Translate Tamil to any languages.

செவ்வாய், 23 ஜூன், 2020

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – ஒன்று


வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 19/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. சிங்கப்பூர், இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.



இணைய வழி நேர்காணல்

வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம் https://meet.jit.si/yarlpavanan ஊடாக நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)  பகிரும் அடுத்த பணியையும் தொடங்கியுள்ளேன். விரைவில் முதலாம் நேர்காணலை வலையொளியில் (Youtube)  காணலாம்.

செவ்வாய், 9 ஜூன், 2020

ZOOM செயலி ஊடாக உரையாற்ற வாருங்கள்!


'வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கவிதை போலக் கட்டு உரையா?' என்ற தலைப்பு நீண்டு இருப்பினும் 'புதுக்கவிதை, வசனகவிதை எப்படி இருக்க வேண்டும்.' என்பதை விளக்கமளிக்கும் உரையாகப் பேண விரும்பியே தலைப்பை இவ்வாறு அமைத்தேன்.

உண்மையில் வலை வழியே கவிதை என்ற போக்கில் கட்டுரையை முறித்து, உடைத்து எழுதுவதாகப் பலருரைக்கக் கேட்டிருக்கிறேன். 'நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்.' என்பதை விளக்கம் அளித்தோமானால் வலை வழியே நல்ல கவிதைகளை விதைக்க முடியும்.

ZOOM செயலி வழியே பல நாட்டு அறிஞர்களை இவ்வாறு உரையாற்ற அழைக்கின்றேன். உங்கள் உரையாற்றலால் நல்ல கவிஞர்களை உருவாக்க முடிந்தால் அதுவே இந்நிகழ்வின் வெற்றி. இந்நிகழ்வினை வலுப்படுத்த இந்நிகழ்வில் பங்கெடுத்தும் உதவுமாறு அழைக்கின்றேன்.

மேலுள்ள அழைப்பின் படி எல்லோரும் இணைந்து கொள்ளலாம். மேலும்  இந்நிகழ்வு சிறப்புறத் தங்கள் மதியுரையையும் வழிகாட்டலையும் எனக்களித்து உதவுங்கள்.