"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எழுத்து, அசை, சீர் எனப் பன்னிரு பகுதிகளைப் பதிவு செய்துவிட்டேன். இடையே பிறரது இலக்கண நூல்களைத் தந்தேன். அவற்றைப் படிக்க இடது பக்க நிரலில்
(Left Side Bar) உள்ள இணைப்பைச் சொடுக்கினால் போதும். "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எஞ்சிய பகுதிகளை இனிவரும் பதிவுகளில் தரவுள்ளேன்.
வலைப்பூக்களில் பாபுனைவோரின் தளங்களே அதிகம். ஆயினும் ஏனைய படைப்புகளிலும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. எனவே தான் பிறரது நூல்களை இடையில் அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. இப்போது எனது தளம் பலரது தேடல்களுக்குத் தீர்வு தருமென நம்புகிறேன். இனிவரும் பதிவுகளைப் பயனுள்ள பதிவுகளாகத் தருவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரை எழுத முயலும் முன், நான் படித்த நூல்களில் தேடிப் பொறுக்கிய பாக்களின் தலைப்புகளைத் தொகுத்து ஒரு கருத்துக்கணிப்பைத் தர இப்பதிவில் முயன்றிருக்கிறேன். யாப்புடனும் யாப்பின்றியும் பல பாக்கள் உள. எப்படியும் ஒர் ஒழுங்கிற்கு அமையவே எழுத முடிகிறது. அதிலும் "இலகுவானது எது?" என்பதே எனது கேள்வி!
ஆசிரியப்பா எழுதுவோர் சிலர், வெண்பா எழுதுவோர் சிலர், குறும் பா எழுதுவோர் சிலர் என விருப்புக்கு உரிய அல்லது சிறப்புப் புலமையை வெளிப்படுத்த ஆளுக்காள் கைவண்ணம் வேறுபடலாம். கீழுள்ள பாவண்ணங்களில் உங்கள் கைவண்ணம் எதில் நாட்டமோ அதனைத் தெரிவு செய்யுங்கள்.
கருத்துக் கணிப்புப் படிவத்தை இடது பக்க நிரலில் (Left Side Bar) பார்வையிட்டு வாக்களிக்குக.
இக்கருத்துக்கணிப்புப் பற்றிய தங்கள் மாற்றுக் கருத்துகளையும் மாற்றுப் பா தலைப்புகள் இருப்பினும் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.
Translate Tamil to any languages. |
புதன், 12 மார்ச், 2014
பாபுனைய இலகுவான பாவெது?
லேபிள்கள்:
5-பா புனைய விரும்புங்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
சிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குகருத்துக் கணிப்பு படிவத்தில் தேர்வு செய்து விட்டேன் ஐயா...
தங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
நீக்குகாத்திருக்கிறோம் கற்றுக் கொள்ள. வாக்களித்துள்ளேன். எல்லா பாவகை களையும் ரசிக்கும் அளவிற்காவது அறிந்து கொள்ள ஆவல்
பதிலளிநீக்குதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து யாப்பிலக்கணம் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.
பதிலளிநீக்குhttps://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ என்ற எனது மின்நூல் களஞ்சியத்தில் 'இனிய பாட்டு இலக்கணம்' என்ற போல்டரில் வேண்டிய நூல்களைப் பதிவிறக்கியும் படிக்கலாம்.
நீக்குவாழ்த்துகள்.
சாரி பா ,எனக்கு பிடித்ததெல்லாம் பாவை என்னவளின் கை வண்ணத்தில் உருவாகும் மைசூர் பா !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
அருமையான முயற்சி அனைவருக்கும் (எனக்கும் ) பயன் தரும் ஆக்கமாக
பதிலளிநீக்குஇந்த ஆக்கம் திகழும் என்றே நம்புகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
தங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
நீக்கு