Translate Tamil to any languages.

சனி, 29 மார்ச், 2014

இதோ பணம்! சும்மா தருவாங்களாம்!


பணமென்றால்...
சும்மா வரும் பணமென்றால்...
எவர் தான் மறுப்பர்!
கிளிக்கினால் பணமாம்...
பார்த்தால் பணமாம்...
பரப்பினால் பணமாம்...
இன்னும்
எத்தனையோ வழிகளில்
பணமாம்... பணம்...!
இஞ்சாருங்கோ...
கொஞ்சம் கேளுங்கோ...
இணையத்தில (வலைப் பக்கங்களில்)
கிளிக்கினால் பணமென்றால்...
எல்லாம் பொய்யென்று நம்புங்கோ...
என்றாலும்
என்னதான் மெய்யென்று
பார்க்க ஆவது
கீழுள்ள இணைப்பை
சொடுக்கிப் (கிளிக்) பண்ணுங்கோவேன்!
http://Visitors2Cash.com/ref.php?refId=164875

குறிப்பு: இணையத்தில பணம் வழங்கிற ஆள்களின் விரிப்பை ஒரு சிறு நூலாகத் தொகுத்துள்ளேன். (இதில ஓராளையும் நம்ப இயலவில்லை.) கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்; பதிவிறக்கிப் படிக்கலாம்.
http://yarlsoft.tk/cashperclicks.php

ஒளி தரும் நிலவே!


படைத்தல் (பிரமனின்) தொழிலுக்கு
நீ
இடையூறு செய்வதாகக் கூறி
படைத்தலுக்குப் பொறுப்பானவரே (பிரமனே)
ஆனைமுகனை நாடி நிற்க
ஆனைமுகனோ - உன்னை
அமாவாசையின் பின்னே
வளர்பிறையாகவும்
பூரணையின் (பௌர்ணமியின்) பின்னே
தேய்பிறையாகவும்
ஆகுமாறு ஆக்கினாரென அறிந்தேனே!
பாவலர்கள் (கவிஞர்கள்) - உன்னை
எப்போதுமே
பெண்ணாக ஒப்பிட்டே
பா புனைகின்றனரே - உன்
அழகை மறைக்கவே
வானம் என்ற சேலையை
உடுத்தி இருக்கிறாயென
ஊரெல்லாம் பேசுறாங்களே!
வளர்பிறையாகி
மூன்றாம் பிறையாகி
அரை நிலவாகி
முழு நிலவாகி - அந்த
ஞாயிற்று ஒளியை வாங்கி
நமக்கு ஒளி தரும் நிலவே - உன்னை
என்னால் மறக்க முடியவில்லையே!

நான் பார்த்ததிலே...


நான் பார்த்ததிலே
இந்தியாவிலோ இலங்கையிலோ
தண்டவாளத்தின் இருபுறமும்
ஆங்காங்கே
ஏழைகளின் குடியிருப்பாகவோ
ஏனையோரின் கழிவிடமாகவோ
பார்க்க முடிகிறதே!
சில இடங்களில்
மூக்கைப் பொத்தியும்
சில இடங்களில்
வெளியே தலையை ஓட்டி
ஏழைகளின் நிலையைப் பார்த்தும்
பயணிக்க நேருகிறதே!

பேரூந்தூக்குள்ளே உந்துருளியா?


பயணி: 12-3456 இலக்கப் பேரூந்துக்குள்ளே என்னுடைய உந்துருளியை (Motor Bike) விட்டிட்டேன். அவங்களிட்டச் சொல்லி அதை மீட்டுத் தாருமையா!

நேரக்காப்பாளர்: காற்றுப் போக இடமில்லாமல் ஆள்களை அடைச்சு ஏற்றிக்கொண்டு போகிற அந்தப் பேரூந்தில உன்னுடைய உந்துருளியா (Motor Bike)? எவராவது நம்புவாங்களா?

பயணி: ஐயா! பேரூந்துக்குள்ளே உந்துருளித் (Motor Bike) திறப்பு, ஐயா! விழுந்தது... அது இல்லாட்டி, இது எப்படி ஐயா ஓடும்?


புதன், 26 மார்ச், 2014

புனைபெயர் வைக்கும் போது...

எழுத்துத்துறைக்கு வரும் வேளை பெரும்பாலும் எல்லோரும் புனைபெயர் வைப்பது வழக்கம். அவ்வேளை எல்லோரும் ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, பிறரது பெயராக அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான், உங்கள் புனைபெயருக்குத் தனிமதிப்புப் பேணமுடியும்.

