Posted on பிப்ரவரி 21, 2013 by yarlpavanan
இன்றைய ஊடகங்கள்
எல்லாமே தமிழென்ற போர்வையில் தமிங்கிலிஷ் தான் வெளிப்படுத்துகிறது. தமிழ் +
இங்கிலிஷ் = தமிங்கிலிஷ் எனக் கணிதச் சமன்பாட்டை இன்றைய ஊடகங்கள் அறிமுகம்
செய்கின்றன.
இன்றைய ஊடகங்கள்
வணிக நோக்கில் விளம்பர வெளியீடுகளில் நாட்டம் கொள்வதால் தான், தமிங்கிலிஷ் பயன்படுத்தித் தமிழைக் கொல்கின்றனர். எனது இக்கருத்தை
உறுதிப்படுத்தவும் விரிவாக விளக்கவும் தக்க சான்றாக பாவலர் காசிஆனந்தன் எழுதிய “தமிழனா? தமிங்கிலனா?” என்ற நூலைப் படியுங்கள். இந்நூல் எமது மின்நூல் களஞ்சியத்தில்
உள்ளது.
தமிழைக் கொல்லும்
ஊடகங்களின் செயற்பாட்டை முறியடிக்க வாசகர்கள், படைப்பாளிகள், விளம்பரம்
வழங்குனர்கள் ஆகியோரது ஒத்துழைப்புத் தேவை. வாசகர்கள் தமிழைக் கொல்லும் ஊடகங்களை
ஒதுக்கி வைக்கவேண்டும். படைப்பாளிகள் தமிழைக் கொல்லும் ஊடகங்களிற்கு படைப்புகளை
வழங்கக்கூடாது. அதேவேளை படைப்புகளைத் தமிழிலேயே ஆக்கவும் வேண்டும்.
ஊடகங்களின்
வருவாய் விளம்பரம் தான். விளம்பரம் வழங்குனர்கள் தமிழிலேயே விளம்பரங்களை
வழங்கவேண்டும். அதேவேளை தமிழைக் கொல்லும் ஊடகங்களிற்கு விளம்பரங்களை
வழங்கக்கூடாது. விளம்பரம் வழங்குனர்கள் மட்டும் ஒன்றுபட்டால் தூய தமிழைப் பேணும்
ஊடகங்களை உருவாக்கிவிடலாம்.
ஊடகங்கள்
நினைத்துக் கொண்டால் பிறமொழிக் கலப்பற்ற தூய தமிழைப் பேண முன்வரலாம். மொழியைப்
பேணுவதும் நாட்டை வளம்படுத்த உதவுதம் தான் ஊடகங்களின் செயற்பாடாக இருக்கவேண்டும்.
தூய தமிழைப் பேண
ஒத்துழைப்புத் தரும் ஊடகங்களிற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்போமானால், தமிழைக் கொல்லும் ஊடகங்களைச் செயலிழக்கவைக்க எம்மால் முடியுமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!