Translate Tamil to any languages. |
ஞாயிறு, 2 மார்ச், 2014
பொய்கள் தேவை
காதலிக்க விரும்புகிறேன் என
கண்ணகியிடம் சொல்ல முனைந்தால்
கண்ணகியாள் கேட்கிற கேள்விகளுக்கு
பொய் சொல்லத் தெரியாமலே
காதலிக்காமலே தோல்வியுற்றேனே!
மணமுடிக்க விரும்புகிறேன் என
மாங்கனியிடம் சொல்ல முனைந்தால்
மாங்கனியாள் கேட்கிற கேள்விகளுக்கு
பொய் சொல்லத் தெரியாமலே
நோகாமல் பின்வாங்கி விட்டேன்!
கையிலே மாற்று மோதிரம்
கழுத்திலே மாமனார் போட்ட சங்கிலி
உந்துருளியில் தெருவழியே போகையிலே
என் பின்னாடி அடிக்கடி வருவாள்
என் சத்தியபாமா என்னும் இல்லாள்
இதெல்லாம் பார்க்காமல்
கண்ணகியும் மாங்கனியும் இருப்பார்களா?
இல்லாள் இருக்க
இன்னொருத்தியைக் காதலிக்கவோ
இன்னொருத்தியை மணமுடிக்கவோ
எனக்கோ
பொய்கள் தேவை
ஆனால்
சின்னத்திரை, பெரியதிரையைப் பார்த்து
எத்தனையோ கோடி பொய் சொல்லி
நாட்டில எத்தனையோ கேடு நிகழ்கிறதே!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
சின்னத் திரை ,பெரியத் திரைகள் எல்லாம் பொய் திரைகள் தானே ?
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஎல்லோருக்கும் பொய்கள் தேவைப்படுகின்றன ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாயினும்
பதிலளிநீக்குஅருமை
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
இன்றைய பெரிய திரையாலும் கேடு தான்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்கு