Posted on பிப்ரவரி 21, 2013 by yarlpavanan
ஐக்கிய நாடுகள்
சபையின் அமைப்பு ஒன்றின் மொழிகளுக்கான பிரிவொன்று வரும் முப்பது ஆண்டுகளில்
அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் அடங்குவதாகத் தெரிவித்திருப்பதை சில
இணையத்தளங்களில் படித்தேன்.
உலகில் தமிழ்
அழியுமா? அதற்கான வாய்ப்பு உண்டா? என்றால்; பாரதி கூட “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்றாரே; ஆகையால் தமிழ் அழியும் என்பதா?
வெள்ளைக்காரன், வெளிநாட்டான் என்பார் தமிழைப் படித்து ஆய்வு செய்ய (அடுத்து வரும்
பதிவுகளில் தக்க சான்றுகள் தரப்படும்); நம்மாளுகள் தமிழைப் படித்து (தமிழெனும் கடலை நீந்திக் கடக்க
முடியாது தான்…) தமிழைப் பேண
முன்வராமல் இருந்தால் தமிழ் அழியாமல் என்ன தான் செய்யும்?
தொழில் நேரமான
எட்டு மணி நேரம் செயலக மொழிகளைப் பேசினாலும் எஞ்சிய நேரமாவது தமிழைப் பேணலாமே!
தமிழராகிய நாம் தமிழை வாழ்வில் தொன்னூற்று ஒன்பது விளுக்காடு பழக்கத்தில்
பேணுவோமாயின் உலகில் தமிழ் அழிய வாய்ப்பு இல்லை எனலாம்.
ஒரு இலட்சம்
ஆள்கள் இருந்தால் கூட அவர்கள் பேசும் மொழி அழியாதாம். அப்படியாயின் உலகெங்கும்
பரந்து வாழும் தமிழர் பிறமொழிப் புழக்கத்தை நிறுத்தி விட்டு அல்லது குறைத்துக்
கொண்டு வாழ்நாள் முழுவதும் நம் தமிழைப் பழக்கப்படுத்தினால் உலகில் தமிழை அழியாமல்
பேணலாமே!
Solai.Thiyagarajan சொல்கிறார்: 5:43 பிப இல் செப்ரெம்பர் 9, 2014
பதிலளிநீக்குஅன்பு ஐயா,
எங்கள் மியன்மா நாட்டுத் தமிழர்களை தமிழுலகம் மறந்து புறக்கணித்து விட வேண்டாம் என்பதே அன்பு வேண்டுகோள். வளர்க நம் நட்பும்.
என்றும் தமிழன்புடன்,
சோலை.தியாகராசன்.
Yangon,Myanmar.
+95 943042105
email: solai.thiyagarajan@gmail.com
நீக்கு7:14 பிப இல் செப்ரெம்பர் 9, 2014
தங்கள் வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.