Translate Tamil to any languages.

புதன், 28 அக்டோபர், 2015

போட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்?


ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டி முடிவு நாள் நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டு நாள்கள் இருக்கையில், போட்டிக்குப் பதிவு எழுதி அனுப்பாதோர் இருப்பின் போட்டியில் பங்கெடுக்கச் சில தகவல் தர விரும்புகின்றேன்.
மேலேயுள்ள நூறு உரூபாய்த் தாள் தான் கவிதைக்கான கருப்பொருள். இந்த நூறு உரூபாய்த் தாளை வைத்து நான் புனைந்த துளிப்பாவைப் (ஹைக்கூவைப்) பாருங்கள்.

அழகான நூறு உரூபாய்த் தாளில்
ஒளிந்திருக்கும் ஓர் உண்மையைப் பார்
"தொழிலாளர்களின் வியர்வை!"

நானொரு கவிதை புனைந்து காட்டிவிட்டேன். இனி உங்கள் புனைவுக் (கற்பனைக்) குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுங்களேன். உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை பாவாகப்/ கவிதையாகப் புனைந்து இரண்டு நாட்களில் அனுப்பிவையுங்களேன்.

நானொரு சின்னப்பொடியன் இப்படியொரு துளிப்பாவைப் (ஹைக்கூவைப்) புனையலாம் என்றால், என்னைவிடப் பெரிய அறிஞர்களாகிய உங்களால் எத்தனை எத்தனை பெரிய பாடல்களை / காவியங்களை புனைய முடியுமே! எனவே தான், ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டியில் பங்கெடுக்குமாறு பணிவோடு அழைக்கின்றேன். போட்டி பற்றிய முழு விரிப்பையும் அறிந்துகொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

போட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்?
நல்ல கேள்வி தான்.

போட்டிகளில் பங்கெடுத்தால் எமது பதிவோடு மற்றைய அறிஞர்களின் பதிவுகளை ஒப்பிட முடிகிறது. அதனால் எமது புனைவுத் (கற்பனைத்) திறன் எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. மேலும் அடுத்த பதிவுகளில் எமது புனைவுத் (கற்பனைத்) திறனைப் பல மடங்கு பெருக்கிச் சிறந்த பதிவுகளை ஆக்க முடியுமே! எனவே, உடனடியாக ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டியில் பங்கெடுக்குமாறு பணிவோடு அழைக்கின்றேன். 

இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள் உறவுகளே! 

