Posted on ஜூலை 31, 2013 by yarlpavanan
நாம் பாவிக்கும் எண்கள் யாவும்
இந்து அராபிய எண்கள் என்று சொல்லப்படுகிறது. உலகெங்கும் இவைதான்
பாவிக்கப்படுகிறது. உலகில் முன்தோன்றிய மூத்த தமிழில் சிறப்பு எழுத்துக்களாலேயே
எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு
மட்டுமன்றி, பத்து, நூறு,
ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.
அவை இவை தான்…
அவை இவை தான்…
0
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
10
|
100
|
1000
|
௦
|
௧
|
௨
|
௩
|
௪
|
௫
|
௬
|
௭
|
௮
|
௯
|
௰
|
௱
|
௲
|
சரி… சரி… இத்தமிழ் எண்கள் கொஞ்சம் எப்படி இருக்கும்
என்று கீழே பாருங்கள்…
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
அட கடவுளே! இப்படி எல்லாம்
எழுத்துக்களாலான தமிழ் எண்கள் இருந்ததை நாம் பார்த்ததில்லையே! நம்ப பள்ளிக்கூடத்தில
One, Two, Three,.. என, உரோம எண்களென, இந்து அராபிய எண்களென சொல்லித்
தந்தாங்க… இதெல்லாம் சொல்லித் தரவில்லையே! நான் நினைக்கிறேன்,
நமக்குப் படிப்பித்த ஆசிரியர்களுக்குக் கூட இத்தமிழ் எண்கள் பற்றிக்
கொஞ்சமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தான்!
என் அப்பப்பா படித்த
நூறாண்டுகளுக்கு முந்திய நூல்களில் இவ்வாறான தமிழ் எண்கள் இருக்கக் கண்டேன். எனது
வகுப்பு ஆசிரியரிடம் கேட்டால், இதெல்லாம் இப்ப
பயன்பாட்டில் இல்லை என்றே சொல்கிறார். இப்ப வெளிவரும் நூல்களில் இவற்றைப் பார்க்க
முடியாது தான்.
எளிதாக ஒரு கேள்வி… முதன் முதலில் உருவான தமிழ் இலக்கண நூலை எழுதியவர் யார்? இந்தக் கேள்விக்கு நாவலர் என்று சிலரும் நன்நூலர் என்று சிலரும்
தொல்காப்பியர் என்று சிலரும் உண்மையில் நான் எழுதவில்லை என்று சிலரும் சொல்வதைப்
பார்க்கலாம்.
உண்மையில் குறுமுனி என்று
சொல்லப்படும் அகத்திய முனிவரால் எழுதப்பட்ட அகத்தியம் என்ற நூலே முதன் முதலில்
உருவான தமிழ் இலக்கண நூலாகும். அகத்தியம், தொல்காப்பியம்
வெளியான காலப்பகுதி நூல்களைப் படிக்க விரும்புவோருக்கு இவ்வெண்கள் உதவலாம்.
உலகெங்கும் தூய தமிழைப் பேணப் பழந்
தமிழ் நூல்களைப் படித்து, தமிழில் இல்லாத பிறமொழிச் சொல்களைக்
களைந்து தூய தமிழ்ச் சொல்களை அடையாளப்படுத்த முயல்வோர் செய்யும் ஆய்வுக்கு பக்க
எண்களைப் பகுத்தறிய உதவுமென இப்பதிவைத் தந்துள்ளேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!