Translate Tamil to any languages.

வியாழன், 12 நவம்பர், 2026

யார் மூளை சாலிகள்?

 

"உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!
நன்றாகப் படித்து உழைத்தால்
மகிழ்ச்சியாகப் பிழைத்துக் கொள்வாய்!" என்று 
அம்மா, அப்பா, ஆசிரியர் என
எல்லோரும் 
அடிக்கடி சொல்லி நினைவூட்டினர்!
மாதா, பிதா, குரு தெய்வமென
அவர்கள் சொல் கேட்டு 
பின்பற்றிய எல்லோரும் 
பெரிய பெரிய புள்ளிகளாக
மின்னுவதைக் காணலாம்!
எவர் சொல்லும் கேளாமல் 
என் வழி தனி வழி என 
பயணித்த எல்லோருமே
சிறு புள்ளியாக 
எங்கோ ஒரு மூலையில் 
முடங்கி இருப்பதைக் காணலாம்!
சுற்றுச் சூழலைப் பார்த்தாவது
குறை, குற்றம் சொல்லாமல்
தங்களைத் தாங்களே
திருத்திக் கொள்வது மூளைசாலிகளே!