சனி, 24 அக்டோபர், 2015

எம் தமிழுக்குப் பிறந்த நாள் எந்நாளோ?உலகைப் படைத்த ஆண்டவனே
வாழும் மக்களையும் படைத்தாரே!
மக்களைப் படைத்த ஆண்டவனே
பேசும்மொழி அறிவையும் ஊட்டினாரே!
அந்தப் பேசும்மொழி தான் - நாம்
நமக்குள்ளே உறவாட ஊடகமாச்சே!
அந்த மொழி எந்த மொழி - அதுவே
மொழிகளுக்குள் மூத்த மொழியாம்!
பிறந்த குழந்தையும் வெளிப்படுத்தும்
உணர்வுகளால் உருவான மொழியாம்!
அன்புடன் அம்மாவும் அணைத்து
பாலுடன் கலந்தூட்டிய மொழியாம்!
அப்பாவும் கையில் ஏந்தியே
அன்புகாட்டிய அந்த மொழியே 
எங்கள் தாய் மொழியாம் தமிழே!
நீங்கள் ஏற்பீரோ இல்லையோ - எவரும்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளொடு முன் தோன்றி மூத்த குடி" என்று
புறப்பொருள் வெண்பாமாலை சுட்டிய
அடிகளை அடிக்கடி படிப்பவரே!
அப்படியும் நம்பாவிட்டால் கேளும்
அகத்தியரை ஆக்கி அவருக்கே தமிழூட்டி
அகத்தியராலே மக்களும் தமிழைக் கற்றிட
முதற் கடவுள் சிவனார் முயன்றாரே!
தமிழ்க் கடவுள் முருகன் சொல்லி
அகத்தியர் ஆக்கிய தமிழ் இலக்கணமே
அகத்தியம் என்னும் முதல் நூலே!
அகத்தியம் பற்றி அறியாவிட்டாலும்
பிறமொழிக் கலப்பின்றிய இலக்கியமாய்
எழுத்து, சொல்லு, பொருளென மூவகை
இலக்கணம் தொல்காப்பியத்தில் உண்டே!
தொல்காப்பியருக்குப் பின்னே வந்த
பவணந்தியார் தானாக்கிய நன்நூலில்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே" என
வடமொழியைக் கொஞ்சம் பொறுக்கி
தமிழுக்குள் நுழைத்துக் கலக்கினாரே!
வணிகநோக்கிலும் புலம்பெயர்விலும்
உலகெங்கும் உலாவும் நம்மாளுங்க
ஆங்காங்கே படித்ததும் கேட்டதுமாய்
ஐயைந்து (5x5) மொழிக்கு மேலான
சொல்களைப் பொறுக்கி எடுத்தே
எங்கள் தாய் மொழியாம்
தமிழுக்கு உள்ளே நுழைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் கலக்கிறாங்க!
பிறமொழிக் கலப்பு இன்றிய
அன்றைய தமிழும் காலமாக
காலம் காலமாய்க் கலந்து
நுழைந்த மொழிகளால் தான்
இன்றைய தமிழும் தமிழின்றி
அடையாளம் இழந்து விட்டதே!
தமிழே தமிழாக இல்லாத
இன்றைய இழிமொழியை விரட்ட
பிறமொழிகளைத் தூக்கி எறி
பண்டைத் தமிழர் பேசிய
தொன்மைத் தமிழைக் கண்டுபிடி
நற்றமிழ் நம்மாளுங்க நாவாலே
வெளிப்படும் நாள் எந்நாளோ - அந்நாளே

எம் தமிழுக்குப் பிறந்த நாள்! 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணிக்கும் செயலி

அந்தக் காலத்தில ஒருவர் நூறாண்டுகளுக்கு மேலே இளமைத் துள்ளலுடன் வாழ்ந்துள்ளார். இந்தக் காலத்தில ஒருவர் ஐம்பதுக்கு மேலேயே முதுமைத் தள்ளாடலுடன் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். இதற்கெல்லாம் உண்ணும் உணவே காரணமாம்.

அந்தக் காலத்தில மூக்குமுட்டத் திண்டுபோட்டு நீட்டி நிமிர்ந்து தூங்கி எழுந்து வாழ்ந்தே நூறில இளமையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் உண்டது தானிய வகைகள், பச்சை இலைக் கறியோட, அவியற் குழம்பு, ஒடியற் கூழ், பனாட்டு எனப் பல. கண்டதைத் திண்டாலும் இரும்பு போல அந்தக் காலத்து ஆள்கள் இருந்தவையாம்.

இந்தக் காலத்திலயும் மூக்குமுட்டத் திண்டுபோட்டு நீட்டி நிமிர்ந்து தூங்கி எழுந்து வாழ்ந்தே ஐம்பதில முதுமையை வெளிப்படுத்திறாங்க. இவர்கள் உண்பது தெருக் கடைகளில விரும்பிய (வணிக) உணவுகள், அரிசி, மாவுப் பண்டங்களுடன் எண்ணெய்ச் சட்டியில போட்டெடுத்த உணவுகளே! கண்டதைத் திண்டாலும் முருக்குப் பருத்துத் தூணுக்கு உதவாதது போல இந்தக் காலத்து ஆள்கள் இருப்பதைக் காணலாம்.

இப்ப தங்களுக்கு எத்தனை அகவை, ஆண்டு, மாதம், நாள் எல்லாம் கணிப்பீர்களா? ஏன் தெரியுமா? இப்ப இருந்தே உயரத்திற்கு ஏற்ற நிறையைப் பேண முயன்றால் தான் நெடுநாள் வாழலாம். அப்படியாயின் கீழ்வரும் செயலியைப் பாவித்து முதலில் தங்கள் அகவையைக் காணுங்கள்.


இச்செயலியைத் தங்கள் தளத்தில் பாவிக்கக் கீழ்வரும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து (Copy) ஒட்டலாம் (Paste).

