Translate Tamil to any languages.

வியாழன், 31 மார்ச், 2016

நமது பயணத்தில்...

நல்ல நட்பு நம்மையே வாழவைக்கும்
கெட்ட நட்பு நம்மையே கெடுத்துவிடும்
நட்பு இன்றி நம் பயணம் தொடராது
நல்ல நட்பை நாடி நாம் பயணிப்போம்!

நல்ல துணை நமக்குத் தோள்கொடுக்கும்
கெட்ட துணை நம்மையே கெடுத்துவிடும்
துணை இன்றி நம் பயணம் தொடராது
நல்ல துணை நாடி நாம் பயணிப்போம்!

நல்ல நட்புக்கூடத் துணையாகத் தொடரலாம்
காதல் துணைகூடத் துணையாகத் தொடரலாம்
வாழ்க்கைத் துணைகூடத் துணையாகத் தொடரலாம்
தொடரும் துணைகளோடு நாமும் பயணிப்போம்!

ஞாயிறு, 27 மார்ச், 2016

கதை, கட்டுரை எழுதினால் இரண்டு இலட்சமா? - அருமையான போட்டி

உரூபா ஒரு இலட்சம் பரிசுத் தொகை கொண்ட உலகளாவிய சிறுகதைப் போட்டி மட்டுமல்ல, உரூபா ஒரு இலட்சம் பரிசுத் தொகை கொண்ட "தாயெனும் கோயில்" என்ற தலைப்பிலான உலகளாவிய மற்றொரு போட்டியும் உண்டு. இரண்டு போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றி பெற்றால் ஆக மொத்தம் இரண்டு இலட்சம் கிடைக்குமே!

புதிய பதிவர்களுக்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஊக்க மருந்தைத் தரலாம் என எண்ணுகிறேன்.

தேநீருக்கு எழுந்த வேளை...

நான் இடப்பெயர்வின் போது எனது பெற்றோரைப் பிரிந்து பிறிதொரு இடத்தில் வாழ்ந்தேன். அவ்விடத்தில் நானே தேநீர் ஊற்றிக் குடிக்க வேண்டிய நிலை. அதுவும் மாசிப் பனி மூசிப் பெய்கின்ற வேளை, காலையில் எழுவதே சிக்கல் அதாவது குளிர் என்னை வாட்டுமே!

குளிரை முறித்து எழுந்த வேளை பகலவன் வெறித்துக் காய்த்தான். எப்படியும் ஏழு மணி ஆகியிருக்கும். அடுப்பு மூட்டித் தேநீர் ஊற்றிக் குடிக்கையில் ஏழரை மணி ஆகியிருக்கும். எனக்கு இதெல்லாம் பெருந்துன்பம். என்னை ஈன்ற தாய், நாலரை மணிக்கு எழுந்து தேநீர் ஊற்றி என்னை ஐந்து மணிக்குப் படுக்கையாலே எழுப்பி ஊட்டிவிட்ட நாள்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நானுணர்ந்த பெருந்துன்பம் போல, என் தாயவள் எத்தனையோ பெருந்துன்பங்களை அடைந்திருப்பார். இப்படித் தான் 281 நாள்கள் வயிற்றில் சுமந்து, பின் 21 அகவை (வயது) ஆண் சிங்கம் ஆக்கும் வரை எத்தனை கோடி துன்பங்களை அடைந்திருப்பார். அந்தத் தாயை இந்தத் தேநீர் ஊற்றிக் குடிக்கையில் எண்ணிப் பார்க்கிறேன்.

இது "தாயெனும் கோயில்" என்ற போட்டிக்கான ஊக்க மருந்து. இப்படி உங்கள் தாயன்பை வைத்து A-4 அளவு காகிதத்தில் மூன்று முதல் நான்கு பக்கங்களுக்குள் தமிழில் எழுதி அனுப்பலாம் தானே!

தெருவீதியில் ஆணொருவரைப் பெண்ணொருவள் அடிக்கின்றாள். பின் அமைதியாக இருவரும் பிரிந்து செல்கின்றனர். இந்தக் காட்சியை உள்ளத்தில் வைத்து எழும் எண்ணங்களைத் தொகுத்துக் கதை ஒன்றைப் புனைந்து பாருங்கள்.

அடித்தாள்; படித்தான்!

அந்தப் பள்ளிக்கூட வீதியால போனால் தான் என் வீட்டுக்கு விரைவாகப் போகலாம். என்னூருக்கு அந்த வீதியால எந்த ஊர்திகளும் போவதில்லை. நடைப் பயணம் தான் ஒரே வழி!

