போகிப் பொங்கல், தைப் பொங்கல், பட்டிப் பொங்கல், காணும் பொங்கல் வரப்போகிறது.
அதற்கு முன் ஒரு மணித்துளி சிந்திப்போம்.
01/01/2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த பின் இறப்புச் செய்தி அதிகம். பொருண்மியச் சோர்வு (நட்டம்) அதிகம், வேலை வாய்ப்பு இன்மை அதிகம் என்றவாறு துயரங்கள் பெருகின. திருமணச் செய்தி, பிறப்புச் செய்தி எதையும் காணோம் அல்லது அருமை எனலாம். தேட்டம் (இலாபம்) என்று ஏதும் இல்லை.
இந்த நிலையில் உழவர் பெருநாளாம் வேளாண்மைக்கு துணைநிற்கும் பகலவனுக்கு நன்றி செலுத்தும் நாளாம் காணி உழுவதற்கு உதவும் எருதுக்கும் நன்றி செலுத்தும் நாளாம் என்றவாறு பழையன கழிந்து புதியன புகுத்தி, தை பிறந்தால் வழி பிறக்கும் என 2026 ஆண்டில் தூர நோக்கு சிந்தனையுடன் நல்லெண்ணத்துடன் பயணிக் முயற்சி எடுக்க வேண்டும்.
துன்பம், துயரம், இழப்பு வந்தாலும் அவற்றைத் தூக்கி வீசிவிட்டு முயற்சி எடுத்து மகிழ்ச்சியும் வெற்றியும் ஈட்டத் திட்டமிட்டுப் பயணிக்க வேண்டும்.
காசை மிச்சம் பிடித்து, வருவாயைப் பெருக்கி, நல்லுறவைப் பேணி, உடற்பயிற்சி செய்து நோய்களை விரட்டி, மகிழ்ச்சியாக வாழ முயற்சி எடுக்கலாம் என்று இருக்கேன்.
நானோ சின்னப் பொடியன், தங்கள் உயரிய சிந்தனைகள், எண்ணங்கள், வழிகாட்டல் யாவும் எனக்கும் சொல்லித் தந்தால்; நானும் 2026 இல் வெற்றி நடை போடலாம் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!