Translate Tamil to any languages.

வியாழன், 26 நவம்பர், 2020

இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா? பயன் தருமா?

 


ஒவ்வொரு வெள்ளி மாலை ஏழு மணிக்கும் (இல. இந். நேரம்) எமது இணைய (Team Link) வழி மரபுக் கவிதைப் பயிலரங்க (https://m.teamlink.co/9159510023...) நிகழ்வு இடம் பெறும். விரும்பும் உள்ளங்கள் இணையலாம். விரும்பியோர் தங்கள் நண்பர்கள் எல்லோரையும் இணைத்து உதவலாம். பயன்மிக்க பயிலரங்கம் என்பதை ஒருமுறை பங்குபற்றினால் தெரியவரும். இப்பயிலரங்கத் தொடரினைத் தொடர்ந்து வருகை தந்து பங்குபற்றியோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.



இலக்கியத்தில் கட்டுரை, கதை, கவிதை, பாட்டு, நகைச்சுவை, நாடகம் எனப் பல இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். இவற்றில் கவிதை எழுதுவதையே முதலில் எந்தப் படைப்பாளியும் முயற்சித்திருப்பாரென நான் நம்புகின்றேன். கடுகு போலச் சிறிய கவிதைக்குள் உலகம் போன்ற பெரிய செய்தியைச் சொல்ல முடிவதால் எல்லோரும் முதலில் கவிதையை நாடியிருக்கலாம்.

கவிதைக்கு உயிர் ஓசை / சந்தம் / இசை என்பார்கள். அப்படி அமையப் பெற்ற படைப்புகளே கவிதையாம். பொதுவாக வசனகவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை என்பன பேசப்படுகிறது. அதிகமானோர் புதுக்கவிதைச் சொந்தங்கள் தான். சிலருக்குத் தான் மரபுக்கவிதை நாட்டமாம்.

எதுகை, மோனை எட்டிப் பார்க்க

சந்தம் எனும் ஓசை நயம்

பாக்களில் ஒட்டிக் கொள்ளவே

மரபுக் கவிதைகள்

எளிதில் உள்ளத்தில் இருக்குமாமே!

இவ்வாறான மரபுக்கவிதைகளை எழுதிப் பழக ஊக்குவிக்கும் முகமாக இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளை யாழ்பாவாணன் போன்றோர் நடாத்தி வருகின்றனர். தமிழ் அறிஞர்கள் இப்பயிலரங்குகளில் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றனர். இதற்கிடையே "இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா? பயன் தருமா?" என்ற கேள்விகள் எழுகின்றன.

"இணையத்திலா? அக்கல்வி சரிவராது என்பார்! உள்ளத்தில் கவித்துவம் இருந்தால் கவிதை வருமே? பிறகேன் இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகள்? இணையக் கல்வி காற்றோடு கரையலாம்; உள்ளத்தில் நிலைக்காது!" என்று எவரும் சொல்லலாம்.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா வகை என்பன மரபுக் கவிதைகளைப் புனையத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல நூல்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இருப்பினும் ஆசிரியரின் வழிகாட்டலோடு பயில்வது சிறப்பாகும். அதேவேளை இணைய வழிப் பயிலரங்குகளிலும் பயின்று மரபுப் பாக்களைப் புனைய முடியுமே! நீங்கள் விரும்பினால் உங்களால் முடியுமே!

விரும்பும் கவிதைகளை நீபுனையத் தானே

விரும்பிநீ தான்புனை நன்று

                   (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 விருப்பம் உள்ள உள்ளங்கள் யாழ்பாவாணன் நடாத்தும் இணைய வழி மரபுக் கவிதைப் பயிலரங்குகளில் இணையலாம். முழுமையாகப் பயின்றோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

 நன்றி.

புதன், 18 நவம்பர், 2020

தொடரும் இணையவழிப் பயிலரங்குகள்

 

மேற்படி பயிலரங்கில் முழுமையாகப் பங்கெடுக்கும் பயிலுநர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். விரும்பும் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.

கொரோனா (Covid-19) உலகெங்கும் உலாவி உயிர்களைப் பறிப்பதும் உறவுகளைத் தனிமைப்படுத்துவதுமாக நகர்ந்தாலும் நம்மாளுங்க அதிலிருந்து தப்பிக்கப் போராடிய வண்ணம் வாழ்கின்றனர். அந்த வகையில் தமது அறிவினைப் பெருக்கப் பலரும் இணையவழிப் பயிலரங்கினைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் யாழ்பாவாணன் கலைப்பணி மன்றமும் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்கப் பயிலரங்குகளை நடாத்தி வருகிறது.

இதுவரை புதுக்கவிதைப் பயிலரங்கம், நகைச்சுவைப் பயிலரங்கம், மரபுக் கவிதைப் பயிலரங்கம்-01 நடாத்தியிருந்தோம். தற்போது மரபுக் கவிதைப் பயிலரங்கம்-02 நடைபெறுகிறது. கீழ்வரும் இணைப்பில் அதற்கான காணொளிகளைப் பார்க்கலாம்.

https://www.youtube.com/playlist?list=PLOeklr9CgQp88wE7YWRVbO86IQsPy3lCi

நாம் நடாத்தும் மரபுக் கவிதைப் பயிலரங்கப் பிந்திய காணொளிகளைக் கீழே பார்க்கவும்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 05


மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 06

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 07

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 08

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 09

யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க நடாத்தும் பயிலரங்குகளில் விரும்பும் உள்ளங்களை இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.