Translate Tamil to any languages.

வெள்ளி, 17 ஜூன், 2016

நீங்களும் மின்னூல் அனுப்பலாம் - 2016

இப்பதிவு ஆடி 13, 2013 அன்று "தூயதமிழ் பேணும் பணி" என்ற எனது வேர்ட்பிரஷ் வலைப்பூவில் வெளியானது. சில மாற்றங்களுடன் இதனை மீள்பதிவு செய்கிறேன்.
உலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் நூல்கள் முதன்மையாகத் தேவைப்படுகிறது.
தமிழ் வாழத் தமிழ் இலக்கியங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழ் இலக்கியங்களை ஆக்குவோருக்கான கவிதை, பாட்டு, கதை, நாடகக் கதை, திரைக் கதை, நகைச்சுவை, கட்டுரை எழுத உதவும் நூல்கள் இரண்டாவதாகத் தேவைப்படுகிறது.
நம்மாளுகள் இலக்கியங்களை ஆக்கினால், அதனை வெளியிடுவதற்கான அறிவைப் பெற உதவும் அச்சு இதழியல், மின் இதழியல் சார்ந்த நூல்கள் மூன்றாவதாகத் தேவைப்படுகிறது.
இத்தனையும் இருந்தால் போதாது. நாம் தமிழர் எனக் கூறி நீண்ட நாள் வாழ்ந்து தாய்த் தமிழைப் பேண உளநலம், உடல் நலம், நெடு நாள் வாழ உதவும் மருத்துவ நால்கள், வழிகாட்டல் மற்றும் மதியுரை (ஆலோசனை) நால்கள் நான்காவதாகத் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, நாம் தமிழர் எனக் கூறினால் நமது வரலாற்றுப் பின்புலம் தேவைப்படுகிறது. தமிழர் வரலாற்று நால்கள், தமிழர் ஆய்வு நால்கள், தமிழ் வரலாற்று நால்கள், தமிழ் ஆய்வு நால்கள் எனத் தமிழரின் அடையாளத்தையும் தமிழின் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடிய நால்கள் ஐந்தாவதாகவும் அதிகமாகவும் தேவைப்படுகிறது.
மேற்படி எதிர்பார்ப்புடன் தான் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண எனது மின்னூல் களஞ்சியத்தை மேம்படுத்துகிறேன். தற்போது நான்கு இணையச் சேமிப்பகங்களில் மின்நூல்கள் திரட்டிப் பகிரவோ பதிவிறக்கவோ வசதி செய்துள்ளேன். எனினும் நூறாயிரம் (இலட்சம்) மின்நூல்களைத் திரட்டிப் பேண முயற்சி செய்கின்றேன்.

இதற்கெனத் தனி வலைப்பக்கத்தைப் பேணுகின்றேன். அதனைப் பயன்படுத்தி நான்கு இணையச் சேமிப்பகங்களில் இருந்தும் தங்களுக்கு வேண்டிய மின்நூல்களை பகிரவோ பதிவிறக்கவோ முடியும். முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மின்னூல் களஞ்சியத்தைப் பார்வையிடுங்கள்.

யாழ்பாவாணன் ஆகிய நானொரு சின்னப்பொடியன், மேற்காணும் எல்லை மீறிய பணித் திட்டத்தை என் உள்ளத்தில் விதைத்து இறங்கிவிட்டேன். என்னிலும் பெரியோர்களாகிய நீங்கள்; தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பி எனக்கு உதவினால், இப்பணித் திட்டத்தை மேலும் மேலும் மேம்படுத்த இடமுண்டு.

இக்களஞ்சியங்களில் இல்லாத மேலே கூறிய வகைகளில் தேவைப்படும் நூல்களை நீங்களும் அனுப்பலாம். மின்னூல்கள் HTML Help File ஆகவோ Acrobat Adobe Reader File ஆகவோ இருக்கலாம். உங்களைப் போன்றவர்களால் தான்தமிழறிஞர்களின் மின்நூல் களஞ்சியம்மேம்பட இருக்கிறது.
தாங்கள் தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பும் போது; தங்கள் இணையத்தள முகவரி, மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நடைபேசி இல, தொலைபேசி இல எனத் தங்களைத் தொடர்புகொள்ளக்கூடிய தகவலையும் அனுப்புங்கள்.
ஏனெனில், எனது தளத்தில் தமிழறிஞர்களின் மின்நூல்களை வழங்கியோரின் விரிப்பைத் தனிப் பக்கமாக வெளியிட இருப்பதால் தான் இதனைத் தெரிவிக்கின்றேன். தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்ப விரும்பும் நண்பர்கள் எல்லோருக்கும் இது பொருந்துமென நம்புகிறேன்.
உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களை அனுப்ப விரும்புவோர் Email: yarlpavanang1@gmail.com, Mobile: 0094750422108 ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.

மாற்றுவழி: தங்கள் மின்னஞ்சலில் நூல்கள் அனுப்பக் கடினமாயின் http://www.filesovermiles.com என்ற தளத்திற்குச் சென்று நூல்களைப் பதிவேற்றி; அதற்கான கடவுச்சொல்லை (Password) வழங்கி இணைப்பைப் (Url) பெறுக. அவ்விணைப்பையும் (Url) கடவுச்சொல்லையும் (Password)மின்னஞ்சலில் எமக்கு அனுப்பி வைக்குக. இச்செயற்பாடு ஒரு முறை பதிவிறக்கியதும் செயலற்றுப் போய்விடும். அதாவது, மீளப் பதிவிறக்க இயலாது.

மேலும், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி, மின்நூலாக்கி, இக்களஞ்சியங்களில் பகிரும் நோக்கில் கருத்துக்களம் ஒன்றையும் பேணுகின்றேன். அதில் உங்கள் பதிவுகளை இடம்பெறச் செய்தும் உதவலாம். மேலதிக விபரங்களுக்கு:
 http://www.ypvnpubs.com/2016/04/blog-post_24.html

12 கருத்துகள் :

  1. தங்களின் தமிழ்த்தொண்டுக்கு எமது வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. தங்களின் அருமையான சேவை தொடர வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. தங்களது பணி தொடர வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!