Posted on ஜூலை 14, 2013 in Wordpress Blog that is https://mhcd7.wordpress.com
இணையத் தளமொன்றில் “கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!” என்றொரு பதிவில் “எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம். நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்கச் சந்தர்ப்பம் அதிகம்?” என டாக்டரிடம் கேட்டிருப்பதைக் கண்டேன். அதற்கான பதிலாக அமையும் வண்ணம் ஒரு பதிவைத் தரமுனைகின்றேன்.
முதலில் நான் டாக்டர் இல்லை. இணைய வழியில் உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) வழங்கும் ஒருவர்.
மேலே சுட்டப்பட்ட கேள்வி புதுமணத் தம்பதிகளுக்கு வழிகாட்டும் பதிலைத் தருமாறு கேட்டு நிற்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கு எனது பதில் நன்மை தருமென நம்புகிறேன்.
மணமான கணவன்-மனைவி கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் அறிந்து உடலுறவு வைத்துக்கொள்வதால் விரைவாகக் குழந்தையை எதிர்பார்க்கலாம். கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் என்பது ஆணுக்கல்ல; பெண்ணுக்கே உரித்தாகிறது. ஆகையால், பெண்களே இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
பெண்களின் கருப்பையில் உருவாகும் முட்டையும் ஆண்களால் வெளியேற்றப்படும் உயிரணுவும் இணைவதால்(உடலுறவு வைத்துக்கொள்வதால்) கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
அப்படியாயின், அதற்கேற்ற காலம் எது?
பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஐந்தாறு நாள்களுக்கும் அடுத்து வரவுள்ள மாதவிடாய்(வீட்டுத்தூரம்) நாளிற்கு முன் ஐந்து நாள்களுக்கும் கணவன்-மனைவி உடலுறவை மேற்கொள்ளாது எஞ்சிய நாள்களில் உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்குமெனப் பலர் கூறலாம்.
ஆயினும், பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து பன்னிரண்டாம் நாளின் பின் பதினெட்டாம் நாள் வரை கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. குழந்தையை எதிர்பார்த்து இருப்போர் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
13,14,15,16,17 ஆம் நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதற்காக மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஆறு நாள்களுக்குள் கூடாமல் எஞ்சிய நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது பொய். இதனைக் கருத்திற் கொண்டு குழந்தை பெறுவதைப் பிற்போடுவோர் ஆணுறைகளைப் பாவிக்கலாம்; அல்லது மருத்துவரை அணுகலாம்.
உண்மை என்னவென்றால், மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஆறு நாள்களின் பின்னர் தான் பெண்களின் கருப்பையில் புதிய முட்டைகள் உருவாகும். ஆயினும், அவை பெரும்பாலும் 13,14,15,16,17 ஆம் நாள்களில் தான் கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுகின்றன. சில முட்டைகள் முந்தியோ பிந்தியோ கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுவதால் எதிர்பார்க்காத விதத்தில் ஏனைய நாட்களிலும் கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கிறது.
புதுமணத் தம்பதிகளே! இளம் இணையர்களாயின் ஓராண்டு மேற்படி முயற்சி செய்து பாருங்களேன். முப்பது அகவையைத் தாண்டினால் மேற்படி ஆறு மாத காலம் முயற்சி செய்து பாருங்களேன். மேற்குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாது போனால், உடனடியாக மகப்பேற்று மருத்துவரை நாடவும்.
Translate Tamil to any languages. |
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்
லேபிள்கள்:
1-உளநலக் கேள்வி – பதில்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
manoranjanmano 9:03 முப இல் ஜூலை 15, 2013
பதிலளிநீக்கு(கர்ப்பம் தரிக்க )
அருமையாக சொன்னீர் தோழரே! குழந்தை ஏக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்
11:31 முப இல் ஜூலை 15, 2013
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் 12:03 முப இல் ஜூலை 16, 2013
பதிலளிநீக்குவணக்கம்
அருமையான கருத்தை அனைவருக்கும் தெளிவாக விளங்கும் படி கூறியமைக்கு மிக நன்றி பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் தடவை நேரம் கிடைத்தாள் வாருங்கள் http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
8:42 பிப இல் ஜூலை 16, 2013
நீக்குதங்கள் கருத்தை ஏற்பதோடு தங்கள் அழைப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.