எடுத்துக்காட்டாக இயற்பெயர் முத்தையா என்ற படைப்பாளியே கண்ணதாசன் ஆவார். அதாவது, கண்ணனுக்குத் (கிருஸ்ணருக்குத்) தாசன் (பற்றாளர்) என்பதால் 'கண்ணதாசன்' எனக் கவிஞர் கண்ணதாசன் தனது புனைபெயரை வைத்திருக்கலாம். இவ்வாறே பாரதிதாசன், கம்பதாசன், மேத்தாதாசன் எனப் பலரது புனைபெயர் அமைந்திருந்தது.

எனது முதற்கவிதை இ.காசி.ஜீவலிங்கம் என்ற பெயரில் தான் வெளியாகியது. நான் பலரும் அறிந்த படைப்பாளியாக மின்ன வேண்டுமென எண்ணி எனது புனைபெயரைக் காசிஜீவன் என வைத்தேன். அதாவது, என் அப்பா பெயர் காசிராசலிங்கம்; என் பெயர் ஜீவலிங்கம்; இரண்டிலிருந்தும் முன்னொட்டைப் பொறுக்கி 'காசிஜீவன்' எனப் புனைபெயர் அமைத்தேன்.

ஆயினும், மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் ஐயா அதனை மாற்றுமாறு என்னைப் பணித்தார். உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் என்ற பெயரைப் போல அமைந்து விட்டால் அழகல்ல என்றே அவ்வாறு எனக்கு மதியுரை கூறினார். பின்னர், 'நவீனநாரதர்' என்ற புனைபெயரைப் பாவித்தேன்.

வேறு புனைபெயர்களில் எழுதினாலும் ஈற்றில் 'யாழ்பாவாணன்' என்ற பெயரே நிலைத்துவிட்டது. நெடுநாள் முன்னதாக 'யாழ்ப்பாணன்' என்றொரு மூத்த எழுத்தாளர் இருந்துள்ளார். எனது காலத்திற்குக் கிட்டவாக என்பெயரைப் போன்று பிறருக்கு இருக்கவில்லை. அதனால், எனது பெயர் பிறருடையதைப் போல அமையவில்லை என நம்புகிறேன்.

என்னூர் மாதகல் என்றாலும் மாதகலூரான் எனப் பெயர் அமைக்காது விட்டேன். அது பொதுப் பெயராகிவிடும் என்பதால்... மாதகலூரான் என்ற பெயரோடு எனது இயற்பெயரையும் இணைத்துப் பாவிக்கவில்லை. மாறாகத் தமிழ்ப் பெயராக அமையவே 'யாழ்பாவாணன்' என்ற வேறுபட்ட பெயரை விரும்பினேன்.

அதாவது, 'யாழ்பாவாணன்' என்ற பெயரை 'யாழ்' + 'பாவாணன்' எனின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞன் எனப் பொருள் கொள்ளலாம். மேலும், 'யாழ்பாவாணன்' என்ற பெயரை 'யாழ்பா' + 'வாணன்' எனின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்பவர்/வசிப்பவர் எனப் பொருள் கொள்ளலாம்.

அப்படியாயின், புனைபெயர் வைக்கும் போது நீங்களும் வேறுபட்டதாக (வித்தியாசமாக) வையுங்கள். அதற்காக யாழ்பாவாணதாசன் என வைத்துவிடாதீர்கள். உங்களை, உங்களூரை, உங்கள் மாவட்டத்தை என உங்களை அடையாளப்படுத்தக் கூடியதாகவும் மற்ற அறிஞர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தக் கூடியதாகவும் மற்ற அறிஞர்களின் பெயரை ஒத்ததாகவோ போலவோ அமையாதவாறும் உங்கள் புனைபெயரை வைக்கலாமே!

எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல

மணநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
வெடிங் முடிய ரெஜிஸ்ரேசன் - பிறகு
ரிசெப்சன் அன்று ஆட்டுப் பிறைற் றைஸ்
தனித் தனி இன்விற்றேசன் கிடையாது
ஓல் ஒவ் யூ கம் என்றாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
பிறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
ஸ்ரைலா நில்லுங்கோவேன், ஸ்மைல் பிளீஸ்,
போட்டோ, வீடியோ, கேக், றிங்ஸ், கிவ்ற் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
இறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
டெட் பொடி, கண்ணாடி பொக்ஸ், என்பாம், போமலின் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
தமிழ் திரைப்படமொன்று பார்த்தேன் - அதில்
தமிழ் தெரியாதவங்க நடித்தாங்க - அவங்க
பேசியதெல்லாம்
ஆங்கிலமாத் தான் இருந்திச்சு - அதால
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
நான் ஒண்ணும் படிக்காதவனுங்க - அதனாலே
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல - ஆயினும்
நானும் நாலு படித்திருந்தால் - அப்ப
எனக்கெல்லாம் விளங்கி இருக்குமே!

எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல என்றால் ஒன்றுமே புரியவில்லை அல்லது அறிந்திட முடியவில்லை என்று பொருள் கொள்ளலாம்.

மேலதிகத் தகவலுக்கு இங்கே சொடுக்குக.

எல்லாம் போச்சு

ஒருவர்:  அன்பே படத்தைப் பார்த்துட்டு அதில் வந்த கதாநாயகியை மணமுடிக்க, அவளது வீட்டிற்குப் பெண் பார்க்கப் போனவர் அவளது முகத்தைப் பார்த்ததும் மயங்கி விழுந்திட்டாராம்.

மற்றவர்:  திரையழகுச் சிவப்பி, வீட்டில் இயற்கையழகில் அழகற்ற கறுப்பி என்பதால் மயங்கி விழுந்திட்டாராக்கும். அவளது அகத்தையறிந்தால் எல்லாம் போச்சு... ஆளே முடிஞ்சுடுவாராக்கும்...

உறவைச் சேர்க்க...

வீசும் காற்றும் மோதும் பூவும்
நாறும் மணமும் உறிஞ்சும் மூக்கும்
உணரும் மனிதா உணரேன்
பேணும் அன்பும் சேர்க்கும் உறவே!

பரிசு முயற்சியை ஊக்குவிக்கும்

நல்ல தமிழ்நம் தமிழர் பக்கம்
சேர்ந்திட மேலும் என்பணி சிறக்க
நன்நூல் டொட்கொம் இணையத் தளமே
எனக்குநீ அளித்த பரிசு என்றும்
உலகம் எங்கும் வாழும் தமிழர்
நல்ல தமிழைப் பேணும் நோக்கில்
என்பணி முயற்சி எல்லாம்
மேலும் மேலும் வலுப்பெற உதவுமே!

குறிப்பு :நன்நூல் டொட் கொம் நிறுவனத்தால் வழங்கிய ஊக்கப் பரிசு கிடைத்தமை குறித்து எழுதப்பட்டது.

வியாழன், 20 மார்ச், 2014

தமிழருக்குத்தானே பெருமை

இந்தியாவிலே
பாரதியின் போர் ஊடகம்
தெருச்சுவரும் கரித்துண்டுமே...
வெள்ளையனை வெளியேற்ற
பாவாலே புரட்சி செய்த
பாரதிக்குத் தெரிந்தது
முப்பத்திரண்டு மொழிகள்!
ஈழத்திலே
கிறிஸ்த்தவ மதப் பணியோடு
தமிழுக்காகத் தன்னை
முழுமையாக ஈடுபடுத்தியவர்
தனிநாயகம் அடிகளார் அவர்களே!
அவருக்கும் தெரிந்தது
பதினெட்டு மொழிகள்!
உலகெங்கும் வாழும்
தமிழர்களே
தமிழைப் பேணும் செயலோடு
உங்களுக்குத் தெரிந்தது
எத்தனை மொழிகள்?
பத்திரிகை ஒன்றில் படித்தேன்
இந்திய-தமிழகப் பிள்ளை
பல மொழிகளில்
தேர்ச்சி பெற முயற்சிப்பதாக...
இந்தப் பிள்ளையைப் போல
நீங்களும் முயற்சி எடுத்தால்
தமிழருக்குத்தானே பெருமை!

தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்


http://www.tamilpriyan.com/ தள ஆசிரியர் ரீகன் ஜோன்ஸ் அவர்கள் சிறந்த முறையில் மதிப்பீட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அவரது வழிகாட்டல்கள் சிறந்த பதிவர்களாக நம்மாளுகள் முன்னேற உதவுமென நம்புகின்றேன்.