<iframe border="0" frameborder="0" height="370" marginheight="1" marginwidth="1" name="myage" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_age_calcu.php" width="440"> Your browser does not support Iframes. </iframe><br />

மூக்குமுட்டத் திண்டுபோட்டு உடற்பயிற்சி செய்யாமல் ஆனைக்குட்டி போல இருப்பதாலும் முறையான சமச்சீர் உணவுண்ணாமல் எலும்புந் தோலுமாய்ச் சாவாரைப் போல இருப்பதாலும் நோய்கள் தான் தேடி வரும். தேடி வரும் நோய்களை வீரட்ட சமச்சீர் உணவுண்டு உடற்பயிற்சி செய்யவும் வேண்டும். அவரவர் தத்தம் உயரத்திற்கு ஏற்ற நிறையைப் பேணவும் வேண்டும். அப்ப தான் உடல் நலம் பேணலாம்.

 உயர்குருதி அமுக்கும், நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற பல நோய்களுக்குக் காரணமே உயரத்திற்கு ஏற்ற நிறை அமையாமையே! அந்த உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணிக்க ஒரு வலைச் செயலியை அமைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணித்துப் பாருங்களேன். வழமைக்கு மாறாக நிறை குறைந்தோ கூடியோ இருப்பின் தங்கள் குடும்ப மருத்துவரிடம் மதியுரை (ஆலோசனை) பெறவும்.


இச்செயலியைத் தங்கள் தளத்தில் பாவிக்கக் கீழ்வரும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து (Copy) ஒட்டலாம் (Paste).
<iframe border="0" frameborder="0" height="320" marginheight="1" marginwidth="1" name="mybmi" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_bmi_calcu.php" width="435"> Your browser does not support Iframes. </iframe><br />

'உயரத்திற்கு ஏற்ற நிறை' பற்றிய விரிவான அறிவைப் பெற கீழுள்ள இணைப்புகளைப் படிக்கவும்.

உடல் திணிவுச்சுட்டி உடல் பருமன்
http://tamil.happylife.lk/?page_id=153
உங்கள் உடல்நிறையைக் குறைத்துக்கொள்வது எப்படி? http://www.thamilhealth.com/2014/04/08/
உடல்நிறை-குறைப்பு-ஒரு-இல/ நல்ல உணவும் குப்பை உணவும்
http://sinnutasty.blogspot.com/2012_03_01_archive.html

இப்பதிவின் ஊடாக நான் ஆக்கிய இரு செயலிகளை உங்களுடன் பகிருகிறேன். எப்படித் தங்கள் தளங்களில் வலைச்செயலிகளை (விட்ஜட்ஸ்) இணைப்பது பற்றி எனது மற்றைய தளத்தில் விளக்கமளிக்கவே எடுத்துக்காட்டாக இவற்றை ஆக்கினேன். மேலதிகத் தகவலுக்கு: http://www.yarlsoft.com/adg/bmi_calculator.php

வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!


ஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே
ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே!
ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே
ஒவ்வொரு வலைப்பூக்களும் வெளியிடுமே
உலகிற்கு நற்றமிழில் நல்லறிவை!

அச்சு ஊடகங்களுக்குச் சரிநிகராகவே
மின் ஊடகங்களும் மின்னுகிறதே
மின் ஊடகங்களில் வலைப்பூவும்
அச்சு ஊடகங்களை முந்துகிறதே - ஒவ்வொரு
வலைப்பதிவர்களும் படிக்கலாமே!

சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையைத் தூண்டும்
சித்தர் எழுதிய பாடலென - நம்ம
மதுரைத் தமிழன் வெளியிட்டு வைக்க
http://avargal-unmaigal.blogspot.com/2015/10/tamil-bloggers.html
தமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சிப் பாடலென  - நம்ம
'தமிழ் மறை தமிழர் நெறி' ஒலி பெருக்கிட
http://vazhvuneri.blogspot.com/2015/10/blog-post_9.html
உலகெங்கும் உலாவுகிறதே பதிவர்களுக்கான பாடல்
ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!