இனியென்ன நடப்போமென நடந்து வருகையிலே; கூப்பிடு தூரத்தில ஓர் அழகான சிவப்பி பொது நிறப் பொடியனுக்கு மூஞ்சியைப் பொத்தி அடிப்பதைக் கண்டேன். ஆமை வேகத்தில நடந்த நான், உடனடியாகத் தகவலறியும் நோக்கில் முயல் வேகத்தில நடந்தேன்.

என் உள்ளத்தில் தோன்றியதைச் சொன்னேன். அதற்கு நீங்கள் நடு வீதியில இப்படி அடிக்கலாமா? என்றவாறு அழாக்குறையாக அவன் அவளிடம் சொல்கிறான். அவ்வேளை நானும் அவர்களுக்குக் கிட்ட நெருங்கி விட்டேன்.

காதலிக்கிறியா? என நடு வீதியில கேட்டதிற்குத் தான் அடித்தேன். படித்து உழைத்து வருவாய் கிட்டிய வேளை வா, என்னோடு இணைந்து பிழைக்கலாம். அப்ப தான் உன்னில எனக்கும் விருப்பம் வரும். அதை அடிக்கடி நினைவூட்டவே, சுடச் சுட இந்த இடத்திலேயே இப்படி அடித்தேன் என்று சொல்லியவாறு அவள் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

சரி! சரி! நானும் படித்து உழைக்கத் தொடங்கியதும் உங்களைத் தொடருவேனென்று அவனும் அங்கால நகர்ந்தான். அவள் அடித்ததால, இவன் படிச்சிட்டான் போல, அதுதான் அமைதியாக ஆளை ஆள் பிரிந்து செல்வதாக நானும் எண்ணிப்பார்த்தேன்.

இந்தக் காலத்தில இப்படியான இளசுகளைக் காண்பது அரிது தான். என்ர காலத்தில என்ர ஆள் என்னைத் துரத்தித் துரத்தி என்ர வீட்டிற்கே வந்திட்டாள். பிறகு, என்ர அம்மா எனக்குக் கட்டி வைச்சிட்டார். இல்லாள் உலையில அரிசி போட, என்னைத் தேடப்போறாளென அரிசியும் கையுமா வீட்டிற்கு விரைவாய் நடந்தேன்.

இது உலகளாவிய சிறுகதைப் போட்டிக்கான ஊக்க மருந்து. இப்படி ஏதாவது ஒரு காட்சியை வைத்து A-4 அளவு காகிதத்தில் கையெழுத்துப் பிரதியானால், பத்து முதல் பன்னிரண்டு பக்கங்கள் வரை தமிழ் மொழியில் சிறுகதை எழுதி அனுப்பலாம் தானே!

இனி இப்போட்டிகளில் பங்குபற்றத் தாங்கள் தயார் தானே! நானும் உங்களுடன் போட்டியில் பங்கெடுப்பேன். போட்டி ஒழுங்கு முறைகளைப் படித்துப் போட்டியில் பங்குபற்றி பரிசில் பெற வாழ்த்துகிறேன்.

அறிஞர் பரிவை சே.குமார் முதலில் வெளிப்படுத்த
அடுத்து, அவர் சுட்டிய 'சும்மா' தளத்தில் படித்து
பின் மேலதிகத் தேடலில் வீனஸ்தமிழ் தளத்தில் அறிந்து
"புதினம்"
'ஈழகேசரி' வெளியீட்டு நிறுவனத்துக்காக
20 ஆண்டுகளாக வெளிவரும்
லண்டன் தமிழர்களின் அபிமான இலவச இதழ்
ஆசிரியர்: ஈ.கே.ராஜகோபால்.
மின்னஞ்சல் முகவரி: editor@londonputhinam.co.uk
என்ற தகவலிலுள்ள மின்னஞ்சல் முகவரி ஊடாக நானும் போட்டியில் பங்கு பற்றுவதோடு எனது வலைப்பூ உறவுகளுடன் பகிரவும் போட்டி விரிப்பை அனுப்பி உதவுமாறு கேட்ட போது; அவர்கள் அனுப்பிய படியைத் தங்களுடன் பகிருகிறேன்.



பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.


வெள்ளி, 25 மார்ச், 2016

நான் சொன்னால்; நீங்கள் நம்ப மாட்டியள்! (கவிதைச் சிறுகதை)


வாலை ஒருத்தி
வறுமை வாட்டிய போதும்
கல்வியிலேயே நாட்டம் காட்டினாள்!
பெற்றோரும்
வயிற்றை, வாயைக் கட்டி
பொன்மகள் புண்ணாகாமல்
ஊட்டி, ஊட்டி வளர்த்தெடுத்தனர்!

