Translate Tamil to any languages.
1-உளநலக் கேள்வி – பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1-உளநலக் கேள்வி – பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 மே, 2017

ஊடகங்களில் மருந்துப் பெயர்களை வெளியிடலாமா?

அச்சு ஊடகங்களை விட, மின் ஊடகங்களைப் பலர் பாவிப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தான் கரணியம் (காரணம்) ஆகிறது. எப்படி இருப்பினும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் குறிப்பிடுவதால் நன்மை, தீமை இருக்கலாம். ஆயினும், அதிகம் தீமை இருப்பதாகப் பேசப்படுகிறது. 

இது பற்றிக் கேட்ட போது "தன் (சுய) மருத்துவத்தைத் தூண்டாத வகையில் எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவிக்கலாம்" என்று மருத்துவர் ஒருவர் எனக்கு மதியுரை (ஆலோசனை) தந்துள்ளார். இப்பதிவிலும் எடுத்துக்காட்டாக எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவித்த பதிவுகளைப் பகிர்ந்துமுள்ளேன்.


எடுத்துக்காட்டு - 01
மேற்படி இணைப்பில் "மருத்துவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்..., அது Urinary infection க்கு தலைசிறந்த மருந்து." என்றும் குறித்த மருத்துவரைத் தொடர்பு கொள்வதற்கான முகவரியையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 'சிறுநீரகக் கட்டி' நோய்க்குக் குறித்த மருத்துவரை நாடினால் சுகப்படுத்தலாம் எனக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 02
மேற்படி இணைப்பில் டாக்டர் மு.அருணாச்சலம் அவர்களின் பதிவாக குங்குமம் "டாக்டர்" பகுதியில் 'கர்ப்பத்தடை மருந்துகள்' பற்றி அலசப்பட்டுள்ளது. "மாதவிடாய் தள்ளிப்போகத் தரும் மருந்துகளை அடிக்கடி எடுப்பதனால், அதிக ரத்தப்போக்குக் காரணமாக கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வரலாம். வேண்டாம்!" என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கையுடனான மருத்துவ மதியுரை எனலாம்.

எடுத்துக்காட்டு - 03
மேற்படி இணைப்பில் யாழ்பாவாணன் அவர்கள் மருத்துவருக்குப் பொய்யுரைத்தல், மாதவிலக்கு வருவதைத் தள்ளிப்போடும் மருந்து, ஆண்-பெண் வயாக்ரா, பெண்களைக் கற்பளிப்புச் செய்த பின் தப்பித்துக் கொள்ள உதவும் மருந்து ஆகியவற்றைக் கூறி "மருத்துவரை நாடாமல் இதனைப் பாவிப்பதால் சாவைச் சந்திக்கின்றனர்." என எச்சரிக்கிறார். அதாவது, மருந்து என்றால் மருத்துவரை நாடி மருத்துவரின் மதியுரைப்படியே பாவிக்கலாம் என்கிறார். மேலும், "மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் (Pharmacist) மருத்துவர் விரிப்புத் தாள் (Doctor's Description) இன்றி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது" என்கிறார்.

எடுத்துக்காட்டு - 04
மேற்படி இணைப்பில் "தலைவலி, உடல்வலிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்க!" என மருத்துவரை நாடாமல் மருந்துக் கடைகளில் மருந்து வேண்டி உண்ணும் சூழலைச் சுட்டிக்காட்டி, கேட்போர் கேட்டதும் மருந்துகளை விற்போரையும் சாடி, "பொருத்தமான, நல்ல மருத்துவரிடம் சந்தேகங்களைக் கேட்பதும், சிகிச்சை பெறுவதும்தான் ஆரோக்கியம் காக்க உதவும்." என வழிகாட்டப்படுகிறது. அதாவது, "நோய்கள் நெருங்கியதும் நல்ல மருத்துவரை நாடிப் போவதே சரி." என்ற செய்தியைக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 05
மேற்படி இணைப்பில் "விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!" என்ற விகடன் பதிவைப் படியுங்கள். "நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!" என எச்சரிக்கை செய்கின்றனர். இப்பதிவு ஓர் சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம் என்பேன்.

