Translate Tamil to any languages. |
வெள்ளி, 9 அக்டோபர், 2015
ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!
ஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே
ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே!
ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே
ஒவ்வொரு வலைப்பூக்களும் வெளியிடுமே
உலகிற்கு நற்றமிழில் நல்லறிவை!
அச்சு ஊடகங்களுக்குச் சரிநிகராகவே
மின் ஊடகங்களும் மின்னுகிறதே
மின் ஊடகங்களில் வலைப்பூவும்
அச்சு ஊடகங்களை முந்துகிறதே - ஒவ்வொரு
வலைப்பதிவர்களும் படிக்கலாமே!
சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையைத் தூண்டும்
சித்தர் எழுதிய பாடலென - நம்ம
மதுரைத் தமிழன் வெளியிட்டு வைக்க
http://avargal-unmaigal.blogspot.com/2015/10/tamil-bloggers.html
தமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சிப் பாடலென - நம்ம
'தமிழ் மறை தமிழர் நெறி' ஒலி பெருக்கிட
http://vazhvuneri.blogspot.com/2015/10/blog-post_9.html
உலகெங்கும் உலாவுகிறதே பதிவர்களுக்கான பாடல்
ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!
உலகில் வலைப்பூ ஊடகமும் சிறக்க
வலைப்பதிவர்களும் உலகெங்கும் மின்ன
திண்டுக்கல் தனபாலனின் எண்ணங்கள்
வலைப்பூ ஊடகம் மேம்பட வழிகாட்டுமே
ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!
தமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல்.
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது...
"என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...
எந்த வலைப்பூப் பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறிப் போகும் மாயங்கள்...!
கருத்துத் தாங்கும் பதிவுகள் தானே
முன்னணிப் பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...
யாருக்கில்லைப் போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...
வலைப்பூப் பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...
இலட்சம் பதிவுகள் கண்ணோடு...
இலட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!
பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை, மறுமொழி
எல்லாமே நட்பாகும்...
பதிவுகள் இன்றி வலைப்பூவா...?
நேரம் ஏனில்லை என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...
எழுதியவர்: திண்டுக்கல்தனபாலன் புதன், ஐப்பசி 07, 2015
http://dindiguldhanabalan.blogspot.com/
பதிவர்களே! பதிவர்களே!
பாட்டுக் கேட்டீர்களா? படித்தீர்களா?
நான் பாட்டையும் பதிவையும் பகிர்ந்தது
ஊடகவியல் படித்தேன் என்பதற்காக அல்ல
வலைப்பூவும் மின் ஊடகமே - அதனை
அறிந்துகொள்வோம் என்பதற்காக என்றே!
பதிவர்களே! பதிவர்களே!
அக்கு வேறு ஆணி வேறு என
வலைப்பூவைப் பற்றி அறிந்துகொண்டு
உலகெங்கும்
நற்றமிழாலே நல்லறிவைப் பகிர்வோம் - அதுவே
நான் பகிர்ந்ததன் பயன் என்றுரைப்பேன்!
லேபிள்கள்:
7-அறிஞர்களின் பதிவுகள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
நன்றி... மிக்க நன்றி தோழர்...
பதிலளிநீக்குஅன்புடன் திண்டுக்கல் தனபாலன்
தமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குநற்றமிழாலே நல்லறிவைப் பகிர்வோம்
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குபாட்டையும் கேட்டேன்..பதிவையும் படித்தேன் நண்பரே.....வாழ்த்துக்களும் நன்றியும்...
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குஅருமை நண்பரே!
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குஸூப்பர் நண்பரே வாழ்த்துகள் நண்பர் திண்டுக்கல்லாருக்கும், சுப்பு தாத்தாவுக்கும்..
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குஅருமையான பாடல்! பாடியவர்க்கும் எழுதியவர்க்கும் வாழ்த்துக்கள் அய்யா!
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குபாடலை சுப்புதாத்தாவின் குரலி கேட்கும் போது. இனிமையாக உள்ளது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குஏற்கெனவே படித்தேன். இப்போது பாடலாகவும் கேட்டேன். வாழ்த்துகள் DD. சபாஷ் சுப்பு தாத்தா.
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குபடித்தோம், கேட்டோம். அருமையான, நல்ல முயற்சி. சிறப்பாக அமைந்துள்ளது. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நன்றி.
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குஅருமை நண்பரே!
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குஅருமை நண்பரே!
பதிலளிநீக்குவலைப்பூப் பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்.
அருமை ! அருமை !
தமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்குஎழுச்சி பாடல் நன்று, திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
நீக்கு