"தவறான செய்திகளைப் பரப்பக் கூடாது.
இயன்றவரைத் தமிழிலேயே இருக்க வேண்டும்.
பிற மதங்களையோ பிற இனங்களையோ புண்படுத்துவதாக இருக்கக் கூடாது.
எல்லாம் தமது சொந்தப் படைப்புகளாகவே இருக்க வேண்டும்." எனச் சில வழிகாட்டல்களைத் "தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்" என நம்மாளுகளுக்குத் தெரிவிக்கின்றார்.

http://www.tamilpriyan.com/ தள ஆசிரியர் ரீகன் ஜோன்ஸ் அவர்களின் வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்வதோடு "இலக்கியக் களவு செய்தீர்கள்" என்பதைச் சொல்வதே எனது நோக்கம். அதாவது, பிறர் பதிவிலிருந்து எடுத்துக்காட்டாகச் சில வரிகள் பொறுக்கி எடுத்துக் காட்டினாலும் அப்பதிவுக் காரரின் அடையாளம் / URL தெரிவிக்கப்படாவிடின் 'இலக்கியக் களவு' என்பேன். இனி நண்பரின் பதிவைப் படிக்கக் கீ்ழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும் | தமிழ் பிரியன்

செவ்வாய், 18 மார்ச், 2014

பசித்தவரெல்லாம் சாப்பிட வரலாம்

சாப்பாட்டுக் கடையில குந்தினால் மூக்குமுட்ட விழுங்குவாங்க... கடைசியில காசைக் கொடு என்றால் முழி பிதுங்கத் திண்டாடுவாங்க... அப்படியொரு நிகழ்வைக் கீழே பார்க்கலாம்.

கடைக் காசாளர் : மசாலா தோசை, பால் எல்லாம் சேர்த்து நூறு உரூபா கொடுங்களேன்.

உண்டு களைத்தவர் : பசிக்குச் சாப்பாடு கேட்டேன். எல்லாம் முடிந்ததும் காசை வையென்று கழுத்தை நெரிக்கலாமா?

கடைக் காசாளர் : அங்கே பார்...
"பசித்தவரெல்லாம் சாப்பிட வரலாம்
சாப்பிட்டோர் எல்லோரும்
பணம் கட்டாட்டி
பத்துப் படி உழுந்தாட்டணும்" என்று தானே இருக்கு!

உண்டு களைத்தவர் : உண்டதை வாந்தியாகவோ பேதியாகவோ எடுத்துத் தர முடியாமையால், பாதிப் படி உழுந்தாட்டுறேனுங்க...

கடைக் காசாளர் : இனியென்ன... உழுந்தாட்டித் தான் ஆகணுமே!

சனி, 15 மார்ச், 2014

இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்...

அழகான பிள்ளை, அறிவுள்ள அழகி,
ஆளோ மருத்துவர், எடுப்பான பெண்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ வெள்ளை உள்ளமோ சுத்தம்
"மணமகனுக்கோ ஐயமாம்..."

அழகான பொடியன், அறிவுள்ள பொடியன்,
ஆளோ மருத்துவர், எடுப்பான பொடியன்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ சிவலை உள்ளமோ சுத்தம்
"மணமகளுக்கோ ஐயமாம்..."

இரவு வேலையால உறவு முறியுமாம்
எவரைச் சொல்லி எவரை நோவது
ஐயம் தான் இருக்கும் வரை
நம்பிக்கை தான் மலரவும் மாட்டாதே
"இணைப்பாளருக்கு (தரகருக்கு) உழைப்பில்லையாம்..."

குறிப்பு: இந்நிலை மருத்துவருக்கு மட்டுமல்ல, தாதியருக்கும் இவர்களைப் போன்று இரவு வேலையாள்களுக்கும் பொருந்துமென இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்.

வியாழன், 13 மார்ச், 2014

திறனாய்வு (விமர்சனம்) பற்றி...

ஒரு படைப்பாளியையோ ஒரு படைப்பையோ எடைபோடத் திறனாய்வு (விமர்சனம்) தேவைப்படுகிறது. அதாவது, சிறந்த படைப்பாளியை அல்லது சிறந்த படைப்பை அடையாளப்படுத்த உதவுகிறது எனலாம்.

அந்த வகையில் வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்களிற்கு (http://tamilsites.doomby.com/) வலைப்பூக்களைத் திரட்டும் நோக்கில் வலைவிரித்த போது சாதாரணமானவனின் மனது (கற்பனை கலக்காத கதைகள் - visaran.blogspot.com) பக்கத்தைப் படிக்க முடிந்தது.

