கொரோனா
என்ற கொடிய தொற்று நோய் எங்கள் உறவுகளைப் பிரித்துவைத்து வேடிக்கை பார்ப்பதால்
சித்திரைப் புத்தாண்டு மகிழ்ச்சியைத் தராமல் கடந்து செல்கிறது. கொரோனா
எங்களை வீட்டில் முடக்கியதால், நாம் எமது வெளியீடுகளை இணையத்தில் வெளியிட வாய்ப்புத்
தந்திருக்கிறது எனலாம்.
எடுத்த
எடுப்பிலே எல்லோரும் வலைப்பதிவில் எழுதிவிடலாம்; தமிழ் விக்கிப்பீடியாவில்
எழுதுவதற்குக் கனக்கப் படிக்க வேண்டுமென எல்லோரும் எண்ணமிடலாம். அப்படியென்ன
கனக்கப் படிக்க வேண்டியிருக்கு? நானும் அப்படிக் கற்றுக் கொள்ளலாம் என தேடிக்கொண்ட தகவலை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விக்கிப்பீடியா
பற்றிய பக்கங்களைப் படித்த பின்னர் தமிழ் விக்கிபீடியா கலைக் களஞ்சியத்தில்
பதிவுகளை பதிவு செய்வதற்கு இலகுவாக இருக்கலாம். அவ்வாறான சில பக்கங்களை நான்
தேடிக் கற்றுக் கொண்டு, அவற்றைக் கீழே தருகின்றேன்.
விக்கிப்பீடியா:பதிப்புரிமை
விக்கிப்பீடியா:
தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
விக்கிப்பீடியா:
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கிப்பீடியா:
நடைக் கையேடு
விக்கிப்பீடியா:
முதல் கட்டுரை
மேற்படி
பக்கங்களைக் கற்று அறிந்து தொகுத்த எனது எண்ணங்களை ஒளியும் ஒலியும் (வீடியோ)
பதிவாகப் பகிர்ந்துள்ளேன். அதனை நீங்கள் பார்த்துப் புரிந்துகொள்வீர்கள் என
நம்புகிறேன்.
இணையத்தில்
அதிக தகவல் கொண்ட தளம் தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமே! அதில், எல்லோரும் இணைந்து அதிக
தகவலை இணைக்க உதவும் நுட்பங்களைப் பகிர்ந்துள்ளேன்.