும்?

கத்தியால இரண்டாக வெட்டிய

ஒற்றை வாழைப்பழத்தை 

ஒன்றாக்க முடியாதது போலத் தான் 

முறிந்த உறவுகளையும் சேர்க்க முடியாதே!

முரண்படாமல், விரிசல் ஏற்படாமல்,

வெறுப்பை விதைக்காமல் 

அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் என

உறவுகளைப் பிரியாமல் முறியாமல் பேண

அன்பாலே ஒட்டி உறவாடி அணைக்கலாமே!

திங்கள், 20 அக்டோபர், 2025

நம்முடலே காற்றடைத்த பையடா!



எமது உடலை இயக்கும் சக்தி
கடவுள் என்றாலும் கூட
எமது உள்ளத்தில் எடுக்கும் முடிவே
எமது பயணத்தைத் தீர்மானிக்கும்!
எமது உடலுக்கு உள்ளே
சிறு காற்றுப் (சுவாசப்) பை - அதனுள்ளே
இருக்கக்கூடிய காற்றே (உயிர் / ஆன்மா)
எம்மை இயக்குகின்றதாக - கோவிலில்
சமயப் பேச்சாளர் சொன்ன நினைவு!
நம்முடலே காற்றடைத்த பையடா!
காற்றுப் போனால் (உயிர் பிரிந்தால்)
பெறுமதியில்லாச் சடப்பொருள் தானடா!
என்றெல்லோ
என் பீட்டப்பன் சா வீட்டில்
என்னப்பன் எனக்குரைத்தான்!
ஆடுகின்ற ஆட்டமும் போடுகின்ற கூத்தும்
காற்றுப் (மூச்சுப்) போகும் வரை தான்...
காற்றடைத்த பையாம் - எம்முடல்
காற்றுப் போகும் முன்னரே
உறவுகளை அன்பாகப் பேணுவோம்
ஊருக்கு நல்லது செய்வோம் - எல்லாம்
காற்றுப் போன எம்முடல் நாறும் முன்
சுடுகாட்டுக்கோ இடுகாட்டுக்கோ
கொண்டு போய்ச் சேர்த்து அழிக்கவே!

ஆக்கம்: யாழ்ப்பாவாணன்
(காசி.ஜீவலிங்கம்)
இலங்கை.

          =============================


ஒளி ஏற்றி இருள் விலக்கும்

துளி கூடத் தீயது ஒட்டாமல்

கோடி உடுத்தி கோடிட்டுக் சொல்லு

தீபாவளி நன்மை செய்யச் சொல்லும்

தீபாவளி நாளில் நன்மை செய்வோம்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள் பகிர்வோம்!

இல்லாதோர் எல்லோருக்கும் இயன்றவுதவி செய்வோம்.
இயலாதோர் அன்புடன் மாற்றாரை அழைத்து
தீபாவளி வாழ்த்துகள் பகிர்ந்து
எல்லோருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்
தீபாவளித் திருநாள் ஆகட்டும்!

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

எல்லை மீறாதீர்!


"அட, கட்டையிலே போவானே!
அட, பாடையிலே போவானே!
அட, சவப்பெட்டியிலே போவானே!
அட, அகவை தொன்னூற்று ஒன்பதிலும்
பணம், பொருள், பண்டத்தை
அள்ளிக்கொண்டு போவேன்டா!
அடப்பாவி! என்ர பெட்டையைக் கெடுத்திட்டு
செத்துப் போவியேடா?
புண் வந்து, புளுப் பிடித்து,  உறுப்பழுகி, ஒழுகி
அணு அணுவாய் செத்துத்தான் போவாய்!"
என்றெல்லோ - எங்கட
அம்மம்மா, அப்பம்மா
மண்ணள்ளிப் பறக்க வீசி
தெருப்பொறுக்கியைத் திட்டேக்க பார்த்தேன்.
பெத்தவளுக்கே
பெண்ணின் அருமை தெரியும்
பொம்பிளைப் பொறுக்கிப் பொடியளுக்கு
இதெல்லாம் எப்பதான் விளங்குமோ?
"ஒருவனுக்கு - ஒருவள்" என்ற
ஒழுங்கைப் பின்பற்றி வாழ்ந்தால்
உலகத்திலே நற்பெயர் ஈட்டலாமே!

