Translate Tamil to any languages.

எழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்

நம்மாளுகளுக்கு தெரியும் கதை எழுதுபவர் கதாசிரியர், பாடல் எழுதுபவர் பாடலாசிரியர், நாடகம் எழுதுபவர் நாடக ஆசிரியர், சிலையை ஆக்குவோர் (சிற்பம் வடிப்பவர்) சிலையாக்குவோர்  (சிற்பாசிரியர்என்றவாறு; இவ்வாறான படைப்புக்களை ஆக்குவோர் படைப்பாளி எனலாம்.

பிள்ளையாருக்கு அப்பம், முப்பழம், அமுது எனப் படைப்பதைப் படையல் என்கிறோம். அவ்வாறே நம்மாளுகள் பிறர் விரும்ப ஆக்கி முன்வைப்பதையும் கூட படையல் என்கிறோம். இந்த படையலில் இருப்பவைதான் படைப்பு என்றால்; இந்தப் படைப்பை ஆக்கியோர் தான் படைப்பாளிகள் என்று கூறுகின்றோம்.

பிள்ளையாருக்குப் (கடவுளுக்குப்) படைக்க முயற்சி எடுக்கும் படைப்பாளிகள் சுத்தமாக, புனிதமாக இருக்கும் வண்ணம் படைப்பை ஆக்க வேண்டும் என்பர். அது போலத் தான் இலக்கியப் படைப்பை ஆக்குவோர் மக்களின் / வாசகர்களின் / பயனரின் விருப்பை நிறைவு செய்யும் வண்ணம் படைப்பை ஆக்க வேண்டுமே!

படைப்பாளிகளே! தங்கள் படைப்புகளில் உள்ளிருக்கும் கருப்பொருளும் கருப்பொருளைக் கையாளும் நுட்பம் அல்லது கையாளும் நோக்கம் என்பவை தான் தங்களைச் சிறந்த படைப்பாளியென அடையாளப்படுத்த உதவும் என்பதை மறக்க வேண்டாம். ஒரு வெளியீட்டகம் என்ற முறையில் யாழ்ப்பாவாணன் வெளியீட்டகம் மேற்காணும் அடிப்படைப் பொது நோக்கிலே படைப்புகள், படைப்பாளிகள் பற்றிப் பொருட்படுத்துகிறது.

படைப்பை ஆக்கும் போது ஒரு குற்றிக் காசின் இரு பக்கங்களைப் போல நன்மை, தீமைகளை முன்கூட்டியே கருத்திற்கொண்டு படைப்பாக்கம் செய்யலாம். பலருக்கு நன்மை அளிக்கும் அல்லது பலருக்கு அறிவை ஊட்டும் அல்லது பலருக்குப் பயன் அளிக்கும் படைப்பையே முதலில் கருத்தில் கொள்ளலாம். அவ்வகைப் படைப்பாளிகளையே சிறந்த படைப்பாளிகள் எனக் கருதமுடியும்.

எடுத்து காட்டாக "நடுவழியே “V” வெட்டுக் கட்டைக் கீழ்ச்சட்டை, குட்டை மேற்சட்டை போட்டொருத்தி நடந்து போனால்" என்ற செயலைக் கருதுக. இதனைக் கண்ட பா(கவிதை) ஆசிரியர்களின் படைப்பைப் பாருங்கள்.

(1) எல்லாம் தெரிய
   எல்லோரும் பாரென
   ஆடையணிவதே வேலை ஆயிற்றா?
   தெருப்பொடியளைத் தன்பக்கம் ஈர்க்கிறாயா?
   சுய இன்பம் காணத்தூண்டுகிறாயா?

(2) பெண்களே! - நீங்கள்
   ஆடைகளைக் குறைத்தணிந்து
   ஆண்களை ஈர்ப்பதை விட
   அன்பாலே ஆண்களை மடக்கலாமே!
   மறந்து விடாதீர்கள்;
   பாலுணர்வைத் தூண்டாத ஆடைகளே
   பண்பாட்டைப் பேண உதவுமே!

(3) மக்களே! தோழியரே!
   ஆடைக் குறைப்புத் தாய்க்குலத்தை
   கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன?
   அப்ப தான்
   தெருப்பொடியன்கள்
   ஆடைக் குறைப்புப் பெண்களை
   கெடுக்க முன்வர மாட்டாங்களே!

மேற்காணும் மூன்று பதிவுகளில் மக்களாய (சமூக) விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் கூறி முதலாம் இடத்தில் மூன்றாம் கவிதை மின்னுகிறதால் அதனை ஆக்கியோரே சிறந்த படைப்பாளி. இரண்டாம் இடத்தில் இரண்டாவதும் மூன்றாம் இடத்தில் முதலாவதும் மின்னுவதாகக் கூறலாம். இவ்வாறே படைப்பாளிகளின் தரத்தையும் மதிப்பிட முடியும்.

படைப்பாளிகளே!
அறிஞர்கள் காத்திருப்பது
படைப்புகளையும் படைப்பாளிகளையும்
இப்படி தான் மதிப்பிடவே!
படைப்பாளிகளே!
எப்படி தான்
எதனைப் படைத்தாலும் - தங்கள்
படைப்பாக்கத்தில் கொஞ்சம்
கண்ணும் கருத்துமாக இருந்தால்
உங்களை வெல்ல
எவர் வருவார் இங்கே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!