Translate Tamil to any languages.

வியாழன், 28 ஏப்ரல், 2016

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள்

எல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு இழுத்துக்கொண்டு வந்தே பா (கவிதை) புனையும் வழக்கம் உண்டு. எப்படியோ, பா (கவிதை) புனைய இலக்கணம் தேவைப்படுகிறது. அப்படியொரு நிலையில 'சும்மா' தளத்தில "புதுக்கவிதை இயல்புகள் (அசைன்மெண்டை கவிதையா எழுதி இருக்கேன்.)" என்ற பதிவைப் படித்துப் பாருங்கள்; நண்பர் அழகாக ஆய்வு செய்திருக்கிறார். பா (கவிதை) புனைய எண்ணம் இருந்தால் போதாது, நண்பர் கூறும் வண்ணமாக இருந்தால் நன்றென்பேன்.
இணைப்பு:-

வாழ்க்கை என்பது சறுக்கி விழுத்தும் சேற்றின் மேல் நடப்பது போலத் தான் இருக்கிறது. எனவே, எங்கள் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும். நோய் வந்தால் மருத்துவரை நாட வேண்டும்; தன் (சுய) மருத்துவம் பார்க்கக் கூடாது. சரி, மருத்துவரை நாடினால் (போலி மருத்துவரை அல்ல) மருந்து எழுதிய தாளைப் பெற்று, அரச மருந்துச் சாலைகளில் அல்லது அரச ஒப்புதல் பெற்ற நிலையங்களில் மருந்துகளைப் பெற வேண்டும். இப்படிப் பயணிக்கையில் 340 மருந்துகளுக்குத் தடை என்றால் எப்படி இருக்கும்? அது பற்றி எங்கள் வலைப்பூ (Blog) தள நண்பர் அலசுகிறார். அதைக் கொஞ்சம் தலைக்குள் போட்டால், நீடூழி வாழ முயலலாம்.
இணைப்பு:-

பள்ளிக்கூடக் காலத்தில பத்துத் தாளைப் பொறுக்கி, பத்தாள்களின் பதிவுகளைத் திரட்டி, கையெழுத்துச் சஞ்சிகையாக்கி, எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் காட்டி, அவர்களின் கருத்துகளைப் பெற்று மகிழ்ந்த காலம் நினைவில் உருளுகிறதா? அப்படிக் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை வெளிக்கொணர எப்படித் துன்பப்பட்டோமோ; அதைவிட அச்சடித்த சஞ்சிகை வெளிக்கொணர அதிகப்படியான துன்பங்களைச் சந்திக்க வேண்டி வருமே! அப்படி ஓர் அச்சடித்த சஞ்சிகை வெளியாகி, இடையில் நின்று போய், மீளத் தலைகாட்டும் வரையான துன்பங்களைக் கூட்டாஞ்சோறு தளத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உள்ளம் திறந்து சொல்கிறார். அதனை மறக்காமல் படித்துப் பாருங்கள்.
இணைப்பு:-

"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்!" என்பதை ஊடகங்கள் பின்பற்றி உண்மைச் செய்திகளைத் தருகின்றதா என்றால் முற்றிலும் பொய்! நம்பத் தகுந்த இடங்களில் இருந்து பெற்ற செய்தி என்பார்கள். களத்தில் கண்ணுற்ற தகவல் என்பார்கள். உரிமம் உடையவர் தெரிவித்த தகவல் என்பார்கள். தற்போது இணையத்தில் பொறுக்கியது என்பார்கள். எப்படியோ முந்திக்கொண்டு செய்திகளை முதலில் தரும் ஊடகங்கள் சில, பிந்திக் கிடைத்த தகவலின் படி என்றாவது தங்கள் தவறுகளைத் திருத்தினாலும் கூட, உறுதிப்படுத்தப்படாத செய்திகளையே பகிருகின்றன. சில ஊடகங்கள் 'இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை' என்றாவது சொல்லும். ஓர் ஊடகம் பொய் பரப்பப் போட்டித் தன்மை துணைக்கு வரலாம். Thillaiakathu Chronicles தள நண்பர், இப்படி ஒரு சிக்கலை அழகாக முன்வைக்கின்றார். அதனை மறக்காமல் படித்துப் பாருங்கள்.
இணைப்பு:-

ஊடகங்கள் தான் தமிழைப் பேண முன்வர வேண்டும். ஆனால், ஊடகங்கள் தான் தமிழைக் கொல்லும் பணியைச் செய்கின்றன. இதனை அலச ஒரு கோடி பக்கங்கள் தேவை. ஆயினும், தமிழ் இலக்கணத்தைக் கணக்கில் எடுக்காமல் செய்தியைப் போடு என்கிற பதிப்பாசிரியர்கள் இருக்கும் வரை செய்தியாளர்கள் எதையும் எழுதலாம். "வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்" எது என்பதைத் தெரியாத பதிப்பாசிரியர்கள் இப்படிச் சொல்லி இருக்கக்கூடும்.இப்படியான ஊடகங்கள் எப்படித் தமிழை வாழவைக்கப் போகின்றன. இதுபற்றி ஊமைக்கனவுகள் தளத்தில் ஊடகவியலாளர் கேள்விக்குத் தமிழாசிரியர் பதிலாக அமைந்த பதிவைப் படித்துப் பாருங்கள்.
இணைப்பு:-


முகநூல் பக்கம் ஓட்டம் பிடிக்கும் பதிவர்களைப் போலல்லாது, தமக்கென வலைப்பூ நடாத்தித் தனி அடையாளத்தைப் பேணும் அறிஞர்களின் பதிவுகளுக்கும் தனி அடையாளம் இருக்கிறது. இவை போல மேலும் பல அறிஞர்களின் பதிவுகளை இனிவரும் காலங்களில் தர இருக்கின்றேன்.

21 கருத்துகள் :

  1. அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அனைவரும் நண்பர்கள். அட... பட்டியலில் நானும் இருக்கிறேன். ஆனால் நண்பரே.. என்னை அறிஞர் என்று சொல்ல வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் மாற்றம் செய்துவிட்டேன்.
      இனிவரும் காலங்களில்
      நண்பர் என்றே பாவிக்கின்றேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. தொகுக்கும் பணி மிகப் பெரியது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆஹா அனைவரும் நண்பர்கள் என்று பார்த்தால் அதில் நாங்களும்...ஆனால் தயவாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் எங்களை அறிஞர் என்று குறிப்பிட வேண்டாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் மாற்றம் செய்துவிட்டேன்.
      இனிவரும் காலங்களில்
      நண்பர் என்றே பாவிக்கின்றேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. சிந்தனை பதிவர்களின் அறிமுகம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல பதிவுகள் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்யத் துவங்கியிருக்கும் உங்கள் பணி போற்றுதற்குரியது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவருமே மிகச் சிறந்த பதிவர்கள். தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. நீங்கள் கூறியுள்ள பதிவர்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி. அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!