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

நல்ல நண்பர் தேவை


 

நான் தனிப்பிறவி அல்ல

நான் தெய்வப்பிறவி அல்ல

நான் - மக்களோடு

மக்களாக வாழவேண்டிய பிறவி!

அப்படியாயின் - நான் 

ஏன் தனிமையாய் இருக்கிறேன்?

என் உள்ளம் தொட்ட 

எந்த உறவையும் விட்டு 

நான் விலகியதில்லை!

என் உள்ளத்தைத் தொட்டுவிட

எவர் வந்து பழகினாலும் கூட

நான் உறவாக அணைப்பேனே!

என் தனிமையைப் போக்கவல்ல

அறிஞர், வாசகர், பயனர் 

எவரையும் வரவேற்கக் காத்திருக்கிறேன்.

என் எழுத்தையும் பேச்சையும் நம்பாமல் 

பழகிப் பாருங்கள் 

உள்ளம் பொருந்தினால் உறவாக முடியுமே!


ஆக்கம்: யாழ்ப்பாவாணன்

வெள்ளி, 3 அக்டோபர், 2025

தேடல்

 


எதோ ஒன்றைத் தேடும் 

எவரோ ஒருவரின் தேவையை

நிறைவேற்றிக் கொடுக்க 

எதோ ஒன்று 

எனக்கு உள்ளும் இருக்கலாம்!

இருப்பினும் - எவருக்கும் 

பயன்படக்கூடிய எதனையும் 

கற்றுக்கொண்டு தானிருக்கிறேன்!

என்னை நாடினால் 

ஏதும் கிடைக்கும் என்று

வருவோருக்கு வழங்கக்கூடிய - ஏதாவது 

என்னிடம் இருக்க வேண்டும் என்று 

நானுணருவதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

வியாழன், 25 செப்டம்பர், 2025

யாழ்ப்பாவாணன் எண்ணங்கள்


1

கடவுளைக் கண்டீரா? என்று

எல்லோரும் கேட்கின்றனர்!

கடவுள்
மனித வடிவில் தான் வருவாராம்!
நான் சொன்னால்
யாரும் நம்புவதாயில்லை!
தானே கடவுள் என - மனிதன்
நடிக்கப் புறப்பட்டதால் தான்
என் பேச்சு எடுபடவில்லைப் போலும்!

2
வாழத் துணிந்து விட்டால்
வருகின்ற திறனாய்வு (விமர்சனம்) எதற்கும்
முகம் கொடுக்கத் தயாராகவே
இருக்க வேண்டும் பாரும்!
எவரும் தூற்றலாம் காறித் துப்பலாம்
குறைகள் கூறித் திரியலாம்
பழித்து நெழித்து நையாண்டி செய்யலாம்
எதற்கும் எவரையும் பகைக்காமல்
நம்குறையைச் சரி செய்து
நல்லவற்றைக் கருத்தில் எடுத்து
நமது வாழ்வைத் தொடர்ந்தால் போதுமே!
நம்மை நாம் எடைபோட்டு
எம்மைத் திருத்திக் கொண்டால்
எவரும் எம்மை எடைபோட்டு
திறனாய்வு (விமர்சனம்) செய்ய இடமிருக்காதே!

3
கையும் மெய்யுமாய் களவு பிடிபட்டது!
எப்படி? எப்படி?
என்னைத் தூற்றியோர் எவரும்
மக்களும் நானும்
ஒன்றாய் இருக்கின்ற வேளை
முகம் காட்ட முடியாமல்
ஓடி ஒதுங்கியே மறைந்தனர்?
ஏன் காணும்? ஏன் காணும்?
உண்மை பேசி உதவி இருந்தால்
மக்கள் முன்னிலையில்
என்னுடன் தாங்களும் இணைந்து இருக்கலாமே!
கெட்டிக்காரன் புளுகு
எட்டு நாளைக்கு என்பதும்
பலநாட் கள்ளர் ஒருநாள் பிடிபடுவர்
என்பதும் கூட
நேரில் தலையைக் காட்டா விட்டால்
கையும் மெய்யுமாய் களவு பிடிபடுமே!

