Translate Tamil to any languages.

சனி, 15 மார்ச், 2014

இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்...

அழகான பிள்ளை, அறிவுள்ள அழகி,
ஆளோ மருத்துவர், எடுப்பான பெண்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ வெள்ளை உள்ளமோ சுத்தம்
"மணமகனுக்கோ ஐயமாம்..."

அழகான பொடியன், அறிவுள்ள பொடியன்,
ஆளோ மருத்துவர், எடுப்பான பொடியன்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ சிவலை உள்ளமோ சுத்தம்
"மணமகளுக்கோ ஐயமாம்..."

இரவு வேலையால உறவு முறியுமாம்
எவரைச் சொல்லி எவரை நோவது
ஐயம் தான் இருக்கும் வரை
நம்பிக்கை தான் மலரவும் மாட்டாதே
"இணைப்பாளருக்கு (தரகருக்கு) உழைப்பில்லையாம்..."

குறிப்பு: இந்நிலை மருத்துவருக்கு மட்டுமல்ல, தாதியருக்கும் இவர்களைப் போன்று இரவு வேலையாள்களுக்கும் பொருந்துமென இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்.

2 கருத்துகள் :

  1. இரவு பணி பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் இப்படி ஓர் ஐயமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைப்பாளர் (தரகர்) பொய் சொல்வாரா?
      காலமாற்றங்கள் ஐயங்களை விதைக்கலாம்.
      நம்மாளுகளுக்கு நம்பிக்கை வேண்டும்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!