உலகில் வலைப்பூ ஊடகமும் சிறக்க
வலைப்பதிவர்களும் உலகெங்கும் மின்ன
திண்டுக்கல் தனபாலனின் எண்ணங்கள்
வலைப்பூ ஊடகம் மேம்பட வழிகாட்டுமே
ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!


தமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல்.

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது...
"என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...

எந்த வலைப்பூப் பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறிப் போகும் மாயங்கள்...!

கருத்துத் தாங்கும் பதிவுகள் தானே
முன்னணிப் பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...

யாருக்கில்லைப் போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!

மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...

வலைப்பூப் பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...

இலட்சம் பதிவுகள் கண்ணோடு...
இலட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!

பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை, மறுமொழி
எல்லாமே நட்பாகும்...

பதிவுகள் இன்றி வலைப்பூவா...?
நேரம் ஏனில்லை என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...

மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...


எழுதியவர்: திண்டுக்கல்தனபாலன் புதன், ஐப்பசி 07, 2015
http://dindiguldhanabalan.blogspot.com/


பதிவர்களே! பதிவர்களே!
பாட்டுக் கேட்டீர்களா? படித்தீர்களா?
நான் பாட்டையும் பதிவையும் பகிர்ந்தது
ஊடகவியல் படித்தேன் என்பதற்காக அல்ல
வலைப்பூவும் மின் ஊடகமே - அதனை
அறிந்துகொள்வோம் என்பதற்காக என்றே!

பதிவர்களே! பதிவர்களே!
அக்கு வேறு ஆணி வேறு என
வலைப்பூவைப் பற்றி அறிந்துகொண்டு
உலகெங்கும்
நற்றமிழாலே நல்லறிவைப் பகிர்வோம் - அதுவே
நான் பகிர்ந்ததன் பயன் என்றுரைப்பேன்!

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

படம் (பணம்) பார்த்துப் பாப்புனைய வாருங்கள்!

ஏடுகளுக்கு எழுதி அனுப்பினால்
ஏடுகளில் வெளிவந்ததும் தெரியுமே
பாப்புனையும் ஆற்றல் என்பேன்!
போட்டிகளுக்கு எழுதி அனுப்பினால்
போட்டிகளில் வெற்றி பெற்றாலும்
பாப்புனையும் ஆற்றலை அறிவீரே!
பாப்புனையப் பலவகைப் போட்டிகளில்
படம் பார்த்துப் பா/கவிதை புனையும்
போட்டி ஒன்றும் இருக்கிறதே!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே
படம் பார்த்துப் பா/கவிதை புனைக என்றதும்
படபடப்பு எதற்கென்று எண்ணிப் பாரும்?

படம் சுட்டுவதென்ன சொல்லுவதென்ன
படம் பார்க்கத் தூண்டுவதென்ன - அந்த
படத்தில் மின்னும் அடையாளமென்ன
படத்தைப் பார்த்ததும் பகுத்தறியப் பார்
படத்தைப் பார்த்து எண்ணிப் பார்
தோன்றும் எண்ணங்களைத் தொகுத்து
பா/கவிதை வண்ணங்களாக புனைந்து பார்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களாலும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய முடியுமே!

பாட்டோ கவிதையோ கதையோ - நீங்கள்
எத்தனையும் எழுதலாம் வெளியிடலாம் - ஆனால்
புகைப்படம் ஒன்று சொல்லும் செய்தி தானே
தீயாக உலகெங்கும் பரவுவதைப் பாரும்!
ஆசிய நாடுகளில் அதிகம் பேசப்படும்
குமுதம் அறிக்கையாளர் (Reporter) வெளியீட்டின்
அட்டைப்படம் வாசகர் கண்ணைப் பறிக்க
பெட்டைகளின் இன்றைய கோலம் கண்டீரே!

