Translate Tamil to any languages.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பாலியல் வலைத்தளங்களால் மணமுறிவு

இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாலியல் வலைத்தளங்கள் நடைபேசி வரை நுழைந்துவிட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், மணமாகாத இளசுகள், மணமாகிக் குடும்பம் நடத்துவோர் என எல்லாப் பிரிவினரும் பாலியல் வலைத்தளங்களைப் பார்வையிட வசதி/வாய்ப்பு அதிகம். மேலும் பாலியல் வலைத்தளங்களைப் பார்வையிட்டமையால் ஏற்படும் உளமாற்றம் மக்களாயப் (சமூகப்) பண்பாட்டை மீறித் தவறு செய்யத் தூண்டும்.

எடுத்துக்காட்டுக்கு ஓர் இணையரின் குடும்பம் முறிவடைய பாலியல் வலைத்தளம் இடமளித்திருக்கிறது. அதாவது பாலியல் வலைத்தளங்களில் வரும் ஒளிஒலிப் (Video) படங்களைப் பார்த்து அவ்வாறே உறவைப் பேணக் கணவன் மனைவிக்குத் தொல்லை கொடுக்க, மனைவியோ அருவெருத்துச் சத்தியெடுத்து உறவும் வேண்டாம் உன்னையும் எனக்கு வேண்டாமென மணமுறிவு (Divorce) வரை சென்றுவிட்டாள். எனவே "பாலியல் வலைத்தளங்களைப் பார்க்காதீர்; மக்களாயப் (சமூகப்) பண்பாட்டை மீறாதீர்" என்று அடிக்கடி நினைவூட்டுங்கள்.

உண்மையில் பாலியல் வலைத்தளங்களில் வரும் ஒளிஒலிப் (Video) படங்களைப் பார்த்துக் குடும்பம் நாடாத்தப் புறப்பட்டால் ஆணுக்குத் தான் அதிகம் கேடு; அதேவேளை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். எனவே, பாலியல் உறவென்பது ஆணும் பெண்ணும் அதிக அன்பின் விளைவாக மேற்கொள்வதாகும். அதனை எவரும் கற்றுக்கொடுக்க முடியாது; கற்றுக்கொடுக்கவும் கூடாது. எனவே மணமுறிவு (Divorce) ஏற்படாது மகிழ்வான குடும்ப உறவுக்கு இணையர்களிடையே அதிக அன்பும் புரிந்துணர்வும் தான் தேவையான மருந்தாகும்.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!