மேற்காணும் எடுத்துக்காட்டுகளை வைத்துக்கொண்டு அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாமா? எடுத்துக்காட்டு - 04 உம் எடுத்துக்காட்டு - 05 உம் இதற்கான நல்ல பதிலைத் தந்திருக்கும். அதில் "காய்ச்சல், பீய்ச்சல்" என்றாலே கூகிள் தேடுபொறியில் மருந்துகளைத் தேடிப் பாவிக்கிறார்கள் எனின் "நோயும் அந்நோய்க்கான மருந்தும்" மருத்துவர்கள் அல்லாத நாம் பகிர்ந்தால் அப்படியே குடித்துச் சாகவும் பலர் இருக்கிறார்களே! ஆயினும் மருத்துவர்கள் வெளியிடும் பதிவுகளில் மருந்துப் பெயர்களைத் தந்திருந்தாலும் "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி பாவிக்கலாம்." என்று எழுதியிருப்பார்களே!

எடுத்துக்காட்டுக்கு வயிற்றோட்டம் வந்திட்டுது என்றால் கோப்பி அல்லது 5ml தேன் குடிக்கிறோம். 5ml தேன் குடித்ததும் சிறிது நேரத்திற்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. அல்லது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடிக்கக்கூடாது. அதாவது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடித்தால் வயிற்றோட்டம் அதிகரிக்கும். வயிற்றோட்டத்தை அதிகரிக்கவோ வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தவோ 5ml தேன் பாவிக்கின்ற முறையில் தான் இருக்கு. அதேவேளை குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா எவருக்கு '5ml தேன்' வழங்கலாம் என்பதில் கூடச் சிக்கல் இருக்கே!

அதேபோலத் தான் காய்ச்சல் என்றால் 'பனடோல்' அல்லது 'பரசிற்றமோல்' எனப் பல மருந்துகள் இருக்கலாம். "இம்மருந்துகளை எவருக்கு (குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா) எவ்வளவு வழங்கலாம்; எத்தனை தடவை வழங்கலாம்; எத்தனை பக்க விளைவுகள் இருக்கு." என்பதை அறியாமல் பதிவுகளில் பகிருவது பாதிப்பையே தரும். ஆகையால் மருத்துவராயினும் சரி படைப்பாளியாயினும் சரி பதிவர்களாயினும் சரி "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி மருந்துகளைப் பாவிக்கலாம்" என்று மருந்துப் பெயர்களைப் பகிரலாம்.

நோய் சுட்டி, அதற்குத் தீர்வாக மருந்துப் பெயர்களை முன்வைத்தால் வாசகர் தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டும் என்பதால் மருந்துப் பெயர்களைப் பகிருவதை ஏற்கமுடியாது. நோயாளியின் உடல்நிலை மற்றும் நோயின் அறிகுறியைத் தீர்மானிப்பவர் மருத்துவரே! மருத்துவரின் அறிவுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டும்.

இந்த இந்த நோய்களுக்கு இந்த இந்த மருந்துகளைப் (மருந்துப் பெயர்களைச் சுட்டி) பாவிக்கவேண்டாமென எச்சரிக்கலாம். இது பற்றி மருத்துவரின் அறிவுரையை நாடவும் எனக் குறிப்பிடலாம். எச்சரித்த பின்னும் மருந்துகளை வேண்டிப் பாவிப்போர் தான் குற்றவாளி எனலாம்.

முடிவாக "தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டாமலும் மருத்துவரின் மதியுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டுமென எச்சரித்தும் குறித்த மருந்துகளைப் பாவிப்பதனால் ஏற்படும் கேடுகளை வெளிப்படுத்தியும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாம்." என்பதே என் கருத்து.

சனி, 7 ஜனவரி, 2017

எப்படித் தான் இணைந்தார்களோ?


"இணைந்து" என்றால்
நண்பர்களாக, காதலர்களாக, மணமக்களாக
என்றொல்லாம் பேசுவாங்க...
ஓர் உயரமானவரும் ஒரு கட்டையானவரும்
இணைந்தால் நண்பர்கள் என்பாங்க...
காதலரானால், மணமக்களானால்
எப்படிப் பொருத்தம் அமைந்தது என்பாங்க...
அடடே! அங்கே பாரு...
கட்டைப் பெண்ணும் நெட்டை ஆணும்
கொஞ்சம் இங்காலையும் பாரும்
நெட்டைப் பெண்ணும் கட்டை ஆணும்
இவங்க எல்லோரும்
நல்லபடி வாழும் வேளை
நல்ல பொருத்தம் பார்த்து இணைந்த
அருமையான இணையர்கள் மட்டும்
பிரிந்து வாழ முனைவது ஏன்?
நம் கண் முன்னே காணும்
வழமைக்கு மாறான இணையர்களை
கண்டதும் நினைவிற்கு வருவது
ஒருவர் விருப்புக்கு ஒருவர் இசைந்து
ஏற்படுத்திய புரிந்துணர்வின் வலிமையே!
விட்டுக்கொடுப்பும் ஏற்றுக்கொள்ளலும் இல்லாது
விருப்பங்களுக்கு மதிப்பளித்தலும் இல்லாது
புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப இயலாதே!
புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப முடியாத
பிரிந்து வாழ முனையும் 