அவரவர் விருப்புக்கு ஆடை அணிவதில்
எவரும் தலையீடு செய்ய இயலாதே
எவரது கண்ணையும் பறிக்கும் வண்ணம்
சிலரது ஆடை அணிதலையே - அந்த
குமுதம் வெளியீட்டின் அட்டைப்படம் சுட்டியதே!
ஒட்டும் கால்சட்டை (லெக்கின்ஸ்) சுண்டியிழுக்க
ஒட்டாத மேல்சட்டை (ரொப்) இறக்கை விரிக்க
ஈருருளி, உந்துருளியில போகும் பொண்ணுகளே
எல்லாம் தெரியப் பறக்கலாமோ கண்ணுகளே!
என்றெல்லோ
பாப்புனையத் தெரியாத யாழ்பாவாணனும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைவாரென்றால்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களாலும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய முடியுமே!

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய
போட்டி வைப்பதாய் அறிவிப்புச் செய்தனரே!
பணத் தாளைப் படமெடுத்து - அதையே
போட்டிப் படமாக வெளியிட்டு வைத்து
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்கள்
எண்ணத்தில் தோன்றிய பா வண்ணங்களை
எழுதி அனுப்பக் கேட்டும் உள்ளனரே!

என்னங்க... படத்தைப் பார்த்தாச்சா...
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே
படம் பார்த்துப் பா/கவிதை புனைய வருகிறதா?
இலங்கைப் பணமாய் இருக்கே - அதுவும்
நூறு உரூபாத் தாளாயிருக்கே - அதுவும்
இலங்கை ஆளுகளுக்கு
ஒரு வேளை உணவுக்கே போதாதாமே!
என்றெழுதினால்
படத்தைப் பார்த்துப் படத்தில் எழுதியதை
படியெடுத்துப் போட்டதாய் முன்னிரு அடிகளிருக்க
பின்னிரு அடிகளில் பா/கவிதை உணர்வு
இருந்தென்ன பரிசில் கிட்டாதே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களில்
"கைக்குக் கைமாறும் பணமே - உன்னை
கைப்பற்ற நினைக்குது மனமே!" என்றும்
"பணம் என்னடாப் பணம்
குணம் தானடா நிரந்தரம்" என்றும்
திரைப் பாடல் அடிகளை எழுதினாலும்
பரிசில் கிட்டாதென உணரும் எவரும்
"புதைகுழி தோண்டிப் புதைத்துப் பேணினாலும்
இரும்புக் கூட்டினில் அடைத்துப் பேணினாலும்
உழைத்துச் சேமித்த பணம் எல்லாம்
பிழைத்துக் கொள்ள உதவாமல் பறக்கிறதே!" என்று
யாழ்பாவாணனைப் போல கிறுக்கலாம் தானே!

படம் (பணம்) பார்த்துப் பா/கவிதை புனைவோரே
பணத்தை வைத்துப் பா/கவிதை புனைவதா
படத்தை வைத்துப் பா/கவிதை புனைவதா
என்றெல்லாம் எண்ணிக் குழம்பாதீர் - தங்கள்
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை வைத்து
விரும்பிய பாவண்ணங்களில் எழுதித்தான் பாருங்களேன்!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இதோ
"பணத்தாளின் முதற்பக்கத்தில பானை போலிருக்கே
பணமில்லை என்றால் உணவில்லை என்பதற்காய்
பணத்தாளின் மறுபக்கத்தில காதலிக்கும் கிளிகளா
பணத்தைக் காதலிக்கும் நாமிருக்க - பணமோ
மாற்றாரைக் காதலித்து ஓடிவிடும் என்பதற்காய்
அடையாளமிட்டு அச்சடித்தாங்களோ யாரறிவார்" என்று
யாழ்பாவாணன் பாப்புனைந்த கிறுக்கலைப் போலன்றி
எளிமையாய் எழுதுவதை விட்டிட்டு - தங்கள்
எண்ணப்படி இறுக்கமாய் சுருக்கமாய் பாப்புனையலாமே!


