Translate Tamil to any languages.

ஞாயிறு, 7 ஜூன், 2026

உள/மன நலக் கருத்து

 


சிலர் நினைக்கிறார்கள் ஒருவரை மாற்றிவிட்டால் தாங்கள் சம்பத்தப்பட்டு விடலாம் என்று. ஆனால் அது பொய்! 

என்னை மாற்றுவதனால் நான் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. எனது உடலழகை, முகவழகை, பேச்சழகை, ஆடையழகை மாற்றலாமே தவிர; என்னில் உள/மன மாற்றம் இடம்பெறாது.

உள்ளத்தில் எழுதப்பட்டவை மாற்றப்படுமா? இல்லை! உள்ளத்தில் எழுதப்பட்டவை மாற்றப்பட முடியாத போது எவரும் மாறப்போவதில்லை. இது தான் உளவியல் உண்மை. உளவியல் நோக்கில் உள்ளம் மாற்றமடைய; உள்ளத்தில் உள்ள நடவடிக்கைகளை அவதானித்து மீள நினைவூட்டாத வகையில் புதிய சூழலில் புதிய முகங்களை உறவாட வைத்து சுகப்படுத்துகிறோம். அதனால், அவர்கள் பழைய நினைவுகளை மீட்பதற்கு தூண்டுதல் இல்லாமல் செய்கிறோம். அதனையே உளவியல் நோக்கிலான எமது தீர்வாக முன்வைக்கிறோம்.

மாற்றாரைப் பிடிக்காது விட்டால் ஒதுங்கிவிடலாம். மாற்றாரை நோகடிக்க வேண்டாம்.  மாற்றாரைப் புண்படுத்த வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் உங்களுடன் இணையமாட்டார்கள். அதற்கு உள்ளத்தில் எழுதப்பட்டவை இடமளிக்காது.