'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள்
மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை
அறிமுகம் செய்ய இருக்கிறார்களாம். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்த்த பின்னர், இணைந்து
கொள்ளுங்கள்.
ஏற்கனவே பல திரட்டிகளுக்கு
மூச்சுப் போயிற்று, இருக்கிற சில மூச்சுப் போகும் நிலையில் நொந்து போய் இருக்கின்றன.
இந்த வேளை பார்த்துத் தலையைக் காட்டும் ஊற்று - வலைத்திரட்டிக்கு ஐந்தாறு வலைப்பதிவர்களை
இணைத்துக்கொடுக்க ஊருக்க உலாவினால், எல்லோரும் முகநூல் பக்கம் பாய்ந்து போயிட்டார்களாம்.
இதனால், சகலரும் ஒரு உண்மையை
அறியுமாறு வேண்டிக்கொள்கின்றேன். முகநூல் பக்கம் உலாவும் பதிவர்களை விட வலைப்பூக்களைப்
பேணும் பதிவர்கள், தரமான பதிவர்கள் என்பதே அந்த உண்மை! அதாவது வலைப்பூக்களைப் பேணத்
தகுதி அதிகம் தேவைப்படுகிறது என்பதும் உண்மையே! சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே
வலைப்பூக்களை நாடும் வாசகர் உள்ளனர்.
நீலாவதி (Neelavathi
Neela) நீலா என்னும் கூகிள்+ நண்பர் தனியாகப் பொருள் தரும் 45 தமிழ் எழுத்துகளை அறிமுகம்
செய்திருக்கிறார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்.
தனியாகப் பொருள் தரும்
45 தமிழ் எழுத்துகளையும் பாவித்துத் தமிழை அழகுபடுத்தும் பதிவர்கள் முகநூலை விட வலைப்பூக்களில்
தான் அதிகம் உலாவுகின்றனர். ஏனெனில் தரமான படைப்பாளிகளை வலைப்பூக்களில் தான் அதிகம்
காணலாம். ஆயினும், கூகிள்+, முகநூல் பக்கங்களிலும் தரமான படைப்பாளிகள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
எப்படி இருப்பினும் வலைப்பூக்களின்
நிறம் தெரியாதோரும் வாசகர் இன்றி வலைப்பூக்களைப் பேண முடியாதோரும் முகநூல் பக்கங்களில்
உள்ளனர் என்று சொல்லிவிட முடியாது. அறிந்தவர், தெரிந்தவர், உறவுக்காரர் எல்லோரும் வாசகராகலாம்
என முகநூல் பக்கம் தாவுவோர் இருக்கலாம்.
எனவே,
சிறந்த பதிவை அல்லது தரமான
பதிவை நம்பியே
வலைப்பூக்களை நாடும் வாசகரை
நம்பியே
வலைப்பூக்களைப் பேணும்
பதிவர்களே
சிறந்த படைப்பாளிகள்!
- ஆயினும்
முகநூலிலும் சிறந்த படைப்பாளிகள்
சிலர் இருக்கலாம் - எல்லோருமல்ல!
நகைச்சுவையாக நண்பர்கள்
கூறியது:
முதலாம் நண்பர்: அன்று
வலைப்பூக்களில் பதிவைப் பதிவு செய்த பின்னர், முகநூல் வாசகரை ஈர்க்க முகநூலில் இணைப்பைப்
பகிர்ந்தோம்.
இரண்டாம் நண்பர்: இன்று
முகநூலில் பதிவைப் பதிவு செய்த பின்னர், அதன் இணைப்பை வலைப்பூக்களில் பகிரும் நிலை
வந்தாச்சே!
காலம் இப்படி மாறிப்போச்சண்ணே!
எப்படிச் சொன்னாலும் வலைப்பூக்களைப் பேண புதிய பதிவர்களை உருவாக்க வேணும் போல கிடக்கு.
அதுவரை வலைப்பூக்களைப் பேணும் பதிவர்களே சிறந்த படைப்பாளிகள்! அது தானே அக்கா உண்மை!
மாற்றுக் கருத்து இருப்பின்
முன் வையுங்க பார்ப்போம்!
கருத்து மோதல் வலுக்கட்டும்
பார்ப்போம்!
முடிவு வாசகர் உள்ளத்திலே!