திங்கள், 15 செப்டம்பர், 2025

எப்பவேனும் எவரும் தேவைப்படலாம்


எவரெவரோ எதிர்பாராமல் தான்
என்னைச் சந்தித்தனர், பழகினர்...
என்னைக் கெட்டவர் என்று
விலகியோர் சிலர் இருக்கலாம்!
என்னை நல்லவர் என்று
தொடருவோர் சிலர் இருக்கலாம்!
பிரிந்தவர் எவரும் - எனக்கு
எதிரிகள் அல்லர் - ஏதோ
ஒன்றைப் படிப்பித்துச் சென்றவர்!
தொடரும் உறவுகளில்
நம்பிக்கையானவரும் இருப்பர்...
நடிகர்களும் இருப்பர்...
நான் சந்திக்கும் நேருக்கடி நேரம்
நம்பிக்கையானவர்களை இனங்காண்பேன்!
என்னைச் சூழ எத்தனையோ  ஆள்கள்
எந்த வேளை ஆயினும்
எவரும் தேவைப்படலாம் - அதற்காக
எனது எதிர்பார்ப்புக்கு ஒத்துப்போகும்
ஆள்களை அரவணைத்துச் செல்கிறேன்!
நான் செத்தாலும்
என் பிணத்தைக் கூட
சுடுகாட்டிற்குக் காவிச் செல்ல
நாலாள் தேவை என்றுணர்ந்தே
எவரையும் முறித்துக் கொள்ளாமல்
ஓடும் பழமுமாக ஒட்டிக்கொள்ளா விட்டாலும்
எல்லோருடனும் உறவைப் பேணுகிறேன்!
குமுகாயத்திற்கு (சமூகத்திற்கு)
நானில்லாத போது
இன்னொருவர் இருக்கக்கூடும் - எனக்கோ
குமுகாயம் (சமூகம்) எப்பவும் தேவையே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

பட்டிமன்றம்

தெருவோரத்து அரங்கொன்றில்
'கல்லெறியா சொல்லெறியா' என்று
பட்டிமன்ற நிகழ்வைப் பார்த்துக் கேட்டேன்.

காய்க்கிற மாவுக்குக் கல்லெறியாம்
தெருச்சுற்றும் மனிதருக்குச் சொல்லெறியாம்
இருதரப்புப் பட்டிமன்றப் பேச்சாளரும்
ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லெறி வீசினர்!

காய்க்கின்ற மாவில காய், கனிகள்
நிறையத் தான் தூங்குமே!
'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என
காய்க்கிற மாவுக்குக் கல்லெறி தானதிகம்!

தெருவால போகிற ஆண்ணென்ன பெண்ணென்ன
உள்ளத்தில் நிறையச் சுமந்து செல்லலாம்!
ஆளுக்காள் அடுத்தவர் தகவல் அறிய
கேள்விக் கணைகளாகச் சொல்லெறி வீசுவரே!

நல்லவரோ நறுக்காகப் பதில் எறிந்தாலும்
கெட்டவரோ கதையளந்து பதில் எறிவாரே!
சொல்லெறிந்தார் ஒதுங்கினாலும் பார்த்தவர் விடமாட்டாரே
ஆளுக்காள் ஆயிரம் கதையளப்பினம் கண்டியளோ!

ஏட்டிக்குப் போட்டியாகப் பட்டிமன்றம் உச்சக்கட்டத்தில்
சொல்லெறியும் பதிலடியும் சுவையான விருந்தாச்சு!
கேட்பவரோ முடிவறியத் துடியாய்த் துடித்தனர்
மொட்டைத்தலை நடுவரோ குட்டை அவிட்டார்!

சுவைதரும் மாங்காய்க்குக் கல்லெறி என்றாலும்
அப்பாவி மாமரத்துக்குத் தான்வலி பாருங்கோ!
குற்றவாளியறியச் சொல்லெறி வீசியோர் இருந்தாலும்
சுற்றியுள்ளவரின் கேலியும் நையாண்டியும் சுவைதானே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)