இன்றைய சூழலில்
எந்தவொரு ஆணையும் கூட
ஏற, இறங்கப் பார்க்காத - அந்த
வாலையோ உயர் வகுப்பில் தேறினாள் - ஆனால்
மருத்துவப் படிப்புப் படித்து முடிக்க
ஏழைக் குடும்பத்தாருக்கு வசதி ஏது?
துரத்தும் வறுமையிலும் கூட
சாவை விரட்டினாலும் கூட
ஏழைக் குடும்பத்தார் - தங்கள்
மகளை மருத்துவராக்க வழியின்றி
விழி பிதுங்கத் திணறுகின்றனர்!

ஏழையென்றாலும் வறுமை வாட்டினாலும்
மருத்துவராகும் எண்ணத்தில் விடாப்பிடியாக
உறுதியெடுத்த வாலையோ
நஞ்சுத் (விசத்) தேர்வெழுதத் தயாராகினாள்!
கண்ணை இமை காப்பது போல
பெற்றோர் தன்னைக் காப்பது போல
ஒழுக்கம் என்ற வேலி போட்டு
கட்டிக் காத்துப் பேணி வந்த
கற்பெனும் (கன்னித் தன்மையை) அணிகலனாம்
இணைய வழி ஏலம் போட்டு
விற்று வரும் பணத்தை ஈட்டி
மருத்துவக் கல்வியைத் தொடர எண்ணினாள்!

"ஒரே ஒரு உலகிலேயே
ஒரே ஒரு நாட்டிலேயே
ஒரே ஒரு குடும்பத்திலேயே
ஒரே ஒரு குடும்பப் பெண்ணாலேயே
தன் கற்பெனும் (கன்னித் தன்மையை) அணிகலனை
உண்மையிலேயே விற்க விரும்புகிறேன் - ஆனால்
ஆறாண்டு மருத்துவக் கல்விச் செலவை
முன்கூட்டியே தந்துதவ வேண்டும்!" என
அப்பன், ஆத்தாள் அறியாமலே அழகாக
விளம்பரம் வடிவமைத்து வெளியிட்டாள்!
விளம்பரம் வெளியிட்டவள்
வீணே தன்னை இழக்க விரும்பாமல்
விலாவாரியாக விடுப்புக் கேட்டு
வருவாய் தருவோரை எடைபோட்ட வேளை
ஆங்கோர் அறியாதவன் அகப்பட்டான்!

ஒரே ஒரு மருத்துவராகும் எண்ணத்திற்காய்
ஒரே ஓர் ஆளுக்காய்
ஒரே ஒரு படுக்கையிலேயே
பொன்னெனப் பேணி வந்த
கற்பெனும் அறத்தைப் பேண முடியாத
துயரைக் கொஞ்சம் மறந்து - அந்த
அறியாதவனிடம் தொடர்பைப் பேணினாள் - அந்த
மருத்துவராக எண்ணிய ஏழை வாலை!
கற்பெனும் அறத்தை விற்றுப் பணமீட்டி
மக்களைக் காக்க மருத்துவராக எண்ணிய
ஏழை வாலை மேலே அன்பு மேலிட
அவளை அறியாத அந்தக் காளையும்
ஆறாண்டு மருத்துவக் கல்விச் செலவை
உடனடியாகக் கொடுப்பதற்கு இணங்கினாலும்
ஒரே ஓர் உடலுறவுக்கு மறுத்து - அதற்கு ஈடாக
கற்பெனும் அறத்தைப் பொன்னெனப் பேணி
மருத்துவராக மக்களுக்குத் தொண்டாற்ற
முன்வந்தால் போதுமென ஆணையிட்டான்!

அந்த வாலையும் அந்தக் காளையும்
எட்டாத் தொலைவில் இருந்து கொண்டே
கற்பெனும் அறத்தைப் பேணும் உடன்பாட்டோடு
மக்கள் நலம் பேண மருத்துவராக்கும் எண்ணத்தோடு
சந்திப்புக்கு நாள் குறித்த பின்னாலே
இரு வீட்டார் பெற்றோரும் அறிந்ததும்
வானுயர மகிழ்ச்சி வெள்ளமே!
இடக்கு, முடக்காக இணைய வழி
பயணம் செய்து வழுக்கி விழுவோரிடையே
விலக்கி, ஒதுக்கி இணைய வழி
வடிகட்டிப் பயணித்து வென்றோர்களிடையே
கற்பெனும் அறத்தைப் பொன்னெனப் பேணி
மருத்துவராக்க உதவிய காளையையும்
தன்னை விற்றேனும் தன் மக்களைக் காக்க
மருத்துவராக எண்ணிய வாலையையும்
நான் சொன்னால்;
நீங்கள் நம்ப மாட்டியள் - இந்தக் கதை
அன்றொரு நாள் செய்தியாக வெளிவந்ததே!