பிரிந்து வாழ்ந்து காட்டும்
இணையர்கள் எல்லோரும்
எப்படித் தான் இணைந்தார்களோ?

வியாழன், 10 டிசம்பர், 2015

வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?

ஈழத்திலும் மழை தான்
பொருண்மிய அழிவோடு போயிற்று!
ஆனால்
இந்தியத் தமிழகத்தில்
பொருண்மிய அழிவோடு மக்கள் உயிர்களையும்
இழக்க வேண்டியதாயிற்று!
நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
பழைய கதை - ஆனால்
நின்ற மக்கள் வெள்ளத்தை
வந்த மழை வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
(கடற்கோள்-சுனாமி போல)
2015 கார்த்திகை - மார்கழி கால
கடலூரில் தொட்டு சென்னை வரையான
தமிழக மக்களின் கதை!

எனது "கடவுளே! கண் திறந்து பாராயோ! http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html" என்ற பதிவை எழுதிய பின் தமிழக உறவுகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகையில் முகம் கொடுக்கவுள்ள சிக்கல்களுக்கான ஆற்றுப்படுத்தலைப் பகிர எண்ணினேன். இவ்வெண்ணமே இப்பதிவை எழுதத் தூண்டிற்று. வெள்ளம் வடிய நோய்கள் பெருக வாய்ப்பு உண்டென்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது பற்றிய அறிஞர்களின் வழிகாட்டலைப் பொறுக்கி உங்களுடன் பகிருவதோடு எனது எண்ணங்களையும் முன்வைக்க விரும்புகின்றேன்.

"சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது காய்ச்சல், சரும நோய்கள் மற்றும் பேதி ஆகியவை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நகரின் மருத்துவமனைகளில் தோல் நோய், ஒவ்வாமை, வைரல் தொற்றுக் காய்ச்சல், மற்றும் வயிற்றுப் போக்கு நோய்க்கூறுகளுடன் நிறைய நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரை எக்காரணம் கொண்டும் காய்ச்சாமல் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்." என்ற செய்தியை "http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-வெள்ள-பாதிப்பு-அதிகரித்து-வரும்-பேதி-காய்ச்சல்-சரும-நோய்கள்/article7961579.ece" என்ற தளத்தில் படிக்க முடிந்தது. இந்நிலை கடலூர் மாவட்டத்திலும் இருக்கு என்பதை எவரும் மறந்து விடுவதற்கில்லை.

நான், எனது கருத்தாக "துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளின் பிள்ளைகளாக வணங்குகின்றேன்." என்று தெரிவித்தாலும் "கடவுளைக் கண்டீர்களா? வாருங்கள் கடலூரிலும் சென்னையிலும் காணலாம்." என்று துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளாகவே பல அறிஞர்கள் காண்பிக்கின்றனர். ஆயினும், வெள்ளம் வடிய நோய்கள் பெருகும் வேளை மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பலர் பணம் வேண்டாமல் (இலவசமாக) மருத்துவ உதவிகள் வழங்க முன்வந்தமையைப் பாராட்டுகின்றேன்.