அதில் விமர்சிப்பவன் எதிரியா? (http://visaran.blogspot.com/2014/03/blog-post_12.html) என்ற பதிவைப் பார்க்க முடிந்தது. எனது வாசகர்களுக்குப் பயன்படும் என்று கருதி இப்பதிவில் அறிமுகம் செய்கிறேன்.

திறனாய்வு (விமர்சனம்) பற்றி ஒவ்வொரு படைப்பாளியும் அறிந்திருந்தால், தன்னைச் சிறந்த படைப்பாளியாக்கவோ தன்னால் சிறந்த படைப்புகளையாக்கவோ முடியுமென நம்புகின்றேன்.

புதன், 12 மார்ச், 2014

பாபுனைய இலகுவான பாவெது?

"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எழுத்து, அசை, சீர் எனப் பன்னிரு பகுதிகளைப் பதிவு செய்துவிட்டேன். இடையே பிறரது இலக்கண நூல்களைத் தந்தேன். அவற்றைப் படிக்க இடது பக்க நிரலில்
(Left Side Bar) உள்ள இணைப்பைச் சொடுக்கினால் போதும். "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எஞ்சிய பகுதிகளை இனிவரும் பதிவுகளில் தரவுள்ளேன்.

வலைப்பூக்களில் பாபுனைவோரின் தளங்களே அதிகம். ஆயினும் ஏனைய படைப்புகளிலும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. எனவே தான் பிறரது நூல்களை இடையில் அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. இப்போது எனது தளம் பலரது தேடல்களுக்குத் தீர்வு தருமென நம்புகிறேன். இனிவரும் பதிவுகளைப் பயனுள்ள பதிவுகளாகத் தருவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரை எழுத முயலும் முன், நான் படித்த நூல்களில் தேடிப் பொறுக்கிய பாக்களின் தலைப்புகளைத் தொகுத்து ஒரு கருத்துக்கணிப்பைத் தர இப்பதிவில் முயன்றிருக்கிறேன். யாப்புடனும் யாப்பின்றியும் பல பாக்கள் உள. எப்படியும் ஒர் ஒழுங்கிற்கு அமையவே எழுத முடிகிறது. அதிலும் "இலகுவானது எது?" என்பதே எனது கேள்வி!

ஆசிரியப்பா எழுதுவோர் சிலர், வெண்பா எழுதுவோர் சிலர், குறும் பா எழுதுவோர் சிலர் என விருப்புக்கு உரிய அல்லது சிறப்புப் புலமையை வெளிப்படுத்த ஆளுக்காள் கைவண்ணம் வேறுபடலாம். கீழுள்ள பாவண்ணங்களில் உங்கள் கைவண்ணம் எதில் நாட்டமோ அதனைத் தெரிவு செய்யுங்கள்.

கருத்துக் கணிப்புப் படிவத்தை இடது பக்க நிரலில் (Left Side Bar) பார்வையிட்டு வாக்களிக்குக.

இக்கருத்துக்கணிப்புப் பற்றிய தங்கள் மாற்றுக் கருத்துகளையும் மாற்றுப் பா தலைப்புகள் இருப்பினும் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.

சனி, 8 மார்ச், 2014

மோதலும் விளைவும்

சாகிற வேளை வந்த நேரம்
வந்தாள் ஒருத்தி
என்னை நன்றாகப் பேணினாள்...
திறமையான மருத்துவரும்
மருத்துவமனையில்
சாகக் கிடந்த என்னை உயிர்ப்பித்தார்!
மோதலில் சிக்குண்டு
சாகக் கிடந்த எனக்கு
மின்னலாக எதிர்ப்பட்டவள்
செய்த உதவிகள்
நெஞ்சிற்குள்ளே உருள
"சாதல் சாதல் போயின் காதல்" என
எனக்குள்ளே பாடத் தோன்றுகிறதே!

நண்பா கொஞ்சம் நம்பு

இல்லாளுக்கு மெல்லப் பயந்தால்
எல்லோரும் சொல்லிச் சிரிப்பார்களே
பயந்தாங் கொள்ளி என்றே!

எல்லோருக்கும் முன்னே போகையிலே
இல்லாளுக்கு பின்னே நீபோனால்
உன்னை மதிக்க எவரிருப்பார்!

இல்லாளும் நீயுமாய்ப் போகையிலே
எல்லோரும் உம்மைப் பார்க்கையிலே
உன் மதிப்பு உயருமே!

இல்லாளும் இணைபிரியா நீயுமாய்
எல்லோரும் விழிபிதுங்கப் பார்க்கையிலே
தெரியுமுன் வாழ்வின் சிறப்பு!

