Translate Tamil to any languages.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

படம் (பணம்) பார்த்துப் பாப்புனைய வாருங்கள்!

ஏடுகளுக்கு எழுதி அனுப்பினால்
ஏடுகளில் வெளிவந்ததும் தெரியுமே
பாப்புனையும் ஆற்றல் என்பேன்!
போட்டிகளுக்கு எழுதி அனுப்பினால்
போட்டிகளில் வெற்றி பெற்றாலும்
பாப்புனையும் ஆற்றலை அறிவீரே!
பாப்புனையப் பலவகைப் போட்டிகளில்
படம் பார்த்துப் பா/கவிதை புனையும்
போட்டி ஒன்றும் இருக்கிறதே!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே
படம் பார்த்துப் பா/கவிதை புனைக என்றதும்
படபடப்பு எதற்கென்று எண்ணிப் பாரும்?

படம் சுட்டுவதென்ன சொல்லுவதென்ன
படம் பார்க்கத் தூண்டுவதென்ன - அந்த
படத்தில் மின்னும் அடையாளமென்ன
படத்தைப் பார்த்ததும் பகுத்தறியப் பார்
படத்தைப் பார்த்து எண்ணிப் பார்
தோன்றும் எண்ணங்களைத் தொகுத்து
பா/கவிதை வண்ணங்களாக புனைந்து பார்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களாலும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய முடியுமே!

பாட்டோ கவிதையோ கதையோ - நீங்கள்
எத்தனையும் எழுதலாம் வெளியிடலாம் - ஆனால்
புகைப்படம் ஒன்று சொல்லும் செய்தி தானே
தீயாக உலகெங்கும் பரவுவதைப் பாரும்!
ஆசிய நாடுகளில் அதிகம் பேசப்படும்
குமுதம் அறிக்கையாளர் (Reporter) வெளியீட்டின்
அட்டைப்படம் வாசகர் கண்ணைப் பறிக்க
பெட்டைகளின் இன்றைய கோலம் கண்டீரே!

அவரவர் விருப்புக்கு ஆடை அணிவதில்
எவரும் தலையீடு செய்ய இயலாதே
எவரது கண்ணையும் பறிக்கும் வண்ணம்
சிலரது ஆடை அணிதலையே - அந்த
குமுதம் வெளியீட்டின் அட்டைப்படம் சுட்டியதே!
ஒட்டும் கால்சட்டை (லெக்கின்ஸ்) சுண்டியிழுக்க
ஒட்டாத மேல்சட்டை (ரொப்) இறக்கை விரிக்க
ஈருருளி, உந்துருளியில போகும் பொண்ணுகளே
எல்லாம் தெரியப் பறக்கலாமோ கண்ணுகளே!
என்றெல்லோ
பாப்புனையத் தெரியாத யாழ்பாவாணனும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைவாரென்றால்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களாலும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய முடியுமே!

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய
போட்டி வைப்பதாய் அறிவிப்புச் செய்தனரே!
பணத் தாளைப் படமெடுத்து - அதையே
போட்டிப் படமாக வெளியிட்டு வைத்து
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்கள்
எண்ணத்தில் தோன்றிய பா வண்ணங்களை
எழுதி அனுப்பக் கேட்டும் உள்ளனரே!

என்னங்க... படத்தைப் பார்த்தாச்சா...
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே
படம் பார்த்துப் பா/கவிதை புனைய வருகிறதா?
இலங்கைப் பணமாய் இருக்கே - அதுவும்
நூறு உரூபாத் தாளாயிருக்கே - அதுவும்
இலங்கை ஆளுகளுக்கு
ஒரு வேளை உணவுக்கே போதாதாமே!
என்றெழுதினால்
படத்தைப் பார்த்துப் படத்தில் எழுதியதை
படியெடுத்துப் போட்டதாய் முன்னிரு அடிகளிருக்க
பின்னிரு அடிகளில் பா/கவிதை உணர்வு
இருந்தென்ன பரிசில் கிட்டாதே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களில்
"கைக்குக் கைமாறும் பணமே - உன்னை
கைப்பற்ற நினைக்குது மனமே!" என்றும்
"பணம் என்னடாப் பணம்
குணம் தானடா நிரந்தரம்" என்றும்
திரைப் பாடல் அடிகளை எழுதினாலும்
பரிசில் கிட்டாதென உணரும் எவரும்
"புதைகுழி தோண்டிப் புதைத்துப் பேணினாலும்
இரும்புக் கூட்டினில் அடைத்துப் பேணினாலும்
உழைத்துச் சேமித்த பணம் எல்லாம்
பிழைத்துக் கொள்ள உதவாமல் பறக்கிறதே!" என்று
யாழ்பாவாணனைப் போல கிறுக்கலாம் தானே!