குறிப்பு:- ஏழை மாணவி ஒருவள் தனது கன்னித் தன்மையை விற்று மருத்துவக் கல்வியைத் தொடரத் திட்டமிட்டு விளம்பரம் செய்து உதவி பெற்றதாகப் படித்த செய்தியை தங்களுடன் பகிர்ந்தேன். என் எண்ணங்களையும் புனைவுகளையும் (கற்பனைகளையும்) புகுத்தி ஒழுக்கம் பேணவும் சுவையைக் கூட்டவும் பா நடையிலே (கவிதைச் சிறுகதையாக) தந்தேன்.

செவ்வாய், 22 மார்ச், 2016

உலகலாவிய போட்டி பற்றி...

போட்டி என்றால்
பெரும் சுமையல்ல - சும்மா
பங்கெடுப்பதே வேலை!
பங்கெடுத்துப் பரிசில் பெற்றால்
வெற்றியின் அடையாளம் - ஆனால்
பரிசில் பெறாவிட்டால்
வெற்றியடைய வழியைக் கற்போம் - அதற்காக
தோல்வியடைந்தவர்கள் என்று
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போரே
தோல்வியாளர்கள் என்பேன்!

இப்படியெல்லாம் சொல்லாமலே
போட்டிகளில் பங்கெடுப்போரைப் பாராட்டுவோம்!
இப்படியெல்லாம் சொல்லியும் கூட
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போருக்கு
போட்டி அறிவிப்புகள்
போட்டி பற்றிய தகவல்
எட்டாமல் இருக்கலாம் தானே!

ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
நாட்டுக்கு நாடு செய்தி ஏடுகளில்
வெளிவந்த வண்ணம் இருக்கே...
ஆயினும்,
வலைப்பதிவர்கள் தமது தளத்தில்
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
வெளியிட்டு உதவினால்
போட்டிகளில்
பங்கெடுக்காமல் இருப்போரை
போட்டிகளில் பங்கெடுக்கச் செய்யலாமே!

மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
தங்கள் தளத்தில் பகிர
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றிய
தகவலைப் படிக்க உதவும்
இணைப்பைக் கீழே தருகின்றேன்!

வழி-01


<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxxijOGkhHrWbi7rCEv1IvKtru93Zig-JPcQ1Ko6Fp3SHQTpZxDBp4P0kqicmR5JEFXPO-v_fjqj2nCKsEPuuWvf9hpwxKi5ytPqfe3DrAzr4MHcELba4kL7Biy1EEIwtBnZgapn8mF3A/s640/kl.jpg" width="200" height="300"></a></p>

வழி-02
http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html

<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html">http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html</a></p>

மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
மேலே தரப்பட்ட நிரலைப் (Code) படியெடுத்துத் தங்கள் தளத்தில் பகிர்ந்து ஒத்துழைப்புச் செய்யுங்கள்.

திங்கள், 14 மார்ச், 2016

ஓடு பிறமொழியே - தமிழை வாழவிடு!

தமிழை நேசிப்போம்!, தமிழில் பேசுவோம்!
என்று
வெளிநாட்டவர் முழங்கின்றார் - இங்கே
நம்மாளுங்க
வெளிநாட்டவர் மொழிகளையே பேசுகின்றார்!

உலகெங்கும் தமிழ் பேண விருப்பும்
தமிழ் உறவுகளே - தமிழுக்குள்ளே
வடமொழிச் சொல்களைக் கலக்காதீங்க!
அதெப்படி முடியும்...?
தமிழ் சொல் எது?
வடமொழிச் (சமஸ்கிருதச்) சொல் எது?
என்றறியாமல்
அகப்பட்ட பிறபொழிச் சொல்லையும்
அள்ளிக் கிள்ளிப் பூசி மெழுகி
தமிழென்று உளறுகின்ற நம்மாளுங்க
எப்படித் தான்
வடமொழிச் சொல்களைக் கலக்காதிருப்பாங்க?

நடைமுறையில் (சென்னையில்) பேசப்படும்
ஆங்கிலச் சொல்களுக்கான தமிழ்ச் சொல்களை
அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள்
பொத்தகமாக அச்சிட்டு வெளியிட்டும்
தமிழிலில் இருந்து ஆங்கிலத்தை
வெளியெற்ற முடியாத நம்மாளுங்க
எந்தப் பொத்தகத்தைப் படித்துப் போட்டு
தமிழிலில் இருந்து வடமொழியை (சமஸ்கிருதத்தை) 
வெளியெற்ற முன்வருவாங்க என்கிறியளா?

"வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்" என்ற
மின்நூலைத் தான் அழகாக வெளிப்படுத்தும்
"விருபா தமிழ் புத்தகத் தகவல் திரட்டு" என்ற
இணையப் பக்கத்தைப் படித்துப் படித்து
தமிழில் உலாவும் வடமொழிச் சொல்களை
இயன்றவரை தூக்கியெறிய முடியாதா?
பறக்க வேண்டும் என்றெண்ணும்
நம்மாளுங்களுக்குக் கூட
காற்றுக் கூடச் சிறகாக முளைக்காதா?
நம்பிக்கை தான் உயிர் என்பேன்!

அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் தொகுத்த
ஆங்கிலம் - தமிழ்ச் சொல்களை படித்தேனும்
அறிஞர் நீலாம்பிகையம்மையார் தொகுத்த
வடசொல் தமிழ் அகரமுதலியைப் படித்தேனும்
தமிழுக்குள்ளே உலாவும் பிறபொழிச் சொல்களை
"ஓடு பிறமொழியே - எப்பன்
எங்கள் செந்தமிழை வாழவிடு!" என்று
தமிழிலில் இருந்து வெளியேற்ற முன்வாருங்கள்!


மேலே குறிப்பிட்ட அறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் மின்நூல் இணைப்பு இருப்பின் பின்னூட்டத்தில் தந்துதவுங்கள். தளத்தில் அறிமுகம் செய்ய உதவும்.

சனி, 5 மார்ச், 2016

இந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு


மதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை 'எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29.html ' என்ற பதிவைப் போன்று பல பதிவுகளூடாக அறிஞர் கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்கள் தனது தளத்தில் வெளியிட்டிருந்தமை யாவரும் அறிந்ததே!

நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் மதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் பணியில் ஒன்றைத் தங்களுடன் பகிர உதவிய ஆண்டவனுக்கு நன்றி கூறி எனது தளத்திலும் பகிருகிறேன். அவரது நாட்டுப்பற்றும் விடாமுயற்சியும் தான் அவர் ஆக்கிப் பேணும் "அறிவுத் திருக்கோவில்" என்னும் THE INSPIRATIONAL PARK என்பேன். அவர் அவ்விடத்திற்கு வருகை தருவோருக்கு
"Sir,

Please see the the attachment.It is self explanatory.If any of you as single or as a team interested to see these inspirational parks I will be too happy to organise your stay and visit.
If you are interested to know more I will be very happy to visit you also and deliver a talk to larger audience.
With Regards.

Col P Ganesan VSM (Retd)
Mob : +91-9444063794
Ph :
 +91-(0)44-26163794 " என்றவாறு

உதவக் காத்திருக்கிறார் என்பதை உலகம் வாழ் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

THE INSPIRATIONAL PARK

Viewers may be aware of my  service at  the world's bottom most corner SOUTH POLE When I was finally cleared of  to be leader and station commander of indian Antarctic research station Dakshin Gangotri ,I went to my native place SANNANALLUR,Tiruvarur Dt and took a hand full of mother earth from my birth place.On reaching Dakshingangotri  after 24 days non stop voyage down to soth pole (Antarctica)I sprinkled the earth arround the station Dakshin gangotri and prayed for success of my mission.No doubt that my 480  days of work at the world's coldest(-89.6c) ,windiest(350km/hr) and driest place Antarctica was a great success leading to the the award of Vashisht Seva Medal by the President of India on 26 jan 1994.

On Completion of my duty while returning, I had brought  stones weighing approx 1 Ton each.These stones were under 5000 mtr ice cap and were  50 Million years old. They had crossed the confluence point of great south Pacific ocean and great Atlantic ocean with great Southern ocean and moved further along great Indian ocean ,Arabian sea and landed at Goa.From there by road they had travelled to Bangalore.Chennai,Peralam and of course to my native place SannanallurAt all these places a concrete pillar of 10 feet high was errected and the rocks were placed on top naming it as Inspirational Park.

This Inspirational Park will inspire the the visitor who exerts to achieve greater heights in life. These rocks will demonstrate that human capabilities are unlimited and that no external force can stop his progress.

என் இனிய வலைப்பூ உறவுகளே! இச்செய்தியை உங்கள் வலைப்பூக்கள் ஊடாகவும் பகிர்ந்து மதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் பணி சிறக்க உதவுவீர்கள் என நம்புகின்றேன்.