வெள்ளி, 7 மார்ச், 2014

வேலைக்கு என்னைச் சேர்ப்பியளே?


எங்கெங்கெல்லாம் படிப்புத் தேவைப்படும் என்பதை நம்மாளுகள் படிக்கிறவேளை அறிவதில்லை. வேலை தேடும் வேளை தானே அறிய முடிகிறதாம்... இங்கும் ஒரு நாடகம் அப்படியே....

வேலை தேடுபவர் : தங்கட நிறுவனத்தில வேலைக்கு என்னைச் சேர்ப்பியளே?

முதலாளி : எத்தனை வரை படிச்சனியள்?

வேலை தேடுபவர் : முன் பள்ளியே முழுசாக முடிக்கேல்ல... சின்னப் பள்ளியில பத்துவரை படிக்கிறது போல நடிச்சேன்...

முதலாளி : உப்படி இங்க நடிக்கேலாது... சம்பளம் இரண்டு இலட்சத்தோட வேலையிருக்கு. ஆனால், நாம் வழங்கும் தொழில் நுட்பக் கல்வியை பத்து மாதத்தில் படிச்சு முடிச்சாத்தான்...

வேலை தேடுபவர் : படிப்புக்குக் களவு போட்டு, வேலையைத் தேடினால், அங்கேயும் படிக்கச் சொல்லுறாங்களே... கடவுளே! படிப்பைத் தருவியா? வேலையைத் தருவியா?

ஆட்சிக்கும் வீழ்ச்சிக்கும் நம்ம வயிறே சாட்டு!

இராமன் ஆண்டால் என்ன?
சீதை ஆண்டால் என்ன?
இராவணன் ஆண்டால் என்ன?
மண்டோதரி ஆண்டால் என்ன?
கோவலன் ஆண்டால் என்ன?
கண்ணகி ஆண்டால் என்ன?
அருச்சுனன் ஆண்டால் என்ன?
பாஞ்சாலி ஆண்டால் என்ன?
நம்மட வயிறு நிறைந்தால் போதுமே!
நம்மட வயிறு கடிக்கும் போது தானே
ஆள்பவன் முகவரி தேடுகிறோமே!
நம்மட வயிறிலடித்து
தங்கள் வருவாய் நிரப்பும்
ஆள்வோருக்கு
எங்கே புரியுமிந்த உண்மை!
அடுத்த தேர்தல்
வந்த பிறகு தானே
அவர்களுக்கே புரியுமிந்த உண்மை!

வியாழன், 6 மார்ச், 2014

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 05

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், கலிப்பா இனம், வஞ்சிப்பா இலக்கணம், வஞ்சிப்பா வகை, மரூட்பா இலக்கணம், மரூட்பா வகை  எனப் பல பகுதிகளை அலசுகிறது. இத்துடன் "விசாகப்பெருமாள் விளக்குகிறார்" என்ற தொடர் நிறைவுபெறுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

பொய்கள் தேவை


காதலிக்க விரும்புகிறேன் என
கண்ணகியிடம் சொல்ல முனைந்தால்
கண்ணகியாள் கேட்கிற கேள்விகளுக்கு
பொய் சொல்லத் தெரியாமலே
காதலிக்காமலே தோல்வியுற்றேனே!
மணமுடிக்க விரும்புகிறேன் என
மாங்கனியிடம் சொல்ல முனைந்தால்
மாங்கனியாள் கேட்கிற கேள்விகளுக்கு
பொய் சொல்லத் தெரியாமலே
நோகாமல் பின்வாங்கி விட்டேன்!
கையிலே மாற்று மோதிரம்
கழுத்திலே மாமனார் போட்ட சங்கிலி
உந்துருளியில் தெருவழியே போகையிலே
என் பின்னாடி அடிக்கடி வருவாள்
என் சத்தியபாமா என்னும் இல்லாள்
இதெல்லாம் பார்க்காமல்
கண்ணகியும் மாங்கனியும் இருப்பார்களா?
இல்லாள் இருக்க
இன்னொருத்தியைக் காதலிக்கவோ
இன்னொருத்தியை மணமுடிக்கவோ
எனக்கோ
பொய்கள் தேவை
ஆனால்
சின்னத்திரை, பெரியதிரையைப் பார்த்து
எத்தனையோ கோடி பொய் சொல்லி
நாட்டில எத்தனையோ கேடு நிகழ்கிறதே!