இந்தியாவிலே
பாரதியின் போர் ஊடகம்
தெருச்சுவரும் கரித்துண்டுமே...
வெள்ளையனை வெளியேற்ற
பாவாலே புரட்சி செய்த
பாரதிக்குத் தெரிந்தது
முப்பத்திரண்டு மொழிகள்!
ஈழத்திலே
கிறிஸ்த்தவ மதப் பணியோடு
தமிழுக்காகத் தன்னை
முழுமையாக ஈடுபடுத்தியவர்
தனிநாயகம் அடிகளார் அவர்களே!
அவருக்கும் தெரிந்தது
பதினெட்டு மொழிகள்!
உலகெங்கும் வாழும்
தமிழர்களே
தமிழைப் பேணும் செயலோடு
உங்களுக்குத் தெரிந்தது
எத்தனை மொழிகள்?
பத்திரிகை ஒன்றில் படித்தேன்
இந்திய-தமிழகப் பிள்ளை
பல மொழிகளில்
தேர்ச்சி பெற முயற்சிப்பதாக...
இந்தப் பிள்ளையைப் போல
நீங்களும் முயற்சி எடுத்தால்
தமிழருக்குத்தானே பெருமை!
Translate Tamil to any languages. |
வியாழன், 20 மார்ச், 2014
தமிழருக்குத்தானே பெருமை
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
எத்தனை மொழிகள் கற்றாலும் தவறில்லை !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குநீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குதமிழனே !
பதிலளிநீக்குதமிழனாக பிறந்தும்
தமிழ் மொழியைபேச மறுக்கிறாய்
தமிழின் சிறப்பையாவது அறிந்துகொள்
என்றும் நிலைத்து வாழும்
தமிழ் மொழியின் சிறப்பை
அறிந்துகொள்ளுவோம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ! (பாரதி )
காற்றுக்கு பெயர்!!!
தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை
உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு !
இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !
(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"
இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள்
புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை !
நன்றி :பஞ்சநாதன் கைலாசம் pnathan123@gmail.com
தங்கள் கருத்தைச் சிறப்பித்து http://wp.me/TOfc என்ற இணைப்பில் மீள்பதிவு செய்துள்ளேன்.
நீக்குமிக்க நன்றி.
உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் தமிழில் உள்ளன. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குதாய்மொழி மீது பற்று வைப்போம்
பதிலளிநீக்குபிற மொழிகளையும் கற்று வைப்போம்!
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்கு