படம் (பணம்) பார்த்துப் பா/கவிதை புனைவோரே
பணத்தை வைத்துப் பா/கவிதை புனைவதா
படத்தை வைத்துப் பா/கவிதை புனைவதா
என்றெல்லாம் எண்ணிக் குழம்பாதீர் - தங்கள்
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை வைத்து
விரும்பிய பாவண்ணங்களில் எழுதித்தான் பாருங்களேன்!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இதோ
"பணத்தாளின் முதற்பக்கத்தில பானை போலிருக்கே
பணமில்லை என்றால் உணவில்லை என்பதற்காய்
பணத்தாளின் மறுபக்கத்தில காதலிக்கும் கிளிகளா
பணத்தைக் காதலிக்கும் நாமிருக்க - பணமோ
மாற்றாரைக் காதலித்து ஓடிவிடும் என்பதற்காய்
அடையாளமிட்டு அச்சடித்தாங்களோ யாரறிவார்" என்று
யாழ்பாவாணன் பாப்புனைந்த கிறுக்கலைப் போலன்றி
எளிமையாய் எழுதுவதை விட்டிட்டு - தங்கள்
எண்ணப்படி இறுக்கமாய் சுருக்கமாய் பாப்புனையலாமே!


'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும்
படம் பார்த்துப் பாப்புனையும் போட்டி விரிப்பை அறிய
கீழ்வரும் படத்தையோ இணைப்பையோ சொடுக்குக.


http://ootru1.blogspot.com/2015/09/2015.html

12 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. போட்டி விவரம் கண்டேன். நல்முறையில் போட்டிகள் நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. மன்னிக்க வேண்டும்
    இருவேறு சம்பவங்களை பற்றி எழுதக் கூடாதென்று முடிவெடுத்திருக்கின்றேன் அதன் விளைவை நன்குணர்ந்ததால்,,
    ஒன்று DSP விஷ்ணுபிரியா மரணம்
    மற்றொன்று குமுதம் ரிப்போட்டரின் லெக்கின்ஸ் அட்டைப்படம்.
    ஆகையால் இப்போட்டில் கலந்தகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். நிச்சயமாக அடுத்த போட்டியில் நான் இடம் பெறுவேன் என்பது உறுதி. போட்டியில் பங்குபெறுபவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2015 இல்;
      DSP விஷ்ணுபிரியா பற்றியோ குமுதம் ரிப்போட்டரின் லெக்கின்ஸ் அட்டைப்படம் பற்றியோ எழுதுமாறு கேட்கப்படவில்லை.
      பணம் பற்றித்தான்... பணத்தாளைப் படமாக்கி அப்படத்திற்குக் கவிதை எழுதுமாறு தான் கேட்கப்பட்டிருக்கிறது.
      இதோ இணைப்பு: http://ootru1.blogspot.com/2015/09/2015.html
      மேற்காணும் இணைப்பைச் சொடுக்கிப் போட்டி விரிப்பைப் படித்த பின் போட்டியில் பங்கெடுங்குமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

      பாழ்படுவான் யாழ்பாவாணன்
      படம் (பணம்) பார்த்துப் பாப்புனைய
      படிப்பிக்க எடுத்துக்காட்டாய்
      குமுதம் ரிப்போட்டரின் லெக்கின்ஸ்
      அட்டைப்படத்தைக் காட்டிப்புட்டான் - அவன்
      சின்னப்பொடியன் அப்படிக் காட்டியதிற்காக
      'ஊற்று' நடாத்தும் போட்டியில்
      பணம் பற்றிப் பாப்புனைந்து
      போட்டியில் கலந்திடாமல் இருப்பது
      யாழ்பாவாணனுக்கு
      ஒறுப்பு வழங்கியதாக இருக்காது!
      ஆகையால், ஐயா!
      'ஊற்று' நடாத்தும் போட்டியில்
      பணம் பற்றிப் பாப்புனைந்து
      போட்டியில் கலந்துகொள்ளுமாறு
      பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
      இதோ இணைப்பு: http://ootru1.blogspot.com/2015/09/2015.html

      நீக்கு
  4. போட்டி சிறப்பாக அமையட்டும் ஊற்று இணைப்பு பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு


  5. போட்டி சிறக்கட்டும்.

    சில படங்களைப் பார்த்து, சில வரிகளை எழுதி, என்டர் தட்டி, என்டர் தட்டி, கவிதையாக்கி முக நூலில் பகிர்ந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. போட்டிகள் சிறந்திட எங்கள் வாழ்த்துகள்! வெற்றி பெறுவோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    போட்டிக் காலமோ.....ஒரே போட்டிகள்தான்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!