"சென்னை அப்பல்லோ மருத்துவமனை, மருந்துகளை இலவசமாகவும், டோர்டெலிவரி செய்வதாகவும் அறிவித்துள்ளது. 18605000101 என்ற எண்ணில் அழைத்தால் இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஏராளமான மருத்துவர்கள் தங்களின் பெயர், மொபைல் எண் கொடுத்து இலவச மருத்துவ சேவை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்." என்றும் இருபத்தைந்திற்கு மேற்பட்ட மருத்துவர்களின் விபரத்தைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம். ஆயினும், கடலூர் மாவட்டத்திற்கு இவ்வாறு உதவுவோர் விரிப்பைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உறவுகளே! நோய் வருமுன் முற்காப்பு எடுப்பதும் நோய் வந்த பின் சுகப்படுத்தப் பாதுகாப்பு எடுப்பதும் நம்மவர் கடமை. அந்த வகையில் பெருவெள்ளம் பல கழிவுகளைக் கலக்கிக் கலந்து பரப்பும். அதனால், பல தொற்று நோய்கள் பரவ வாய்ப்புண்டு. அதிலும் எலிக் கழிவு நீர், ஏனைய கழிவு கலந்த பெருவெள்ளப் பெருக்கினால் எலிக் காய்ச்சல் தோன்றலாம். அது பற்றிய தகவலை எங்கள் விருப்புக்குரிய சிறந்த பதிவர்களான THILLAIAKATHU CHRONICLES தள அறிஞர்கள் வெளியிட்ட பதிவை மறக்காமல் படியுங்கள். "இது பயமுறுத்துவதற்கு அல்ல. ஒரு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக நல்ல நோக்கத்துடன் சொல்லப்படுவதே." எனக் கூறும் அவர்களது பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
எலிக் காய்ச்சல் பற்றிய மேலதிகத் தகவலைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.

"காய்ச்சல், தொற்று நோயைத் தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) வினியோகம் செய்யப்பட்டது." என http://ns7.tv/ta/fever-infections-hospitals-prevent-government-distributed-chiretta-kacayam.html என்ற தளத்தில் கண்ணுற்றேன். ஆயினும் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) பற்றிய தெளிவான பதிவை "நிலவேம்பு - மருத்துவப் பயன்கள்" என்ற தலைப்பில் அறிஞர் முத்துநிலவன் ஐயா பகிர்ந்துள்ளார். "மழை விட்டாலும் தூவானம் விடாது. அதுபோலவே வெள்ளம் வடிந்தாலும், நோய்கள் விடாது! எச்சரிக்கை அவசியம்..." எனத் தொடரும் அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

மழை, வெள்ளப்பெருக்குக் காலங்களில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய விரிப்பினை அறிஞர் ஒருவர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
இன்னொரு அறிஞர் Google Plus பக்கத்தில் படமொன்றின் மூலம் சிறந்த வழிகாட்டலைப் பகிர்ந்துள்ளார்.

2004 கடற்கோள் (சுனாமி) காலத்தில் உடல் நலம், உளநலம் பேணும் நோக்கில் ஆற்றுப்படுத்துதல் மேற்கொண்டமை நினைவிருக்கலாம். அதே ஆற்றுப்படுத்துதல் இப்போதும் தேவை தானே! "வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?" என்றால் வேண்டும் என்றே என் பதில் அமையும். அதாவது, ஒரு நாட்டின் முதுகெலும்பான மனித வள மேம்பாடு (Human Resource Development) பற்றிப் பேசுவதாயின் உள (மன) நோய்கள் அற்ற மனித வளத்தை ஆக்கத் தேவையான ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.

பொருண்மிய இழப்பென்றால் எவராவது உதவி செய்து சரிப்படுத்தலாம். மனித உயிரிழப்பு என்றால் எப்படி ஈடு செய்வது? அதேபோல விருப்புக்குரிய உடைமைகளை இழந்தாலும் கூட, எங்காவது தேடிப் பிடித்து வேண்டிக்கொள்ளலாம். ஆனால், விருப்புக்குரிய மனித உறவுகளை இழந்தால் எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? இக்கேள்விகளுக்குப் பதில் தரமுடியாதுள்ள வேளை, இவ்வாறு பாதிப்புற்ற உள்ளங்கள் எத்தனை துயரைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனை துயரையும் தாங்கிக்கொள்ள முடியாத வேளை, அவர்களது உள்ளம் உடைந்து போகலாம். எனவே அவரவர் உள்ளம் உடைந்து போகாமல் அதாவது உள்ளம் நொந்துவிடாமல், சிறப்பாகக் கூறின் உள்ளப் புண் ஏற்பட்டுவிடாமல் ஆற்றுப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டும்.


உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் அறிஞர்கள் அல்லது உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் நிறுவனங்கள் பொருண்மிய இழப்போடு உயிரிழப்பையும் சந்தித்த கடலூரில் தொட்டு சென்னை வரையான தமிழக மக்களை ஆற்றுப்படுத்த முன்வரவேண்டும். பொருண்மிய உதவிகளும் மருத்துவ உதவிகளும் எவ்வளவுக்கு முதன்மை பெறுகின்றதோ, அதற்கு நிகராக ஆற்றுப்படுத்துதல் தேவைப்படுகிறது. ஆற்றுப்படுத்துதல் மூலம் உளநலம் பேணுவதோடு உள (மன) நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவோ குறைகவோ முடியும். எனவே, உள (மன) நோய்கள் அற்ற மக்களாயம் (சமூகம் - Society) உருவாக நாம் எல்லோரும் பொருண்மிய உதவி, மருத்துவ வழிகாட்டல் வழங்குவதோடு நின்றுவிடாமல் துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்துதல் மூலம் இயல்பு வாழ்க்கையைத் தொடர உதவவேண்டும்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்

Posted on ஜூலை 14, 2013 in Wordpress Blog that is https://mhcd7.wordpress.com

இணையத் தளமொன்றில் “கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!” என்றொரு பதிவில் “எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம். நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்கச் சந்தர்ப்பம் அதிகம்?” என டாக்டரிடம் கேட்டிருப்பதைக் கண்டேன். அதற்கான பதிலாக அமையும் வண்ணம் ஒரு பதிவைத் தரமுனைகின்றேன்.

முதலில் நான் டாக்டர் இல்லை. இணைய வழியில் உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) வழங்கும் ஒருவர்.

மேலே சுட்டப்பட்ட கேள்வி புதுமணத் தம்பதிகளுக்கு வழிகாட்டும் பதிலைத் தருமாறு கேட்டு நிற்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கு எனது பதில் நன்மை தருமென நம்புகிறேன்.

மணமான கணவன்-மனைவி கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் அறிந்து உடலுறவு வைத்துக்கொள்வதால் விரைவாகக் குழந்தையை எதிர்பார்க்கலாம். கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் என்பது ஆணுக்கல்ல; பெண்ணுக்கே உரித்தாகிறது. ஆகையால், பெண்களே இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

பெண்களின் கருப்பையில் உருவாகும் முட்டையும் ஆண்களால் வெளியேற்றப்படும் உயிரணுவும் இணைவதால்(உடலுறவு வைத்துக்கொள்வதால்) கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
அப்படியாயின், அதற்கேற்ற காலம் எது?

பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஐந்தாறு நாள்களுக்கும் அடுத்து வரவுள்ள மாதவிடாய்(வீட்டுத்தூரம்) நாளிற்கு முன் ஐந்து நாள்களுக்கும் கணவன்-மனைவி உடலுறவை மேற்கொள்ளாது எஞ்சிய நாள்களில் உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்குமெனப் பலர் கூறலாம்.

ஆயினும், பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து பன்னிரண்டாம் நாளின் பின் பதினெட்டாம் நாள் வரை கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. குழந்தையை எதிர்பார்த்து இருப்போர் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

13,14,15,16,17 ஆம் நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதற்காக மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஆறு நாள்களுக்குள் கூடாமல் எஞ்சிய நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது பொய். இதனைக் கருத்திற் கொண்டு குழந்தை பெறுவதைப் பிற்போடுவோர் ஆணுறைகளைப் பாவிக்கலாம்; அல்லது மருத்துவரை அணுகலாம்.

உண்மை என்னவென்றால், மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஆறு நாள்களின் பின்னர் தான் பெண்களின் கருப்பையில் புதிய முட்டைகள் உருவாகும். ஆயினும், அவை பெரும்பாலும் 13,14,15,16,17 ஆம் நாள்களில் தான் கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுகின்றன. சில முட்டைகள் முந்தியோ பிந்தியோ கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுவதால் எதிர்பார்க்காத விதத்தில் ஏனைய நாட்களிலும் கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கிறது.

புதுமணத் தம்பதிகளே! இளம் இணையர்களாயின் ஓராண்டு மேற்படி முயற்சி செய்து பாருங்களேன். முப்பது அகவையைத் தாண்டினால் மேற்படி ஆறு மாத காலம் முயற்சி செய்து பாருங்களேன். மேற்குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாது போனால், உடனடியாக மகப்பேற்று மருத்துவரை நாடவும்.