'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும்
படம் பார்த்துப் பாப்புனையும் போட்டி விரிப்பை அறிய
கீழ்வரும் படத்தையோ இணைப்பையோ சொடுக்குக.


http://ootru1.blogspot.com/2015/09/2015.html

வாசித்து, மதிப்பிட்டு, தெரிவுசெய் - பத்தாயிரம்


சென்னையைக் கலக்கி
மதுரையைக் குலுக்கி - இப்ப
புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக
வலைப்பதிவர் சந்திப்பு - 2015!
போட்டி மேல் போட்டி
அதுவும்
போட்டிக்குப் பத்தாயிரமென
ஐந்து போட்டி!
சுறுசுறுப்பாகப் பதிவர்கள்
போட்டி போட்டு அனுப்பிய பதிவுகளை
வாசித்து, மதிப்பிட்டு, தெரிவுசெய்தால்
பத்தாயிரம் பரிசென
ஆறாவது போட்டிக்கு ஆழைப்பு!
இருநூற்றி அறுபது பதிவுகளாம்
கொஞ்சம் எட்டிப் பாருங்க
போட்டிக்கு மூன்று வெற்றியாளர்
யாருங்க, நீங்களே சொல்லுங்க!

வாசகர்க்கான விமரிசனப் போட்டி!
யாவரும் கலந்துகொள்ளலாம்!
பரிசு ரூ.10,000 என்று தொடுக்கிறார்
வலைப்பதிவர் சந்திப்பு - 2015!
புதுக்கோட்டை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்:
http://bloggersmeet2015.blogspot.com/2015/10/10000.html

ரூபாய் 10,000 பரிசு பெற
வலைப்பக்கம்
இருக்கவேண்டிய அவசியமில்லை
செய்ய வேண்டியது என்ன? என்கிறார்
திண்டுக்கல் தனபாலன் அவர்கள்:
http://dindiguldhanabalan.blogspot.com/2015/10/Tamil-Writers-Festival-2015-5.html

வெள்ளி, 2 அக்டோபர், 2015

பழையன கழிதலும் புதியன புகுதலும் திரட்டிகளில் பாரீர்.

2010 ஆம் ஆண்டளவில் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவைப் பதிந்த பின்னர் 25 திரட்டிகளில் அதனை இணைப்பதே எமது பணியாயிருந்தது. திரட்டிகளில் இணைப்பதால் வாசகர் எண்ணிக்கை பெருகியதைக் கண்டோம்.

ஆயினும், 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல திரட்டிகள் செயலிழந்தன. அதனால், சில திரட்டிகள் தங்களை விட்டால் வேறெவரும் இல்லையென்ற எடுப்புக் காட்டினர். இப்போதும் கூட சில திரட்டிகளில் பதிவு செய்த பின் ஓராண்டு காலமாக இணைக்கப் படாமல் பதிவர்கள் காத்திருக்கின்றனர்.

திரட்டிகள் நடாத்துவது என்பது இலவான செயல் அல்ல. அவர்கள் உள்ளம் புண்படும் வண்ணம் நான் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை. 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல புதிய திரட்டிகள் தலையைக் காட்ட முனைந்தமையால் பழைய திரட்டிகளின் நிலை என்னவாகும்? பழைய திரட்டிகளுடன் மோதிப் புதிய திரட்டிகள் முன்னேற வாய்ப்பு இருக்கிறதா? தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிரலாம்.

தற்போது செயலிழந்த திரட்டிகள் கூடச் செயற்படத் தொடங்கி விட்டன. இது பதிவுலகில் நல்ல மாற்றம் என்பேன். பதிவர்.கொம் என்ற பழைய திரட்டியைப் பாவித்த பயனர்கள்; "பதிவர்.கொம் திரட்டியா... அது செயலிழந்து போயிற்றே!" என்கின்றனர். ஆனால், பதிவர்.கொம் என்பது பதிவர்.நெற் என்ற முகவரியில் இயங்குகின்றதே!

பதிவர்.நெற் திரட்டி
http://www.pathivar.net/

மதிப்புக்குரிய பதிவர்களே! பதிவர்.நெற் திரட்டியை கொஞ்சம் எட்டிப் பார்த்தீர்களா? நானும் அதில் இணைந்துவிட்டேன். நீங்களும் அதில் இணைந்துவிட்டால் புதிய பதிவுகள் விரைவில் பரவும் என எதிர்பார்க்கலாம். பதிவர்.நெற் திரட்டி மேலாளர்கள் இனி வரும் காலங்களில் சிறந்த பணிகளைப் புரிந்து முன்னணித் திரட்டியாக மின்ன யாழ்பாவாணனின் வாழ்த்துகள்!