செவ்வாய், 29 ஜூலை, 2025

நம்பிக்கையும் வாழ்வும்



அப்பா என்ன செய்தாலும

அம்மா என்ன செய்தாலும்
எந்தப் பிள்ளையும் - அதனை
எதிர்க்க முயன்றதில்லை - அது
பெற்றோர் மீது
பிள்ளைகள் வைத்திருக்கும் நம்பிக்கை!
நண்பர்கள் சிலர் - சிலரை
நம்பிச் செயல்படுவார்கள்!
நம்பியவர்களை நம்பித்தான்
நாணயமாகச் செயற்பட்டவர் தான்
சாகும் வரை நட்பைத் தொடருகின்றனர்!
உள்ளப் பொருத்தம் பேணும் காதலர்கள்
ஒருபோதும் முறிவதில்லை! - அவர்களுக்குள்
நம்பிக்கை ஊற்று எடுக்கும்!
கணவன், மனைவி உறவு
சோதிடப் பொருத்தத்தில் இல்லை - அது
உள்ளப் பொருத்தத்தில் தான் நிலைக்கும்!
உள்ளப் பொருத்தம் ஒற்றுமைக்கு
அன்பு தான் உடல் அணைப்புக்கு
நம்பிக்கை தான் விருப்பங்களை நிறைவேற்ற
கணவன், மனைவிக்கு வேறேது தேவை!
பெற்றவர்கள்
பிள்ளைகளைப் பெற்றால் போதாது;
அன்பு காட்ட வேணும்...
அறிவை ஊட்ட வேணும்...
நம்பிக்கையைப் பேண வேண்டும்!
பெற்றோரின் அன்புக்கும் பற்றுக்கும்
பிள்ளைகள் தாமாகவே கட்டுப்படலாம்...
பெற்றோரில் தான் தங்கியிருப்பதாய்
பிள்ளைகளை வளர்க்கவும் கூடாது
அச்சுறுத்தி, அடக்கிப் பேணவும் கூடாது
பின்நாளில்  - அவை
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே
விரிசலை ஏற்படுத்தும் மருந்தாகலாம்!
நம்பிக்கை என்பது
பேச்சளவில் ஊற்றெடுப்பதில்லை;
செயல்களிலும் ஆற்றுகைகளிலும்
உள்ளம் விரும்புவதால் ஊற்றெடுக்குமே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

உழைத்துப் பிழைக்க வேண்டும்.



அணிந்து கொள்ள விரும்பும்

ஆடைகளைத் தீர்மானிப்பது நீங்கள்!
நுளம்பு வலை, மீன்பிடி வலை போன்றும்
பொட்டு, பொட்டாக ஓட்டை போட்டதும்
கீறல், கிழிசலாக வெட்டுப் போட்டதும்
நீங்கள் அணிந்து செல்லும் போது
பார்க்கின்ற ஆள்களுக்கு
வயிற்றைப் பிரட்டிச் சத்தி வருதே!
திரைப்படங்களில் ஆட்டக்காரிகள்
போட்டுகாட்டி உழைப்பது வேறு!
ஊருக்குள்ள பண்பாட்டைப் பேணும்
உடுப்புகளைப் போடாமல் திரிந்தால்
ஊரே ஒதுக்கிவைத்துப் போடும்!
ஆள் பாதி ஆடை பாதி என்றால்
ஆளை மறைக்க உடுப்பது பாதி
ஆளை மதிக்க உடுப்பது பாதி
என்பதை உறுதிப்படுத்த
ஆடையின்றித் தெருவில் ஓடிய ஒருவருக்கு
ஊரார் சேர்ந்து அடித்து உடைத்துப் போட்டு
சாக்கால போர்த்து விட்டது சான்று!
வீட்டிற்கு உள்ளே விரும்பியவாறு
உண்டும் குடித்தும் உடுத்தும் வாழலாம்!
வீட்டிற்கு வெளியே வந்து இறங்கினால்
ஊரார் போற்றும் கலைப் பண்பாட்டை

ஏற்று - அதற்குக் கட்டுப்பட்டு
உண்டும் குடித்தும் உடுத்தும் உலாவலாம்!
எனது மகிழுந்து, எனது எரிபொருள், எனது தெருவெளி
நான் எப்படியும் ஓட்டுவேன் என்று
எவரும் ஆட்டம் போட முடியாது
தெரு வெளி அரச சொத்து என்றறி!
நான், என்னுடையது எல்லாம்
பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!
நான், என்னுடையது எல்லாவற்றையும்
பொதுவெளிக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி
வெளிப்படுத்தி வீர முழக்கம் இடலாம்!
பணிந்தவர் உயர்வார்
உயர உயரப் பணிவு வந்தாலும் உயர்வார்
என்னை விடப் பெரிசு யாரென்று
தலையைக் காட்டினால் பிழைக்க முடியாதே!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)