Translate Tamil to any languages.

வலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்

வலைப்பக்க, வலைப்பூப் பதிவர்களிடையே படித்தறிவு, பட்டறிவு எல்லாவற்றிலும் சிறியன் நான் என்பேன். அதாவது, நான் பார்த்ததிலேயே என்னைவிடச் சிறந்த, படித்த, பட்டறிவில் பெரியோர் வலைப்பூக்களை நடாத்துகின்றனர். அச்சு ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளை விட மின் ஊடகங்களில் சிறப்பாக வலைப்பூக்களில் (Wordpress, Blogger) சிறந்த பதிவுகள் வெளிவருகிறது என்பது உண்மையே! அந்த வகையில் நானும் வலைப்பூப் பக்கம் என் தலையை நீட்டினேன்.

நான் இணையத்தளப் பதிவராக வருமுன் அச்சு ஊடகங்களில் (பத்திரிகை, சஞ்சிகை) பதிவுகளை இட்டிருந்தேன். அரங்கு(மேடை)களிலும் எனது பதிவுகளைப் படித்திருக்கிறேன். தொடக்கத்தில் முகநூல் (Facebook), கீச்சுகள் (Twitter) போன்ற தளங்களில் பதிவு செய்த நான், பின்னர் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவுகளை இட்டிருந்தேன். தொடர்ந்தும் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவு செய்து வருகின்றேன்.

எனது பதிவுகளைப் பொத்தகங்களாக்க (நூல்களாக்க) இறங்கியதும் அதற்கு இலகுவாக வலைப்பூக்களில் பதிவிட்டுத் தொகுக்கலாம் என எண்ணினேன். அதற்குத் தமிழ்மணம்.நெற் (அதிக பதிவர்களை இணைத்து வைத்திருக்கும் தளம்) திரட்டியும் ஒத்துழைத்தது. இம்முயற்சி எனக்கு நம்பிக்கை தரவே; ஒவ்வொரு நோக்கிலும் ஒவ்வொரு வலைப்பூவை உருவாக்கினேன். அவ்வாறே ஆறு வலைப்பூக்களில் எனது பதிவுகளை இட்டு வந்தேன்.

உளநல வழிகாட்டலும் மதியுரையும் நோக்காகக் கொண்டு https://mhcd7.wordpress.com/   தளமும் தூயதமிழ் பேணும் நோக்கில் https://yarlpavanan.wordpress.com/ தளமும் யாப்பறிந்து பாபுனைய வாருங்களென பாவாக்க உதவும் பதிவுகளைப் பகிர http://paapunaya.blogspot.com/ தளமும் எனது சிறு சிறு பதிவுகளைத் திரட்டி வெளிக்கொணர http://eluththugal.blogspot.com/ தளமும் இதழியல் மற்றும் வெளியீடு சார்ந்த பதிவுகளை பகிர http://yppubs.blogspot.com/ தளமும் கூகிள்வழி மொழிமாற்றல் மற்றும் கணினி நுட்பப் பதிவுகளைப் பகிர https://ial2.wordpress.com/ தளமும் பேணி வந்தேன்.

ஆயினும் பார்வை எண்ணிக்கை (page visits), வாசகர் வருகை, பதிவுகள் பரவும் வேகம், இலகுவாகப் பேணும் வசதி எனப் பலவற்றைக் கருதி இவ் ஆறு வலைப்பூக்களை இணைத்து ஒரு தனி வலைப்பூவாக ஆக்க எண்ணினேன். அந்த எண்ணமே இத்தளத்தின் அடித்தளம். எனது ஆக்க இலக்கிய முயற்சிகளுக்கும் வலைப்பூக்கள் மேம்பாட்டிற்கும் ஒத்துழைத்த எல்லோரும் எனது இப்புதிய வலைப்பூவிற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகின்றேன்.

நான் மேற்கொள்ளவுள்ள எல்லாப் பணிகளையும் வெளிப்படுத்தும் நோக்கில் எட்டுப் பகுதிகளாக இத்தளத்தைத் தொகுத்துள்ளேன்.
1-வலைப்பூ வழியே - தளத்தின் பதிவுகளை வெளிப்படுத்துவதோடு தளத்தின் நோக்கத்தையும் மின்நூல் களஞ்சியம், கலைக்களஞ்சியம், தமிழ் பயில, என்னுடன் தொடர்புகொள்ள எனப் பக்கங்களை அமைத்துள்ளேன்.
2-உளநலமறிவோம் - உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) ஊடாக நான் வெளிப்படுத்தவுள்ள பக்கங்களை அமைத்துள்ளேன்.
3-என் எழுத்துகள் - என் எழுத்துகள் பற்றிய எண்ணங்களைப் பகிரும் பக்கங்களை அமைத்துள்ளேன்.
4-நற்றமிழறிவோம் - உலகெங்கும் நற்றமிழைப் (தூயதமிழைப்) பரப்பிப் பேணும் எண்ணங்களைப் பகிரும் பக்கங்களை அமைத்துள்ளேன்.
5-எழுதுவோம் - நான் கடுகளவு கற்றிருந்தாலும் என் அறிவிற்கு எட்டிய வகையில் 'எழுதுவது எப்படி?' என்று வெளிப்படுத்தவுள்ள பக்கங்களை அமைத்துள்ளேன்.
6-பாப்புனைவோம் - நான் கடுகளவு கற்றிருந்தாலும் என் அறிவிற்கு எட்டிய வகையில் 'பாப்புனைவது எப்படி?' என்று வெளிப்படுத்தவுள்ள பக்கங்களை அமைத்துள்ளேன்.
7-நுட்பங்களறிவோம் - நான் கடுகளவு கற்றிருந்தாலும் என் அறிவிற்கு எட்டிய வகையில் மொழிமாற்றல், கணினி நுட்பம் போன்றவற்றை வெளிக்கொணரும் பக்கங்களை அமைத்துள்ளேன்.
8-வெளியிடுவோம் - நான் கடுகளவு கற்றிருந்தாலும் என் அறிவிற்கு எட்டிய வகையில் வெளியீட்டு நுட்பம், ஊடகங்கள் பற்றி வெளிக்கொணரும் பக்கங்களை அமைத்துள்ளேன்.

இத்தளத்தினூடாகப் பகிரவுள்ள எல்லாப்பதிவுகளும் கீழ்வரும் ஏழு வகைகளில் வெளிவரும்.
1-உளநலமறிவோம்
2-என் எழுத்துகள்
3-நற்றமிழறிவோம்
4-எழுதுவோம்
5-பாப்புனைவோம்
6-நுட்பங்களறிவோம்
7-வெளியிடுவோம்
அதாவது, நான் கடுகளவு கற்றிருந்தாலும் என் அறிவிற்கு எட்டிய வகையில் வெளியிடக் கூடிய பதிவுகளின் வகைத் தலைப்புகளாக இவ் ஏழையும் கருத்திற் கொள்ளுங்கள். நேரமுள்ள வேளை வரலாம்; காரமுள்ள கருத்துகளைப் பகிரலாம்.



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!